சிந்தனைக் களம் 18 – Bamini Rajeswaramudaliyar

Share

மனிதராக பிறந்தவர்கள் தவறு விடுவது இயற்கை. அதனை உணராமல் தாம் தவறு செய்துவிட்டோம் என தம்மைத்தாம் தண்டிப்பவர்கள் மனநோயாளர்களாக மாறுகிறார்கள்.

அடுத்தவரின் வாழ்வை கெடுப்பது போல் அநியாயங்களை செய்வது தவறு.

பதுமை வயது முதல் தமது உணர்வின் உந்தலால் செய்யும் செய்கைகளை சாத்தான் என்றும் கேவலம் என்றும் குற்றமனப்பான்மையை உருவாக்கி, தம்மைத்தாம் தவறாக எண்ண வைப்பது மனநோய்களை உருவாக்குவதற்கான முதல் காரணமாகும்.

பெற்றோர்களானதும் பலர் தமது இளமைக்காலத்தை மறந்துவிடுகிறார்கள் என ஒரு சகோதரியின் ஆக்கத்தில் படித்தேன். உண்மைதான்!

பெற்றோர்களே, உறவுகளே, நட்புகளே!

உங்கள் இளமைக்காலத்தின் ஆசைகள் கனவுகள் விமர்சிக்கப்பட்டு நசுக்கப்பட்டபோது வந்த பயம், வெட்கம், கவலை, கோபம், அவமானம் என்பவற்றை மற்றவர்களுக்கு கொடுக்க முயலாதீர்கள்.

அது பாவம்.

சமுதாயத்தின் ஆணிவேரான இளையவர்களுக்கு, நீங்கள் கற்பித்துக் கொடுக்க வேண்டியதெல்லாம் சுயமரியாதை, தன்நம்பிக்கை, பண்பு, நல்ல பழக்கவளக்கங்களைத்தான். இவைகள் தான் அவர்களுக்கு துணிச்சலைக் கொடுத்து சரியான பாதையில் நடக்க வைக்கும்.

விமர்சனங்களும் திட்டும் பேச்சும் தவறான இடத்திற்கு தள்ளிவிடும்.
சிந்திக்கவும்!
நன்றி!

சிந்தனைக் களம் 19 – Bamini Rajeswaramudaliyar

Leave A Reply