வாழ்வியல் சிந்தனைகள் – 55 – ராதா மனோகர்

Share

Disempower உங்கள் சுயத்தை உங்களிடம் இருந்து பறிப்பவர்கள் உங்கள் அருகிலேயே

Disempower என்பது ஒருவருக்கு உரிய உரிமையை அல்லது சக்தியை நாம் பறித்தெடுப்பது என்று கூறலாம்.

இந்த சொல் Dis Em powering நமது சமுகத்தில் மிக அழுத்தமாக மாற்றவே முடியாத அளவு அல்லும் பகலும் நடை பெரும் ஒரு சமாசாரம் தான் . அநேகமானோர் பிறருக்கு உதவி செய்கிறோம் பேர்வழி என்று உண்மையில் அவர்களது சுயத்தை பறிமுதல் செய்யும் காரியத்தை தான் செய்கிறார்கள்.

வாழைபழத்தை உரித்து வாயுக்குள் வைத்தல் உதவி அல்ல. கேட்ட உடனேயே அவற்றை நிவர்த்தி செய்து விடுவது உதவி அல்ல.

அவரே தனக்கு வேண்டிய வாழைப்பழத்தை தான் விரும்பிய நேரத்தில் தான் விரும்பிய விதத்தில் பிறரின் நேர்முக அல்லது மறைமுக வற்புறுத்தல் எது மின்றி உண்பதற்கு நாம் செய்யும் வசதிகளை தான் உதவி என்று கூற முடியும்.

தனது சுயத்தை இழந்த மனிதரால் ஒரு போதும் நல்ல ஒரு படைப்பை ஒரு போதும் உருவாக்கவே முடியாது. சுயம் இழந்த மனிதர் தனது சுயம் எது என்று தேடி திணறுவதிலேயே வாழ்வின் பெரும் பகுதி கழிந்து விடுகிறது.

இந்த சுயம் இழந்த மனிதர்கள் நல்ல வெற்றிகரமான மனிதர்களாக முடியாது என்று கூற முடியாது.

ஏனென்றால் இங்கே வெற்றிகரமான மனிதர்கள் என்பது வெறும் வெளி தோற்றமாக மட்டுமே அறியப்படுகிறது.

உண்மையான மனிதவளர்ச்சி என்பது அவர் எந்த அளவு சுய சிருஷ்டி கர்த்தாக இருக்கிறார் என்று பார்க்க வேண்டும்.

சுயம் இழந்தவர் அதிலிருந்து மீண்டு வரவே முடியாவிட்டால் அவர் ஒரு நல்ல படைப்பாளி ஆகவே முடியாது.

அனேகமாக சிறுவயதிலேயே இந்த disempower கைங்கரியத்தை பெற்றோர்களும் ஆசிரியர்களும் அநேகமான பெரியவர்களும் தங்களை அறியாமலேயே கைகொள்ள தொடங்கி விடுகின்றனர்.

இதன் காரணமாகவே பல தலைமுறையினர் சரியான ஆழுமை நிறைந்த மனிதர்களாக பிரகாசிக்க முடியாமல் உள்ளது.

இனி நான் இங்கே குறிப்பிடப்போகும் கருத்து மிகவும் காரசாரமானது.

வெளிப்படையாக நல்ல விடயமாக தெரியும் பல விடையங்கள் உண்மையில் எவ்வளவு தூரம் நன்மையானவை என்பது மிகவும் சிந்திக்க வேண்டிய ஒரு கருத்தாகும்.

அதிலும் நாமோ எப்போதும் பழமையாக வழி வழி வந்த பழக்கவழக்கங்களியே சிறந்தவை என்று கருதி கொண்டு அவற்றில் இருந்து மீள விருப்பம் இல்லாதவர்கள்.

ஆனால் சிறுவர் வளர்ப்பை பொறுத்தவரை எமது பாரம்பரிய பழக்க வழக்கங்கள் சிறுவர் நலம்பெணுதல் என்ற அதன் நோக்கத்தை நிறை வேற்றுவதாக இல்லை. ஒட்டு மொத்தமாக சொல்லிவிட முடியாவிட்டாலும் பல விடயங்களில் தவறாகவே இருக்கிறது.

