சிந்தனைக் களம் – 39 – Bamini Rajeswaramudaliyar

Share

நீங்கள் படும் கஷ்டங்கள் உங்களை பலப்படுத்த வேண்டும்.

நீங்கள் பலப்படவில்லையானால்,

சுய இரக்கத்தில் ஆழ்ந்து விட்டீர்கள் என்பதை உணர்ந்து உங்களை திருத்திக் கொள்ளுங்கள்.

பட்ட கஷ்டங்கள் பலனைத் தர வேண்டும். அனுபவக் கல்வியாக எடுத்து முன்னேறினால், முள்ளாக குத்திய கஷ்டங்கள், மலர் பஞ்சனைபோல் ஆகிவிடும்.

உங்கள் பலயீனமே, பலயீனமானவர்களின் பலம். அங்கேதான் abuse உம் bullies உம் ஆரம்பமாகிறது.

தன்மானமும் மனப்பலம் உள்ள மனிதர்கள் அடுத்தவரை நோக வைக்க முயல்வதில்லை.

சிந்திக்கவும்!

உங்களை நீங்கள் வலுப்படுத்திக் கொள்வதே உங்களை நீங்கள் பாதுகாக்க சிறந்த வழியாகும்.

சிந்திக்கவும்!

எது நடந்தாலும் நன்மைக்கே என்ற நம்பிக்கை, பல பிரச்சனைகளை இலகுவானதாக்கி, மன அழுத்தம் இன்றி வாழ்க்கையில் முன்னேற வழி வகுக்கும்.

-முதுகில் குத்தப்பட்டால் முன்னோக்கி வேகமாக நடவுங்கள்.

-கற்கள் வீசப்பட்டால், அதனை எடுத்து நல்ல திடமானஅத்திவாரமாக அமைத்து கட்டிடமாக மாற்றுங்கள்.

-அழகற்ற சொற்கள் உங்களை நோக்கி எறியப்பட்டால், அவர்கள் எப்படியானவர்கள் என்பதை புரிந்து கொண்டு நகர்ந்து செல்லுங்கள்.

-கண்ணீர் மடைதிறந்தால் மனப்பாரத்தை இறக்கி வைக்க பயன்படுத்துங்கள். அழுதபடி அமர்ந்துவிடாதீர்கள்.

-துயரம் தந்தவர்களைப் பற்றி சிந்தித்து, அவர்களை உங்கள் இயத உணர்வில் சுமக்காதீர்கள்.

ஏன் அவசியமற்ற பாரத்தை சுமக்க வேண்டும்.

அவர்கள் உங்கள் இதயத்தில் உட்காரும் அளவுக்கு முக்கியமானவர்களா?

சிந்திக்கவும்!

மீண்டும் கூறுகிறேன்.

“எது நடந்தாலும் நன்மைக்கே”

சிந்தியுங்கள்!

அனுபவம் பேசுகிறது.

நன்றி

சிந்தனைக் களம் – 40 – Bamini Rajeswaramudaliyar

Leave A Reply