சிந்தனைக் களம் – 36 – Bamini Rajeswaramudaliyar

Share

-நற் சிந்தனையின் வெளிப்பாடு வாழ்க்கையில் மாற்றங்களை உருவாக்கவேண்டும்.

அதற்கு முயற்சி அவசியம்.

-உணர்தலின் பிரதிபலிப்பு செய்கையாக வெளிப்பட வேண்டும்.

அதற்கு முன்னேற வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் ஊற்றெடுக்க வேண்டும்.

-செய்கையின் வெளிப்பாடும் உணர்வும் சங்கமித்தால்தான் மட்டும்தான் சரியான பலன் கிடைக்கும். அதற்கு தன் உணர்வுகளை அடையளம் காணப் பழகுவது அவசியம் சிந்திக்கவும்.

இவைகள்தான் மனிதனின் நல் வாழ்விற்காக போடப்படும் அத்திவாரத்தின் மூலக்கல்லாகும்.

சிந்திக்கவும்!

நம்மில் பலர் comfort zone இல் புதிய முயற்சிகள் இன்றி பாதுகாப்பாக வாழ விரும்புவதால், மனதிற்கு திருப்தி தரும் முன்னேற்றங்கள் இன்றி நிம்மதியை இழக்கிறார்கள்.

முன்னேற்றம் என்பது கல்வி, பணம், பதவி, சொந்த வீடு என பற்பல அடுத்தவரின் கண்ணுக்கு புலப்படும் ஒன்றாக மட்டும் காண்பது தவறு.

அது வெளி உலக பெருமையை மட்டும் தேடுத் தரும். அடுத்தவரின் புகழ்ச்சியால் எமக்கு என்ன நன்மை வரப் போகிறது?

வீணான தலைக்கனங்களே உருவாகும்.

இந்த எதிர்மறை உணர்வு பாதிப்பை மட்டுமே உருவாக்கும்.

சிந்திக்கவும்!

முன்னேற்றம் என்பது உள்ளத்தில் உருவாகும் தன்னைத்தான் அறிதல் என்ற தீச் சுவாலையாக மாறும் போது, அதன்பின் கிடைப்பவை வெகுமதியான பொக்கிஷங்களாகவே தோன்றும்.

மேலே குறிப்பிட்டவை அதற்குரிய மூலக் கல்லாகும்.

சிந்திக்கவும்!
நன்றி

சிந்தனைக் களம் – 37 – Bamini Rajeswaramudaliyar

Leave A Reply