தேயிலைக்காரி – மலையக எழுத்தாளர் எஸ்தர்

Share

2. மலையகப் பெண்களின் வாழ்வியல் சூழல்

இலங்கையின் தேயிலை இரப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஏற்கனவே மிக நீண்ட காலமாக ஊதியக்குறைவு பணிச்சுமை போதுமான உட்கட்டுமானம் வசதியற்றும் தொழில் பாதுகாப்பு இன்றி குறிப்பாக அட்டைத்தொல்லை குளவிக்கடி (பணியிடத்தில்)) சற்றுத்தைப்புலிகளின் நடமாட்டம் தாக்குதல் உயிரிழத்தல் கடும் மழை வெள்ளம் குடியிருப்பு பாதைகள் உடைதல் முதலான அசௌகரியமான வாழ்க்கைச் சூழலில் நிற்கிறார்கள்.

கட்டுரையாளர் எஸ்தர்

மேலும் மக்களுக்கு இவ் பொருளாதாரப் பேரிடரினால் தற்போதைய பொருளாதார நெருக்கடி இந்த தொழிலாளர்களின் மிகக்குறைவான நாட்கூலி அதிகமான விலையேற்றம் இடையில் சொக்கஇருதலைக் கொள்ளியாக திணறி நிற்கிறார்கள்.

இலங்கையில் மத்திய மலைநாடு எப்போதும் ரசிக்கத்தக்க இயற்கை செழிப்பு மிக்கதொரு இடம். ஆனால் இங்கே வாழும் பத்து லட்ச மக்களின் தொழிலாளர்களின் நிலை எப்போதும் அவலம் நிறைந்ததாகவே இருக்கின்றது. கடும் மழையில் நிலச்சரிவின் அபாயத்தில் வாழும் வீடுகள் அங்கிருந்து வெளியேறி கோயில் பாடசாலை மசூதிகள் அவசரக்கால கொட்டில்களிலும் வாழ்கிறார்கள்.

பலர் தினசரி கூலிகளாகவும் பணியாற்றுகிறார்கள்.அவர்களால் சொந்தமாக ஒரு சிறிய விட்டையேனும் கட்டுவது இயலாத காரியமாக ஆகி இருக்கின்றது. பெண்கள் தேயிலை மலையில் கொழுந்து பறிப்பதும் இறப்பர் தோட்டங்களில் பால் வெட்டுவதும் இவ்வேலைகளுக்கு 30 நாட்கள் வேலை கிடைத்தது. இப்போது வெறும் 20 – 23 நாட்களே வேலை கிடைக்கின்றது.

இந்நிலையில் இப்பொருளாதாரச் சிக்கலில் 20 நாட்கள் வேலையும் இருபது ஆயிரம் ரூபா சம்பளமும் நாட்கூலியாகக் கிடைப்பதும் அம்மக்களுக்கு பெரும் மலையைக் கடப்பது போன்றதே.

மலையகத்தில் சுமார் 10 லட்சம் வரையான இந்திய வம்சாவளியினர் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் சுமார் இரண்டு லட்சம் பேர் தேயிலைத் தோட்டங்களாலும் இறப்பர் தோட்டங்களிலும் வேலை செய்கிறார்கள். இப் பெருந்தோட்டத்துறை மூலமாக சுமார் 1.5 மில்லியன் அந்திய செலாவணியை நாட்டுக்குள் கொண்டோ வரப்பாடுபடுகின்றனர்.

இத்தேயிலை ரப்பர் தொழில் துறையில் அதிகளவில் பெண் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல ஆண்டுகள் நடாத்திய. போராட்டங்களின் வெற்றியாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 1000/- சம்பளம் வழக்காக இணக்கப்பட்டு இருந்தபோதும் இன்று வரை அது அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

மலையகப் பெண்கள் தமது நாளாந்த வாழ்க்கையைச் சமூக பொருளாதார. அரசியல் பிரச்சினைகள் அதிகமாகக் காணப்படும் நிலையில் மேலும் மேலும் பொருளாதார இழப்பினால் பாதிக்கப்பட்டுள்ள இவர்கள் தேயிலைத் தோட்டங்களில் ஓய்வற்ற நீண்ட வேலைநேரமும் கடினமான மலைகளால் ஏறி மோசமான பாதைகளில் பயணம்செய்து பல்வேறு சிரமங்களின் மத்தியில் தேயிலைத்தோட்டத்தில் குறை கூலியில் தொழில் செய்கிறார்கள்.

இது மிகப்பெரும் வாழ்க்கைச் சவாலாகவே உள்ளது இரப்பர் தோட்டத்தில் பெண்கள் அதிகாலை 3-மணிக்குப் பால் வெட்டச் செல்கிறார்கள். தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறிக்கவும் எட்டு மணித்தியாலத்துக்கு மேல் லட்சக்கணக்கான பெண்கள் அங்கே தேயிலைப் பெருந்தோட்டத்தில் மலம் செல்ல கூட வசதியோ நீர் வசதியோ இன்றி மாதவிடாய் நாட்களிலும் பெரும்பாலான பெண்கள் துணித்துண்டங்களை பயன்படுத்துவதனால் அது நீண்டநேரம் இரத்தம் கசிந்து அவர்களின் தொடை சதைப்பகுதிகளில் புண்களாக்கி விடுகிறது.இதன் கடும் வலியும் வேதனையும் அனுபவித்துக்கொண்டு கடும் மழை நாட்களிலும் குளிரிலும் பெரிதும் துயரப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பெண்களின் போசாக்கான உணவு மலையகத்தில் இன்றும் இல்லை என்பேன்.அவர்களுடைய விருப்பமான உணவு கோதுமை மாவில் செய்யப்படும் ரொட்டியும் தேங்காய் சம்பலுமாகும். மலையகத்தின் பிரசித்தமானதும் மக்களின் உணவும் ரொட்டிதான். கடினமான வேலை செய்வதால் அவர்களுக்கு கார்போஹைதரைட் ரொட்டியில் அதிகமாக கிடைப்பதுடன் நீண்டநேரம் வேலைசெய்யும்போது பசியும் எடுப்பதில்லை.

என்னுடைய வீட்டில் வாரத்தில் ஒரு தடவைதான் என்னுடைய அம்மாயி சோறு சமைப்பார்.சோறு சமைப்பது குளிர்காலத்தில் கடினம் என்பதனாலும் அவர்கள் அதிகமாக சோற்றைத் தவிர்த்து மாப்பொருளான கோதுமையை அதிகமாக எடுத்துக் கொள்கின்றார்கள் மீண்டும் மீண்டும் ரொட்டியிடமே சரணடைகிறார்கள்.

Leave A Reply