சரியில்லை சரியில்லை என சமாளிப்பதில் எத்தனை பேரின் வாழ்க்கை வீணாகிறது.
அதிருப்தி உருவாகிறது.
உண்மையான மனநிலையை மனம் விட்டுப் பேசப் பயந்து சமாளிப்பதனால் எத்தனை சண்டைகள் உருவாகிறது.
எதனையோ மனதில் வைத்து, வேறு எதனையோ பேசி எத்தனை மனங்கள் பிரிகிறது.
முதுகுக்குப் பின் பேசும் பழக்கம் உருவாகிறது.
கதைகள் சுத்தி வளைத்து உரியவரின் காதுக்கு வந்து சேர்ந்ததும், ஏன், எதற்கு, எதனால் என பேசி தீர்க்காமல், புதுவிதமான உத்வேகத்துடன் பிரச்சனைகள் அதிகரிக்கிறது.
இத்தனைக்கும் காரணம் மனம் விட்டு பேசப் பயப்படுவதும், மற்றவர்கள் காதை/மனதை திறந்து கேட்பார்களா என்ற சந்தேகமும் ஆகும்.
எம் இலங்கை மக்கள் பலர் “சரியில்லைத்தானே” என்ற சொற்பதத்துடன் வாழ்வினை சிக்கலாக்கிக் கொள்கிறார்கள்.
சிந்திக்கலாமே!
அன்புள்ளங்களே!
எப்படி மனிதர்கள் தமது வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்கிறார்கள் என அவதானிக்கிறேன்.
நிம்மதியை தொலைத்து அன்பென தம்மை வருத்தி, பின்பு குறைகளை பேசி வருந்துவதை விட, நேர்மையான உணர்வுடன் வாழப் பழகுங்கள்.
நிம்மதியாக வாழ்வதில் உள்ள திருப்தி, நாலு பேர் வேண்டுமென ஆட்களை சேர்த்து பிரச்சனைப்பட்டு வாழ்வதில் வருவதில்லை.
பலர் தாம் தம்முடன் தமது நேரத்தை செலவிட அஞ்சுகிறார்கள்.
நீங்கள் அவ்வளவு மோசமான பேர்வழியா உங்கள் company ஐ நீங்கள் விரும்ப முடியாமல் தவிப்பதற்கு சிந்தியுங்கள்!
“உங்கள் உள்ளத்தில் குறைகள் இருந்தால், எந்த உறவிலும் நிறைவு காண முடியாது.
அதனால் உள்ளத்தின் வெற்றிடத்தை நிறைக்க ஓடித்திரிந்து பிரச்சனைகளை விலைக்கு வாங்கமல் நிம்மதியாக வாழ பயிற்சி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை வளம் பெறும்.
சிந்தியுங்கள்!
நன்றி