பிரச்சனைகள் என்பது எனக்கு மிகவும் அழகாக pack செய்யப்பட்ட பரிசை போன்றது.
அதனை பிரித்துப் பார்க்கும் போது, பிரபஞ்சம்/ இறைவன் என்னை முன்னேற்றுவதற்காக அனுப்பிய கல்வி/பயிற்சி/ செய்முறை அறிவை பயில்கிறேன்.
ஆரம்பத்தில் சிறிய கலக்கம் வந்தாலும் உடனே மனம் தெளிவு பெற்று கற்க ஆரம்பிக்கிறது.
ஒவ்வொரு பிரச்சனையும் எமக்கு ஏன் வந்தது என நினைப்பதை விட, இந்தப் பிரச்சனை எதனை கற்பிக்கப் போகிறது என்று பார்த்து கற்க வேண்டும்.
ஒவ்வொரு பிரச்சனையும் யாரால், எதனால் உருவானது என்பதை அறிய வேண்டும்.
அடுத்தவரை குறை கூற முன்பு எமது பங்கு என்ன எவ்வளவு என்பதை பார்க்க வேண்டும்.
அடுத்தவரை குறை கூறுவதால் நாம் கற்பது எதுவுமல்ல.
நாம் பலயீனமானவர்களாகவும், எமது அபிப்பிராயத்தை திடமான ஆனால் அழகாக கூறத் தெரியாதவர்களாகவும் இருக்கும் போது , பலயீனமான மனிதர்கள் பலசாலிகளாக உணர்ந்து bully/ abuse செய்ய முயல்வார்கள்.
நாம் மனப் பலமுள்ளவர்களாக இருக்கும் பட்சத்தில் பல்லி, பூரான் போன்ற பிறவிகள் எம்மை அரிக்காமல் விலகியே செல்வார்கள்.
அதனால் ஒவ்வொரு பிரச்சனையும் சிக்கலும் உங்களை பலப்படுத்த வேண்டுமே அன்றி பலயீனம்படுத்தவே அல்லது சுய இரக்கத்தால் அமிழ்ந்து போக இடம் கொடுக்கக் கூடாது.
நான் பயிற்சி செய்து கொண்டிருப்பதை உங்களுடன் பகிர்கிறேன்.
இந்தப் பயிற்சிக்கு முடிவில்லை, மரணம் வரை கற்போம்.
சிந்திக்கவும்
நன்றி