பண்பால் பழக்கவளக்கத்தால் வாழ்க்கையில் முன்னேறி நிம்மதியாக வாழ வேண்டுமானால்
-தன் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ள வேண்டும். தனது தவறுகளை ஏற்றுக் கொள்ளாமல் தனக்குத்தானே நியாயப்படுத்த முனைவதால் நன்மை வருவதுல்லை.
– யாருடனும் நீண்ட கால உறவை நட்பை பேண முடியாதிருந்தால், நான் எங்கே என்ன தவறை செய்கிறேன். என் பங்கு என்ன என்பதை சிந்தியுங்கள். அடுத்தவரைப் பற்றி குறைகள் பேசி, பழி கூறுவதால் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் வரப் போவதில்லை.
-எவருடனும் அன்பு என இடைவெளி இன்றி நெருங்கிப் பழகுவதையும், தினமும் தொலைபேசியில் பேசுவதையும் தவிருங்கள். பல அவசியமற்ற பழக்கதோஷங்களே அனேகமான பிரச்சனைகளுக்கு காரணமாகிறது.
-உங்களுக்கான பொழுதைபோக்கு அம்சங்களை கண்டறிய முயற்சி செய்யுங்கள். நல்ல hobbies நல்ல therapy யாக மாறிவிடும். தனக்கான நேரம் தன்னைத்தான் உணர உதவும்.
அதுவே பிரச்சனைகளை தவிர்க்கும் வழியை காட்டித்தரும்.
-மிகவும் முக்கியமானது,
நல்லவராக உலகிற்கு காட்டுவதை தவிர்த்து. உண்மையில் நல்ல மனிதராக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
உண்மையாக நேர்மையாக வாழும் போது அடுத்தவரின் தவறான விமர்சனங்கள் கூட எம்மை பாதிக்காது. அவர் தம்மை யார் என எமக்குக் காட்டித் தருவதற்கு நன்றி கூறி இரண்டடி எட்ட நிற்போம்.
சிந்தியுங்கள்.
நன்றி