சிந்தனைக் களம் – 24 – Bamini Rajeswaramudaliyar

Share

வாழ்க்கையில் முன்னேறுவதற்கு துணிவும் விடாமுயற்சியும் வேண்டும்.

-கஷ்டங்களை கண்டு பின்வாங்காத தன்மை வேண்டும்.

-நான் என்ற ஆணவத்தை கைவிட வேண்டும் (முயற்சி பலன் தரும்)

– மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

(அதுவே மன உளைச்சல்களுக்கும் குறைகள் பேசுவதற்கும் வழி வகுக்கிறது)

-யாரிடம் பழகினாலும் வரையறை வேண்டும். (அதுவே அன்பை நீடித்து உறவை வலுப்படுத்தும்)

-அன்பென தினமும் யாரிடமும் தொலைபேசியில் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

(தினமும் பேசும் போது பேசுவதற்கு கதைகளின்றி அடுத்தவரைப்பற்றி பேசி, அவசியமற்ற பேச்சுக்களை பேசி பிரச்சனை உருவாக்கப்படுகிறது)

சிந்தித்தால் உண்மை புரியும்.

-அன்பென உங்கள் வீட்டுக் கதைகள் அனைத்தையும் அடுத்தவருக்கு கூறுவதும், அடுத்தவர் உங்களுக்கு கூற வேண்டும் என எதிர்பார்ப்பதையும் தவிருங்கள். நிம்மதி உருவாகும்.

இப்படி வாழும் போது, உங்கள் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மகிழ்வுடன் செயல்படுத்தலாம்.

உங்களை நீங்கள் மதித்தால்தான்(ஆணவம் அல்ல)

உலகம் உங்களை மதிக்கும்.

மற்றவர்கள் மதிக்க வேண்டும் என ஆடம்பரமாக வாழ முயன்றால் தோல்விகளும் நஷ்டங்களுமே உருவாகும்.

சிந்திக்கவும்!
நன்றி

சிந்தனைக் களம் – 25 – Bamini Rajeswaramudaliyar

Leave A Reply