வாழ்வியல் சிந்தனைகள் – 42 – ராதா மனோகர்

Share

எனது உறவு எனது சொந்தம் எனக்கே சொந்தமான LOVE ?

பரஸ்பரம் அன்பான உறவுகள் மிகவும் இனிமையானவையாகும். நாம் அனுபவிக்கும் உறவுகள் பெரும்பாலும் பிறரை ஒரு கட்டுப்பாட்டு வளையத்திற்குள் வைத்திருக்க பயன்படும் தந்திரமாகவே கருதுகிறோம்.

பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையே உள்ள உறவானாலும் அல்லது காதலன் காதலிக்கு இடையே உள்ள உறவாக இருந்தாலும் அவை பெருதும் ஒரு சுய நலம் அல்லது (possessiveness) எனது உறவு எனது சொந்தம் எனக்கே சொந்தமான பொருள் போன்ற ஒரு உணர்வின் அடிப்படையில் தோன்றும் காரணமாகவே இருக்கிறது.

இப்படி அன்பின் அடிப்படையே புரிந்து கொள்ளப்படாமல் வெறும் எனது பொருள் போன்ற உணர்வின் அடிப்படையில் உள்ள உறவுகள் உண்மையில் உறவுகளே அல்ல. நம்மில் பெரும்பாலோரின் உறவுகள் இப்படிதான் அமைந்து விடுகின்றது.

நாம் விரும்பும் பொருள் எமக்கு கிடைக்காவிடின் நாம் ஆத்திரப்பட்டு அதை அழித்துவிடும் அளவுக்கு சென்று விடும் கொடுமை எல்லாம் இந்த possessiveness எனப்படும் சுயநலதினால் தான் உருவாகிறது.

விலகிப்போகும் காதலிக்கு தீங்கு செய்வது. மகன் வாழ்வு கெட்டாலும் பரவாயில்லை போட்டியாக உள்ள மருமகளுக்கு பாடம் படிப்பிப்பது போன்று ஏராளமான உதாரணங்களை கூற முடியும்.

குடும்ப அமைப்பு முறை இறுக்கமாக இருப்பதாக தம்பட்டம் அடித்து கொள்ளும் ஆசிய ஆபிரிகக் நாடுகளில்தான் மனித உறவு முறைகள் எல்லாம் மிகவும் திரிபடைந்து மாசுபட்டு உள்ளது.

குடும்ப பாரம்பரியம் என்ற பெயரால் எத்தனை கொடுமைகள்?

இந்த குடும்ப உறவு பெருமையை பற்றி அதிகமாக பேசும் நாடுகளில்தான் கொடுமைகள் இன்னும் குறையவில்லை!

சக உறவினரை அல்லது நண்பரை தனது கட்டு பாட்டு வளையத்திற்குள் வைத்திருக்கவே அன்பு என்று கூறிகொள்ளும் ஒருவித பித்தலாட்ட possessiveness ஐ மனதின் அடியில் புதைத்து வைத்துள்ளார்கள்.

இந்த விதமான உறவுகள் எனப்படும் கட்டுபாட்டு வளையம் பிறரின் சுயத்தை மதிப்பதே இல்லை.

ஒவ்வொருவருக்கு ஒரு space இருக்கிறது. அவர்களின் சுயராஜ்யத்தில் நாம் தலை இடக்கூடாது.

அவர்களின் விருப்பு வெறுப்பு போன்றவற்றில் அவர்களுக்கு உள்ள உரிமையை நாம் மதிக்க வேண்டும்.

ஒருவரின் சிந்தனையை பற்றி நாம் அளவுக்கு அதிகமாக ஆராச்சி செய்வதே கூட ஒரு வகையில் Trespassing தான்.

இந்த பிரபஞ்சத்தில் சகல உயிரனங்களும் தங்கள் தங்கள் சுய தேவைக்காக அதற்குரிய ஆயத்தங்களுடனேயே தோன்றியுள்ளன.

இந்த உண்மையை நாம் சற்று விரிவாக ஆராய வேண்டும்.

எமது அன்புக்கோ அல்லது உறவுக்கோ உரியவருக்கு உதவி செய்கிறோம் பேர்வழி என்ற எண்ணத்தில் நாம் செய்யும் பல காரியங்கள் அவர்களின் சுய பரிசோதனையை தடுத்து விடுகின்றன.

எமது உறவுகள் ஒரு சமுகம் அல்லது குடும்பம் போன்ற ஒரு நிறுவன படுத்தப்பட்ட பொறிமுறையில்தான் பெரிதும் தங்கி உள்ளது.

இது தவறா சரியா என்பதல்ல விடயம்.

எதுவும் எமது அடிப்படை நோக்கத்தை நிறைவேற்றுமா என்பதை பொறுத்தே தீர்மானிக்க முடியும்.

மனிதர்களின் அடிப்படை நோக்கம் இன்பமான வாழ்வு என்பது தான், தனி மனிதர்களின் சுயம் என்பது மதிக்க படவேண்டும்.

தனி மனிதர்களின் சுயத்தை வெறும் நிறுவனப்படுத்த பட்ட ஒரு பொறி முறைக்காக பலிபீடத்தில் வைத்து வாழ்வை தொலைத்து விட்ட மனிதர்களாக நாம் இருப்பது மிகவும் வருந்த தக்கதே, எமது சிந்தனை விருப்பு அல்லது வெறுப்பு எல்லாமே எதோ ஒருவகையில் ஒரு நிறுவன படுத்த பட்ட பொறிமுறையின் கோட்பாடாகவே இருந்து வருகிறது.

இந்த நிறுவன படுத்த பட்ட செம்மறியாட்டு போக்கில் இருந்து விடு படும் பொழுதுதான் நாம் பூரண மனிதர்களாக உள்ளோம் என்று பெருமை பட முடியும்.

எமது உறவுகள் எப்பொழுது உண்மையிலேயே எதுவித பிரதி பலனும் கருதாமல் அன்பின் அடிப்படையில் மட்டுமே வெளிப்படுகிறதோ அன்றுதான் நாம் ஒரு அன்புள்ள மனிதர்கள் என்று கூற முடியும்.

காதல் என்று சொல்பவரெல்லாம் காதலர்கள் அல்ல!

நீங்கள் எவ்வளவு பேரை நேசிக்கின்றீர்கள் என்பதல்ல முக்கியம்.

நீங்கள் எவ்வளவு தூரம் நேசிக்க படக்கூடிய மனிதராக இருக்கிறீர்கள் என்பதே முக்கியம்.

வாழ்வியல் சிந்தனைகள் – 43 – ராதா மனோகர்

Leave A Reply