சிந்தனைக் களம் – 30 – Bamini Rajeswaramudaliyar

Share

காதல் இல்லாமலும் புரிந்துணர்வுடன் வாழப் பழகிக் கொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைகிறார்கள்.

கனவில் மிதப்பவர்கள் வாழ்வில் தோல்வியடைகிறார்கள்.

பல ஆண்களுக்கும் சில பெண்களுக்கும் திருமணம் என்பது ஒரு contract ஆக இருக்கும் பட்சத்தில் உடல் தேவைகளை தீர்த்துக்கொண்டு பரம்பரை வளர்க்கும் ஒப்பந்தமாகவே திருமணம் அமைகிறது.

இதுதானே அனேகமானவர்களின் வாழ்க்கையாகிறது.

சிந்தித்தால் உண்மை புரியும்.

காதல் என்பது பலருக்கு கனவுதான்.

காதல் தரும் உணர்வை காதலிப்பவர்கள் அந்த காதலுக்குரியவரின் நிறைகுறைகளை ஏற்று காதலித்து விட்டு, அவர் மாறுவார் என நம்பி திருமணம் செய்த பின் ஏமாற்றத்தை உணர்கிறார்கள்.

கனவு காண்பதை தவிர்த்து உண்மையை காணப் பழகுங்கள்.

பெற்றோருக்கு பயந்து ஒளித்து காதலிக்கும் போது இருந்த சுவை திருமணமானதன் பின்பு இல்லாத போது பிரிவுகள் உருவாகிறது.

அதனால் காதலிக்கும் போது அல்லது திருமண பந்தத்தில் காலடி எடுத்து வைத்த பின்பு கணவர்/மனைவியுடன் நட்பை வளருங்கள்.

இருவருக்கும் பிடித்தமான பொழுது போக்குக்களை உருவாக்குங்கள்.

மனம் விட்டு பேசும் நம்பிக்கையை பழக்கப்படுத்துங்கள்.

நாளை பிள்ளைகள் வளர்ந்து வீட்டை விட்டு போனபின்பு, பிரச்சனைகள் இன்றி மனதார காதலிக்க பக்கத் துணை இருக்கும்.

முதுமையில் மறுபாதியுடன் வரும் காதல் அழகானது. ஆழமானது.

அதனால் ஆயிரங்காலத்து பயிரான வாழ்வை இன்றே அன்பு, அக்கறை, மரியாதை என்ற பசளையிட்டு நீறூற்றி பாதுகாத்து வளருங்கள்.

உங்கள் பிள்ளைகளுக்கும் உதாரணமாக வாழுங்கள்.

அதனால் சிந்தித்து செயல்படுங்கள்.

நன்றி

சிந்தனைக் களம் – 31 – Bamini Rajeswaramudaliyar

Leave A Reply