அனுபவங்கள் மென்மையான மனிதர்களை கடுமையானவர்களாக மாற்றி விடுகிறது.
இது உணர்தலால் உருவாகும் நிலையே அன்றி மனம் மரத்துப் போவதால் அல்ல.
மனம் மரத்தால் மன/உடல் நோயை உண்டாக்கி விடும்.
கவனம்.
நான் மட்டும் என்ன அழவா பிறந்தேன் என்று உணர்ந்து விழித்து விட்டால்,
தன்னைத்தான் திருத்திக் கொண்டால்,
தவறான மனிதர்களை விட்டு விலகினால்,
தனக்கு சம்மந்தமில்லாத விடையங்களில் தலையிடாமல் விலகி நின்றால்,
ஒருவரின் கதையை ஒருவருக்கு கூறாமல் இருந்தால்
மனம் நொந்து கண்ணீர் வடிக்க காரணங்கள் இல்லாமல் போய் விடும்.
‘சோகத்தை இரசிப்பது எமது சமுதாயத்தின் சாபம்”
அதனால்தான் சோகப் படங்களையும் நாடகங்களையும் விரும்பிப் பார்த்து அழுகிறார்கள்.
அந்தக் கண்ணீர் ஒரு therapy யாக இருந்தால் நன்மைதான்.
ஆனால் தொடர்ந்து பிரச்சனைகளை நாடகங்களில் , சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகளில் பார்க்கும் போது சோகம் உங்களை கவ்விக் கொள்ளும்.
‘நான் பார்த்ததும் மறந்து விடுவேன் என்பது உண்மையல்ல.
அது ஆழ்மனதில் அறியாமல் பதிந்து விடுகிறது என்பதே உண்மை’
சிந்திக்கவும்.
அதனால் உணர்தலை பயிற்சி செய்து, உங்கள் சக்தியை மேன்மை படுத்துங்கள்.
சோகத்தை இரசிப்பதை தவிருங்கள்.
மன மகிழ்ச்சி(joy) தரும் காரியங்களை செய்ய முயற்சி/பயிற்சி செய்யுங்கள்.
அதனால் சிந்தித்து செயல்படுங்கள்.
‘நிம்மதியான வாழ்க்கை பெரும் செல்வம்’
நன்றி