சிந்தனைக் களம் – 41 – Bamini Rajeswaramudaliyar

Share

பேதங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை இன்மையால் பிரிவுகள் உருவாகிறது.

தமக்காக மற்றவர்கள் மாறவேண்டும் என எதிர்பார்ப்பவர்கள், மற்றவர்களுக்காக தாங்கள் மாறுவார்களா?

அப்படி மாறினால், சுயம் அல்லவா தொலைந்து போகும்.

அப்படியானால் பலர், உண்மையான மனிதர்களை விரும்பாமல்,
தமக்காக மாறும்படி வற்புறுத்தி, நடிகர்களாக அவர்களை மாற்றி பொய்யில் வாழ முனைகிறார்கள்.

அப்படித்தானே!

மாற்றம் என்பது அவ்வளவு இலகுவானதா?

உங்களால் முடியாததை, அடுத்தவரை செய்யும்படி வற்புறுத்த எப்படி முடிகிறது.

மனச்சாட்சியுடன் சிந்தியுங்கள்,
உண்மை புரியும்.

சிலர் தமது நன்மைக்காக தாமாக மாறுவது நன்மை தருவாதாக இருக்கும்.

மற்றவருக்காக மாறுபவரின் மாற்றம் தற்காலிகம்தான்.

பொய்/நடிப்பு என்பன நல்ல பலனை தருவதில்லை.

தனக்காக மற்றவர் மாற வேண்டும் என நினைப்பதும், மாற்ற நினைப்பதும் சுயநலமே அன்றி அன்பு அல்ல.

சிந்திக்கலாமே!
சிந்திக்கவும்!
நன்றி

சிந்தனைக் களம் – 42 – Bamini Rajeswaramudaliyar

Leave A Reply