தனித்துவமான சிந்தனை அவசியம். அல்லது தவறுகள் ஆதரிக்கப்பட்டு வளர்க்கப்படும்.
போரினால் இறந்தவர்கள் தினம் இன்று.
அதே ஆழுமை கொண்ட மனிதர்களால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களின் மனநிலையை எண்ணிப் பார்க்கிறேன் (படுகொலை செய்யப்பட்ட சகோதர டெலோவும், தண்டனை என சந்தேகத்தின் பெயரில் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள், சொந்தப்பிரச்சனைக்கு இயக்கத்தின் ஆதரவை பயன்படுத்தி கொலை செய்யப்பட்டவர்கள் இப்படி பலபல..)
போரினால் பெற்றோர்கள் பிள்ளைகளை இழந்தவர்கள்.
மனைவிகள் கணவரை இழந்தார்கள்.
பொது மக்கள் பல்லாயிரம் பேர் உயிரை இழந்தார்கள்.
இதில் மாவீரர்கள் மட்டும் வாழ்த்தப்படுகிறார்கள்.
வறுமையில் வாழும் பல போராளிகள் மறக்கப்பட்டு விட்டார்கள்.
போரை தேர்வு செய்தவர்கள் போரினால் அழிந்தார்கள்.
மற்றவர்கள் என்ன பாவம் செய்தார்கள்.
அவர்கள் நிலக் கண்ணிகளை வைத்து விட்டு ஓடி விட, ரோட்டில் வந்த அப்பாவித் தமிழர்கள் எத்தனை பேர் ஆமியினால் பிடிக்கப்பட்டு சித்திரைவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள்.
அப்படி இருக்க ஏன் அநியாயமாக இறந்தவர்கள் நினைவுகூறப் படவில்லை.
ஏன் உயிருடன் தப்பி அங்கயீனத்துடன் வறுமையில் வாழ்பவர்கள் கௌறவிக்கப்படவில்லை.
அவர்களின் வறுமை ஏன் போக்கப்படவில்லை???
வாழ்த்துக் கூற பல்லாயிரம் பேர்!
நியாயத்தை தட்டிக் கேட்பது யார் ?
சிந்திக்கலாமே!
உண்மை கசக்கும்.
கோபத்தை உருவாக்கும்.
அதற்காக உண்மைகள் பொய்யாகிவிடாது.
இது அரசியல் பதிவு அல்ல.
மனிதாபிமானத்துடன் பேசுகிறேன்.
சிந்தியுங்கள்!
நன்றி