சிந்தனைக் களம் – 42 – Bamini Rajeswaramudaliyar

Share

குற்றமனப்பான்மையும் மனநோய்களும்.

குற்றமனப்பான்மை(guilty feeling) என்பது எம்மை நாம் வருத்தும் உணர்வு.

தன்னைத்தான் தவறாக நினைக்க வைக்கும் கொடுமை.

தவறு செய்யாத மனிதர்கள் இவ்வுலகில் இல்லை.

அப்படி இருக்க உங்கள் இளமைக் காலத்து செய்கைகளையும், தவறு என கலாச்சாரம்/சமுதாயம் கூறுவதை நினைத்து, உங்களை நீங்கள் வருத்துவது நல்லதல்ல.

அவைகள் வாழ்க்கையை செம்மைப்படுத்தும் அனுபவங்கள்தான் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

அந்த நினைவுடன் மற்றவர்களுடன் கருணையுடன் நடந்து கொள்ளுங்கள்.

அனுபவங்களை பெற விடாமல், அன்புடன் பேசி புரியவைக்காமல் வளர்க்கப்படும் பிள்ளைகள் எதிர்காலத்தில் வாழ்க்கை என்றால் என்ன என்ற உண்மைகளை புரியாமல், கனவுலகில் வாழ்ந்து ஏமாற்றமடைந்து கஷ்டப்படுகிறர்கள்.

அத்துடன் பெற்றோர்களும் உதாரணமாக வாழ வேண்டும்.

பிள்ளைகள் நீங்கள் கூறுவதை கேட்பதில்லை, தாங்கள் காண்பதையே செய்கிறார்கள். இது கண்கூடாக காணும் உண்மை.

வெளி உலகறிவு/street wise உடன் பிள்ளைகள் வளர்க்கப்பட வேண்டும்.

கலாச்சாரத்துன் பெயரால் பிள்ளைகளை அவமானப்படுத்துவதையும், குற்றமனப்பான்மை உருவாக்குவதையும் தவிர்க்க வேண்டும்.

இவைகளே மன உடல் நோய்களை உருவாக்கும் தூண்டுகோலாகும்.

மேலும் தன் மீது மரியாதையான சிந்தனை அற்றவர்கள், எவ் வயதினரானாலும், எந்தப் பாலானாலும் தன்னைத்தான் நோக வைக்கும் தவறுகளை தொடர்ந்து செய்யும் சந்தர்ப்பம் உண்டு.

அதனால் கலாச்சாரத்தின் பெயரால் இளையவர்களை பற்றி gossip பண்ணாமல், வதந்திகளை பரப்பாமல், குற்றமனப்பான்மையை உருவாக்காமல் அவர்களை அவர்களாக வாழ விடுங்கள்.

அதுவே புண்ணியம்.

இதுவே பரம்பரைக்கு நீங்கள் சேர்க்கும் நல்ல பலனாகும்.

கொடுப்பதே மீண்டும் வரும்.

சிந்திக்கவும்!
நன்றி

சிந்தனைக் களம் – 43 – Bamini Rajeswaramudaliyar

Leave A Reply