சிந்தனைக் களம் – 31 – Bamini Rajeswaramudaliyar

Share

கசப்பான மனிதர்களால் உருவாக்கப்பட்ட சில குடும்பங்களின் reputation இளையவர்களின் வாழ்வை கெடுத்து விடுகிறது.

அது ஒருபுறம் இருக்க உண்மைகளை ஆராய்ந்து புரிய விரும்பாமல் சேர்ந்து பேசும் உறவும் நட்பும் அவசியம்தானா என சிந்திக்க வேண்டுகிறேன்.

வலிகள் வேண்டாமே!

வலிகளை தரும் உறவுகள் நட்புகளும் வேண்டாம்.

சிந்திக்கவும்!

வயிறு எரிந்து பேசுபவர் வார்த்தைகள் மிகவும் அசிங்கமானது.

அவர்களின் வார்த்தைகள் மற்றவர்களை பற்றி கூறவில்லை, தம்மைப் பற்றியே கூறுகிறது என்பதை நினைவில் நிறுத்தி கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள்.

இவர்களுடன் சேர்ந்து பேசாதீர்கள்.

நாளை உங்களைப் பற்றி இவர்கள் பேசுவார்கள் என்பதை மறக்காதீர்கள்.

தீயமனிதர்கள் திருந்துவதில்லை. அவர்களின் கடவுள் பக்தியும் விரதங்களும் அவர்களின் கவசமே அன்று உண்மையானதல்ல.

வயது போகும் போது உணருவார் என்பது உண்மையல்ல.

விஷம் கூடிய பாம்பைப் போலவே இவர்கள் இருப்பார்கள்.

வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்று வயோதிபத்திலும் வார்த்தைகளாய் வாந்தி எடுக்கும் ஒரு பெண்மணியை பற்றி அறிந்ததன் விளைவே இந்தப் பதிவு.

“நுணலும் தன் வாயால் கெடும்” அதுபோல் தான் இப்பெண் இவர்களின் தவறான உண்மையற்ற பேச்சுக்களை கேள்விப்பட்ட சம்மந்தப்பட்டவர்கள் உண்மைகளை உரைக்க முயலும் போது வதந்தி பரப்புவர்களின் இறந்தகாலக் கதைகளுடன் அவருடன் சேர்ந்து நின்று பேசுபவர்களின் கதைகளும் வெளியே வருகிறது.

பன்றியுடன் சேர்ந்த கன்றும் போல தீயவர்களின் சவகாசம் இவர்களின் வாழ்க்கையில் துர்நாற்றம் வீச வைக்கிறது.

சிந்திக்கவும்!

யாருடன் சேருகிறீர்கள், அவர்களின் கதைகளை நம்புவதனால் உங்கள் செய்கைகளின் மாற்றங்கள், அதன் விளைவுகளைப் பற்றி சிந்தியுங்கள்.

கூறுவதெல்லாம் நன்மைக்கே, அல்லது அனுபவத்தால் கற்க உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

சிந்திக்கவும்

பூனைக்கு மணி கட்டுவது யார் என்பது பலருடைய கேள்வி!
இதோ!!!!

நன்றி

Leave A Reply