இஸ்லாமியர்களுக்கே இஸ்லாம் மதத்தை புரியவில்லையா?

Share

கோவை குண்டு வெடிப்பு கலவரத்தில் கைதான இஸ்லாமியர்களில் சிலரை நன்நடத்தையின் அடிப்படையில் 2009ம் ஆண்டு அண்ணா பிறந்த நாள் அன்று திமுக அரசு விடுதலை செய்தது. அதற்கு துக்ளக் சோ ராமசாமி கடுமையான எதிர்ப்பு காட்டினார்.

2011 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர்களின் விடுதலை என்பதை யாருமே நினைக்கவில்லை. தற்போது அவர்களின் விடுதலைக்காக திமுக அரசு சட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் ஆர்எஸ்எஸ்-சங்பரிவார அமைப்புகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய சிறைக் கைதிகளின் விடுதலையைச் சிக்கலாக்க முயல்கிறார் சீமான்.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட கோயமுத்தூர், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளான நாகபட்டிணம் மற்றும் இளையான்குடி போன்ற ஊர்களை தேர்ந்தெடுத்து தன் விசம பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். ஒரு மாநில முதல்வர் நினைத்த மாத்திரத்தில் சிறைக் கைதிகளை உடனே திறந்துவிட முடியாது.

“நான் முதலமைச்சர் ஆகிவிட்டால் அரசு வாங்கியுள்ள கடன்களுக்கு மஞ்சள் நோட்டீஸ் கொடுப்பேன், ஐம்பதாயிரம் பட்டாளியன்களை கொண்டுபோய் தனி ஈழம் அமைப்பேன், பச்சை மட்டையால் அடிப்பேன்’’

என்று ஒரு அடிமுட்டாள் பேசும்போது அதன் அர்த்தம் புரியாமல் ஆர்ப்பரிக்கும் அரை முட்டாள்களுக்கு இதெல்லாம் புரியாது.

சட்ட நெறிமுறைகளின்படி விடுதலை செய்வதற்கு தகுதியுடையவர்களை கண்டுபிடித்து அவர்களின் பெயர்களை அரசுக்கு பரிந்துரை கொடுக்க ஐந்துபேர் கொண்ட குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழு கொடுக்கப்போகும் பரிந்துரைகளின் அடிப்படையில் விடுதலைக்கு தகுதியானவர்களின் பெயர்ப் பட்டியலுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும். அதன் தொடர்ச்சியாக ஆளுனரும் ஒப்புதல் கொடுக்கவேண்டும். பிறகுதான் விடுதலை செய்யப்படுவர்.

இந்த நடைமுறைகள் ஏதாவது ஒரு இடத்தில் சறுக்கினாலும் நீதிமன்றம் முட்டுக்கட்டை போடும். ஆளுனர் மறுப்பதற்கும் வாய்ப்புள்ளது. ஒரே சீரான நேர் கோட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த முயற்சியை சீரழிக்கும் விதமாக சீமான் செயல்படுகிறான். இவனுக்காக சில்லரையைச் சிதறவிடும் சில இஸ்லாமியர்களின் அரசியல் அறிவு புல்லரிக்க வைக்கிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவாக பலநூறு கைதிகள் விடுதலை செய்யப்பட்டபோது இந்த இஸ்லாமிய கைதிகளின் நினைவு சீமான் எனும் மொன்னையனுக்கு வராமல்போன காரணம் என்னவோ? இதையெல்லாம் இஸ்லாமிய சமூகம் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.

நம் நாட்டு முஸ்லிம்களில் பலர் மிகவும் வித்தியாசமானவர்கள். தினமும் ஐந்துநேரம் கண்டிப்பாக தொழுகை நடத்தவேண்டும் என்ற இஸ்லாமின் கட்டளையை மீறுவது இவர்களுக்குப் பிரச்சனை இல்லை. மாற்று மதத்தினரின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது ஹராம் என்ற ஏதோ ஒரு ஹதீஸை பிடித்துக்கொண்டு தொங்குவார்கள்.

நீண்ட தாடியும் தலையில் தொப்பியும் வைத்துக்கொண்டாலே அவர்கள் எல்லோரும் முஸ்லிம்கள் அல்ல. எவ்வளவு பெரிய அறிவு ஜீவியாக இருந்தாலும் கொடிய நோய்போன்ற காரணங்கள் எதுவும் இல்லாமல் தொடர்ச்சியாக மூன்று (வெள்ளிக்கிழமை) ஜும்மா தொழுகை செய்யாதவன் முஸ்லிம் எனும் தகுதியை இழந்துவிடுவான்.

