சிந்தனைக் களம் – 43 – Bamini Rajeswaramudaliyar

Share

தீபனின் வாழ்வில் தீபனின் அம்மாவாகிய நானும் அவனின் ஓட்டிசமும் பிள்ளைகளை பெற்று நல்ல பண்பு, பழக்கவழக்கங்கள், கல்வி எனக் கற்றுக் கொடுத்து, அத்துடன் பறப்பதற்கான தன்நம்பிக்கை என்ற அழகிய சிறகினையும் கொடுக்கும் போது எமது கடமை நிறைவேறுகிறது.

அப்படித்தான் தீபனைப் பற்றி உணர்கிறேன்.

தீபன் supported independent living ற்கு போய் பல வருடங்களாகிவிட்டது. ஆரம்பத்தில் வலியை தந்த பிரிவு இப்போது பழக்கப்பட்டு விட்டது.

தீபனின் வாழ்வு busyயானதாக இருப்பதால் கிழமையில் ஒருமுறைதான் தீபன் என்னை காண்பதற்கு அனுமதிக்கிறான். தீபன் தனது வீட்டில், மூன்று நண்பர்களுடன்( 2 boys and a girl) மிகவும் ஆனந்தமாக, மிகுந்த தன்நம்பிக்கையுடன் அனைவராலும் விரும்பப்படும் ஒருவராக வாழ்கிறான்.

இது அனைவரும் அறிந்ததே
18/01/2023 நான் வேலைக்கு சென்ற போது office இல் சில அவசியமான பொருட்கள் குறைவாக இருப்பதை கவனித்து விட்டு, head office ற்கு தொலைபேசியில் அழைத்து தேவையான பொருட்களை கூறினேன்.

தம்மிடம் இருப்பதாகவும் வந்து எடுத்துப் போகும்படியும் கூற, தீபன் வாழும் வீடும் head office உம் ஒரே காணியில் இருப்பதால் தீபனையும் இரண்டாவது தடவையாக பார்த்து விடலாம் என மகிழ்ச்சியுடன் சென்றேன்.

பொருட்களை பெற்றுக் கொண்டு எனது car இல் வைக்கும் போது, farmற்கு சென்றிருந்த தீபனும் அவனின் house mates உம் வந்தார்கள்.

அப்போது office staff
Theepan is here எனக் கூற நிமிர்ந்து பார்த்தேன் ஆளைக் காணவில்லை. தீபனின் key worker இடம் கேட்ட போது முன் கதவால் தன் அறைக்குள் சென்றுவிட்டான் என்றார்.

ஓ… தன்னை disturb பண்ணவேண்டாம் என்கிறான் போலும் என நினைத்தாலும் பெற்ற மனம் கேட்கவில்லை. அவனின் வீட்டிற்குள் சென்று room கதவை தட்டி வரவா எனக் கேட்க, தானாக வெளியே வந்து hug தந்தான்.

ஆனால் சந்தோஷமான முகமாக இருக்கவில்லை.

அம்மா வேலையாக வந்தேன், தீபனை கண்டதும் hug தேவைப்பட்டது, hug தந்ததற்கு நன்றி, love you theepan எனக் கூறி விடை பெற்று car இல் ஏற call பண்ணினான். Theepan busy , Amma disturbed theepan. Theepan need rest என்றான்.

எனக்கு சிரிப்பு வந்து விட்டது அதனை அவனிடம் காட்டிக் கொள்ளாமல், வேலை விடையமாகவே வந்தேன் எனக் கூறி அதே கதையை மீண்டும் கூறிய போதும் திருப்தி அடையாமல் , மீண்டும் மீண்டும் பல தடவைகள் call பண்ணினான், மீண்டும் மீண்டும் அதே பதிலைக் கூறினேன்.

அதுதான் ஓட்டிசம்.

அவரின் அன்றைய நேர அட்டவணையில் எனது வருகை குறிப்பிடப்படவில்லை.

எனது எதிர்பாராத வருகை அவனை குளப்பிவிட்டது.

அது எனது தவறுதான்.

பாசம் என்பது தவறுகளை தூண்டவல்லது என்பதை என் மகன் கற்பித்தான்.

ஓட்டிசம் உள்ளவர்களின் உலகம் வெகு சாதாரணமானது.

சிக்கல் நிறைந்த சிந்தனை கொண்ட சாதாரண மனிதர்கள் என அழைக்கப்படும் எமக்கு, அவர்களின் திட்டமிட்ட சாதாரண உலகத்தை புரிந்தை கொள்ள மனம் ஏற்பதில்லை.

இங்குதான் பாசம் என்ற வலையை விரித்து மனிதர்களை சிறைப்பிடிக்க முனைகிறோம். பின்பு நாமே மனம் நொந்தும் அழுகிறோம்.

எனக்கு தீபனைப் பற்றிய புரிதல் உள்ளதால் அவனின் செய்கைகள் என்னை அதிசயப்படுத்துவதில்லை.

தீபன் என்மீது அன்பு அதிகம் கொண்டவன். தீபனுக்கு எந்தக் காரியமானலும் திட்டமிட்டு, நாட்குறிப்பில் பதிந்து உணர்ந்து செயல்பட வேண்டும்.

அல்லது தீபனுக்கு confusion வந்து விடும்.

தீபனைப் போல் எத்தனை பேர் இவ்வுலகில் உள்ளார்கள். அவர்களை புரிந்து கொள்வது எமது கடமை அல்லவா!

சிந்திப்போம்!
நன்றி.

சிந்தனைக் களம் – 44 – Bamini Rajeswaramudaliyar

Leave A Reply