வாழ்வியல் சிந்தனைகள் – 63 – ராதா மனோகர்

Share

உங்கள் எண்ணங்கள் ஒரிஜினல் அத்திவாரத்தில் மீது கட்டப்பட்டதா?

இது ஒரு உண்மையான எண்ணம்தானா? இது ஒரு உண்மையான விருப்பம்தானா? இது ஒரு உண்மையான வெறுப்பு தானா? எது எனது உண்மையான எண்ணம்? நாம் பொதுவாக நினைப்பது போல் இவை ஒன்றும் இலகுவான சமாச்சாரங்கள் அல்ல.

உதாரணமாக நாம் இன்று ஒரு நெக்லஸ் வாங்க விரும்புகிறோம் என்று வைத்துக்கொள்வோம்.உண்மையிலேயே அந்த நெக்லசை நாம் விரும்புவோமாகில் அது இலகுவில் நமக்கு கிடைக்ககூடியதே. அல்லது அது பலராலும் விரும்பப்படுவத்தின் காரணமாக அந்த நெக்லசை நாம் விரும்பி இருக்கலாம்.அல்லது அது ஒரு முதலீட்டு சாதனமாகவும் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

நாம் எமது உள் மனதில் உண்மையாக அதன் அழகில் மயங்காமல் வேறு இதர காரணங்களால் அதை அடைய முயற்சி செய்தால் அது அனேகமாக நிறைவேறாமல் போகக்கூடிய காரணங்கள் அதிகம்.

பலரால் விரும்பப்பைடுவதன் காரணமாக அதை நாம் வாங்க எண்ணினால் அதன் மீது எமக்குள்ள ஈர்ப்பு சக்தி மிகவும் குறைவாகும்.

அது ஒரு முதலீட்டு சாதனம் என்ற எண்ணத்தில் அதை வாங்க எண்ணினால் அது கைகூடாமல், சில வேலை அதைவிட மிக சிறந்த முதலீட்டு சாதனம் கிடைக்க கூடும்.

எதை நாம் விரும்புகிறோமோ அதை உண்மையில் நாம் விரும்புகிறோமா என்று நமக்கு நாமே துருவி துருவி ஆராய்ந்த பின்பே அதை நோக்கி எமது எண்ணங்களை செலுத்த வேண்டும்.

இதுவே வெற்றிக்குரிய நிச்சயமான வழியாகும். எமது சகல எண்ணங்களும் அனேகமாக வேறு பல எண்ணங்களில் தங்கி இருப்பவையாகும்.

எப்பொழுதெல்லாம் எமது எண்ணம் சரியாக அதன் அத்திவாரத்தில் இருந்து எழும்பியுள்ளதோ அப்பொழுதே அது நிச்சயமான வெற்றியை நோக்கி எழுந்து நிற்கிறது.

ஆகவே எப்பொழுது எல்லாம் எமக்குள் எழும் எண்ணங்கள் இரவல் அத்திவாரத்தின் மீது எழும்புகிறதோ அப்போதே அதன் வீழ்ச்சியும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

உதிக்கும் எண்ணங்களை உறுதி செய்து கொள்ளுங்கள் அவை உரிய ஒரிஜினல் அத்திவாரத்தில் கட்டப்பட்டுள்ளதா?

வாழ்வியல் சிந்தனைகள் – 64 – ராதா மனோகர்

Leave A Reply