இஸ்லாத்தில் பர்ல் (கட்டாயம்) மற்றும் சுன்னத் (நல்லது) என்ற இரு நடைமுறைகள் உள்ளன. தொழுகை பர்ல். தாடி வைத்துக்கொள்வது சுன்னத். பர்லுக்கும் சுன்னத்திற்கும் வித்தியாசம் தெரியாத பண்டாரங்கள் இஸ்லாத்தில் இப்போதும் நிறைய உண்டு.

இவர்கள் தொப்பி வைக்க வேண்டுமென்று எங்கேயும் சொல்லப்படவே இல்லை. ஆனால் தொப்பி வைப்பதை மட்டுமே தங்கள் அடையாளமாக நினைக்கும் முஸ்லிம்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சமூக வலைதளங்களில் ஆண்களின் போட்டோக்களுக்கு ஹார்டின் விடும் பெண்கள் எல்லோரும் விபச்சாரிகள் என்று சபரிமாலா எனும் ஒரு முன்னால் ஆசிரியை ஒரு இஸ்லாமிய மேடையில் ஆணவமாகப் பேசுகிறார். அந்தப்பேச்சை அங்கிருந்த ஒருவர்கூட கண்டிக்கவில்லை.

அந்த வீடியோவை அதே சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கில் பகிர்வதும் ஹார்டின் விடுவதும் அதே முஸ்லிம்கள்தான். இது ஒருவகையில் ரத்தம் தக்காளிச் சட்னி மொமண்ட்தான் என்பது இவர்களுக்குப் புரியவில்லை.

கடந்தவாரம் ஹரித்துவாரில் நடந்த ஒரு இந்துத்துவ மாநாட்டில் நூறு இந்துக்கள் சேர்ந்து இருபது லட்சம் இஸ்லாமியர்களை கொல்ல வேண்டும் என்று பூஜா சகுந்த் பாண்டே என்ற ஒரு சாமியாரினி பேசியிருக்கிறார்.

விடுதலைப்புலிகள் தலைவன் பிரபாகரனைப்போல் ஆயுதம் எடுத்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவிப்போர்க்கு நூறுகோடி ரூபாய் பரிசு தருவதாக சுவாமி ஆனந்த் சொரூப் என்பவர் கொக்கரிக்கிறார்.

இந்தப் பேச்சிற்காக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டிய உத்தர்காண்ட் முதலமைச்சர் அதே ஆனந்த் சொரூப் என்ற சாமியாரின் காலில் விழுந்து ஆசி பெறுகிறார். இதையெல்லாம் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோடி கண்டுகொண்டதாகவோ, கண்டித்ததாகவோ எந்த தகவலும் இல்லை.

இஸ்லாமிய இன அழிப்பிற்கான செயல்திட்டம் இந்தியாவில் தொடங்கிவிட்டாக சந்தேகப்பட்டு தலையங்கம் எழுதியுள்ளது நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை. இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியிலும் சீமானை தூக்கி கொண்டாடும் ஒரு இஸ்லாமியர்கள் கூட்டத்தை நினைத்துப் பார்த்தால் பாவமாக இருக்கிறது.

உலகின் இறுதி நாளுக்கு முன்பாக இஸ்லாமிய இனத்தினர், யூத இனத்தினரை வெற்றிகொள்வார்கள் என்ற நபிமொழியைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த பெண்மணியிடம் ஒரு பத்திரிகையாளர் கேள்வி கேட்டார்.

ஜும்மா (வெள்ளிக்கிழமை) தொழுகையில் கலந்துகொள்ளும் எண்ணிக்கைக்கு நிகரான மக்கள் கூட்டம் சுபு (அதிகாலை) தொழுகையில் கலந்து கொள்ளும் நாளுக்குப் பிறகுதான் உலகின் இறுதிநாள் வருமென்ற நபிமொழியும் உண்டு. அதற்கான சாத்தியம் இப்போதைக்கு இல்லை. அவ்வாறு வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று பதில் சொன்னாராம் அந்த இஸ்ரேலிய அமைச்சர்.

பிற மதத்தினர் இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் புரிந்து வைத்திருக்கும் அளவுக்காவது இஸ்லாமியர்கள் தங்களைப்பற்றிய புரிதலோடு இருக்கவேண்டும் என்பதே நமது ஆவல்.

-Arulraj

Leave A Reply