சிந்தனைக் களம் 17 – Bamini Rajeswaramudaliyar

Share

பயம் மனிதர்களை முன்னேற விடுவதில்லை அதுவே முயற்சிக்கு தடைக்கல்லாகும்.

முயற்சி இன்றி நல்ல பாதைக்கான கதவுகள் திறப்பதில்லை.

புதிய கதவுகள் திறக்காத போது, ஆக்கத்திற்கான எண்ணங்கள் வந்து வந்து மழுங்கிப் போக, பழைய சிந்தனையுடனான வாழ்க்கை சாக்கடைபோல் மாறத் தொடங்கும்.

அங்கேதான் மனநோய்கள் போட்டி பொறாமைகள் ஆரம்பமாகிறது.

அவைகள் உடல் உபாதைகளை தர ஆரம்பிக்கும்.

அதுவே அவர்களை நோயாளராக்கும்.

துரோகமான செயல்களை தனக்குத்தான் அல்லது பிறருக்கு செய்யவே அஞ்ச வேண்டுமே தவிர தனக்கு முன்னேற்றம் தரும் விடையங்களை செய்ய எதற்கு பயப்பட வேண்டும்.

சிந்தியுங்கள்!

அனேகமாக தன்னைப் பற்றிய புரிதல் இன்மையே அனைத்துப் பயங்களுக்கும் காரணம்.

தன்னைத்தான் புரிதலின் அவசியம் இதுதான்.

மற்றவர்களின் தன்நம்பிக்கையை சிதைக்கும் கதைகளுக்கும் எடுபடமாட்டீர்கள்.

துணிவும், தன்நம்பிக்கையும், விடாமுயற்சியும் உங்கள் முன்னேற்றத்திற்கான அத்திவாரமாகும்.

அதனை உங்களுக்காக நீங்கள் கட்டியெழுப்புவது உங்கள் மாபெரும் கடமையாகும்.

அத்துடன் இளம் சமுதாயத்திற்கு உதாரணமாக வாழ்வீர்கள். அதுவே அறிவுரைகளை விட சிறந்த வழியாகும். சிந்தியுங்கள்!

இவைகள் எனது அனுபவங்களினால் கற்றவைகளே அன்றி வெறும் அறிவுரைகள் அல்ல. சிந்தியுங்கள்!
நன்றி!

சிந்தனைக் களம் 18 – Bamini Rajeswaramudaliyar

Leave A Reply