சிந்தனைக் களம் – 28 – Bamini Rajeswaramudaliyar

Share

உள்பெட்டியில் வருபவர்களை block பண்ணுவது இலகு. Block பண்ணுகிறேன். அத்துடன் எமது பிரச்சனை தீர்ந்து விடுமா?

சிந்திக்க வேண்டும்

இவர்களை உணர வைப்பது யார்?

அது சமுதாயத்தின் கடமை அல்லவா!

குப்பைகளை கூட்டி மூலையில் தள்ளி விட்டால் வீடு சுத்தமாகி விட்டது என்று அர்த்தமல்ல.

அதனைப் போலவே இவர்களது செய்கைகளை மறைத்து விட்டால் அவர்கள்/ அவர்களைப் போன்றவர்கள் உணர வைப்பது எப்படி?

இப்படியானவர்களால் உருவாகும் சமுதாயம் எப்படியானதாக இருக்கும்.

சிந்தித்ததுண்டா?

சிலர் அறியாமல் தவறுகளை செய்கிறார்கள்.

அவர்கள் திருந்தக் கூடும்.

பெற்றோர்கள் மகன்களை சிறு வயதில் இருந்து வழிநடத்தக் கூடும்.

பண்பை நல்ல மதமாக கடைப்பிடிக்கக் கூடும்.

இதனை படிப்பவர்கள் தமது கடமைகளை உணரக் கூடும்.
சிந்திக்கலாமே!

நான் நான் என்ற சுயநலம், சமுதாயத்தை குப்பை மேடாக்கிவிடும்.

நாம் , எமது பண்பாடு, நம்மக்கள் என சிந்திக்கத் தொடங்கினால் எமது சமுதாயம் முன்னேறும்.

உங்கள் நல்ல சிந்தனைகள் தீயை போல் பரவட்டும்.

நற்பண்புகளும் சமுதாயப் பொறுப்புணர்வும் வளரட்டும்.

சிந்தியுங்கள், செயல்படுங்கள்.

நன்றி

சிந்தனைக் களம் – 29 – Bamini Rajeswaramudaliyar

Leave A Reply