சிந்தனைக் களம் – 23 – Bamini Rajeswaramudaliyar

Share

இறந்தகால பாதிப்பு என்பது இதயத்தில் ஒளிந்து,கலன்களில் பதிந்து காளானைப் போல் மறைந்திருக்கும்.

நிகழ்கால சில நிகழ்வுகள் பூமி அதிர்வுபோல் அல்லது இடி மழை முழக்கம் போன்ற யாரோ ஒருவருடைய செயலால், சத்தத்தால், மணத்தால், உணர்வுகள் விழிக்கப்பட்டு, பல வருடங்கள் பின்னோக்கிச் சென்று , அநாதரவாக (helplessness) பயந்து, உணர்வால் தனித்து வருந்திய இடத்திற்கு அழைத்துச் சென்றுவிடும்.

அதனால்தான் சிலர்,

சிறிய விடையங்களுக்கும் பதட்டப்பட்டு அழுது, சண்டை போட்டு defensive ஆக போய்விடுகிறார்கள் அல்லது பயந்து நடுங்கிவிடுகிறார்கள் (இங்கு நான் நடிப்பவர்களைப் பற்றி பேசவில்லை)

இறந்தகாலம் முடிந்துவிட்ட ஒன்றாக இருந்தாலும் கூட, மனம் விட்டுப் பேசி அந்த உணர்வை சமநிலைப் படுத்தாதவரைக்கும் சந்தர்ப்பம் சூழ்நிலை அதனை கிளறி விட்டு வேடிக்கை பார்க்கும்.

இதற்கு counselling, therapies, தியானம், நேர்மறை சிந்தனை, எம்மிடம் நாம் பேசி ஆறுதல் கூறுதல், (உதாரணமாக இப்போது சூழ்நிலை மாறிவிட்டது, நான் அதே நபர் இல்லை, எனக்கு என்னிடம் சக்தி (power) உண்டு, I am my own person போன்றவை) போன்றவற்றால் காலப்போக்கில் நான் இலகுவில் பாதிக்கப்படக்கூடிய மனிதன் (vulnerable person) என்ற மனநிலை மாறி தன்நம்பிக்கை அதிகரிக்கும்.

ஆனாலும் பிரபஞ்சம் சந்தர்ப்பங்களில் மனிதர்களை பயன்படுத்தி எமது பலயீனங்களை சுட்டிக்காட்டும்.

அதனை நாம் புரிந்து கொண்டு எம்மை வலுப்படுத்திக் கொண்டு செல்ல , திடமான, சமநிலையுள்ள மனிதராக மாறலாம்.

(எனக்கு ஏன் இப்படி செய்தார்கள் என்ற எண்ணம் எட்டிப்பார்க்கும். அதனைத் தவிர்த்து உங்கள் பாடத்தை நீங்கள் கற்க முயலுங்கள். அதுவே மனத்திருப்தியுடன் வாழும் வழியாகும்)

இவை இலகுவானவை இல்லை ஆனாலும் முயற்சி பயனைத் தரும்.

இதுவே எனது அனுபவம்.

இப்போதும் பிரபஞ்சம் எனது பலயீனங்களை எனக்கு சுட்டிக்காட்டும் போது உணர்ந்து , என் மனதை வலுப்படுத்த தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டே இருக்கிறேன்.

முயற்சியை நிறுத்தும் போது மட்டுமே தோல்வியை தழுவுகிறோம்.

சிந்திக்கவும்!
நன்றி

சிந்தனைக் களம் – 24 – Bamini Rajeswaramudaliyar

Leave A Reply