வாழ்வின் வண்ணங்கள் 41 – கை.அறிவழகன்

Share

இருத்தலின் வாதைகளைத் தாண்டி இயங்குதல் மகத்தானது, இயங்குதலின் துவக்கப் புள்ளி சிந்தனை, தனி மனிதனிடத்தில் இருந்து உருவான சிந்தனைகள் தான் இந்த உலகின் மாபெரும் மாற்றங்களை உருவாக்கியது.

மகத்தான சிந்தனைகளால் உங்களை நிரப்புங்கள், உங்கள் சிந்தனைகளுக்கு நீங்கள் உண்மையாக இருந்தால் அவை வழிகளை உருவாக்கும். நீங்கள் எதை விரும்பினீர்களோ அதை அடைவீர்கள்.

ஆனால், பிற உயிர்களைக் காயப்படுத்தும் எந்த சிந்தனையும் இழிவானது என்கிற அடிப்படையை மட்டும் எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.

உங்கள் மனம்தான் உங்கள் மதிப்பை உருவாக்கும் பெட்டகம், உங்களிடம் இருக்கும் வேறெந்தப் பொருளுக்கும் இறுதி மதிப்பென்பது இல்லை.

நிலைத்திருக்கப் போவது உங்கள் மனதில் இருந்து உருவான நீங்கள் மட்டும்தான். பொருண்மை உலகைத் தாண்டி உங்கள் மனதில் தேங்கி இருந்த சிந்தனைகளே அழிவில்லாது உங்களைக் காக்கும்.

மன்னிப்பையும், பேரன்பையும் சுரக்கிற மானுட மனமே மகத்தான கடவுளர் வாழ்கிற கோவில்.

வாழ்வின் வண்ணங்கள் 42 – கை.அறிவழகன்

Leave A Reply