மேலை நாடுகளின் குழந்தைகளை தாமே தமது உணவை உண்ணும் பழக்கத்தை மிக சிறு வயதிலேயே பழக்கி விடுகிறார்கள்;

மேசையில் இருக்கும் உணவை தேர்ந்து எடுத்து உண்ணும் சுதந்திரம் அந்த குழந்தைக்கு தன்விருப்பத்தை தானே எப்படி தீர்மானிப்பது என்ற அதி முக்கியமான திறத்தை வளர்த்து விடுகிறது.

நம்மவரோ அனேகமாக குழந்தைக்கு தம் கையாலேயே ஊட்டி விடுதல் என்பது ஏதோ தாய்மைக்கு அல்லது தந்தைக்கு உரிய தெய்வீக கடமை அல்லது பாசம் என்றெல்லாம் கருதி அந்த குழந்தையை Disempowering செய்து விடுகின்றனர்.

அதாவது அந்த குழந்தையின் உணவு உண்ணும் காரியத்தில் அதற்கு இருக்க வேண்டிய சுயநிர்ணய உரிமையை பறித்து தங்கள் சுய திருப்பதியை தாங்கள் பெற்று கொள்கின்றனர்.

குழந்தைகளுக்கு உணவை ஊட்டும் பொழுது பெற்றோர் அதிகமான சுய மகிழ்ச்சியை அடைகின்றனர். அதிலும் தன்னம்பிக்கை குறைந்த பெற்றோருக்கு அதன் மூலம் பெரும் ego பூஸ்ட் கிடைத்து விடுகிறது.

அண்மையில் ஒரு திருமணவீட்டில் அவரவர் தட்டுக்களில் உணவு எடுத்து கொண்டு செல்லும் காட்சியை கண்டேன். எனக்கு சற்று முன்பாக ஒரு அம்மா தனது தட்டில் சகல பதார்த்தங்களையும் நிதானமாக ரசித்து கவனித்து நிரப்பி முடிந்ததும் அவர் நகருவார் என்று பார்த்தேன் ஆனால் அவர் நகரவில்லை.

அப்படியே திரும்பி தனக்கு பின்புறமாக நின்றிருந்த தனது மகளின் தட்டுக்களிலும் மிக நிதானமாக தனக்கு விரும்பியவற்றை விரும்பிய அளவில் எடுத்து நிறைத்து விட்டு சென்றார். எந்த இடத்திலும் தனது மகளுக்கு எது பிடிக்கும் என்ற அல்லது பிடிக்காது என்பதை பற்றி ஒரு துளி அளவு சிந்தனையும் இன்றி தான் மிக சரியான ஒரு காரியத்தையே செய்துள்ள திருப்தியில் நகர்ந்தார் அவரின் மகளும் அம்மாவின் செய்தால் அது சரியாக தான் இருக்கும் என்று பழக்கப்பட்ட பிராணி போன்று நடந்து சென்றார்.

சிறு வயதிலேயே பாசம் என்ற பெயரில் எல்லோர் வீடுகளிலும் அனேகமாக இடம் பெறும் Disempowering process தான இது எனத்தோன்றுகிறது.

மிகவும் செல்லமாக வளர்க்கப்படும் பிள்ளைகள் தறுதலைகளாக மாறுவதற்கும் இதுதான் காரணம் என்று நான் கூறினால் நம்புவீர்களா?

அளவுக்கு அதிகமான செல்லம் என்றால் அது மிகவும் பலவீனமாக தான் வளர்க்கப்படுகிறது என்று பொருள்.

அது எப்போதும் தான் பலமில்லாத ஒருவர் என்ற தாழ்வு மனப்பான்மையில் தான் பலம் என்று செயற்கையாக காட்டுவதற்கு தான்தோன்றி செய்கைகளில் ஈடுபடும் வாய்ப்பும் அதிகம்.

அது மட்டுமல்ல பலசாலி அல்லது திறைமைசாலி என்று தான் நம்புவர்களின் கைப்பாவைகளாகி தவறான பாதையில் சென்று விடக்கூடிய ஆபத்தும் உண்டு.

வாழ்வியல் சிந்தனைகள் – 56 – ராதா மனோகர்

Leave A Reply