பார்ப்பனரும் சூத்திரரும் சமமா? – நீங்களே பாருங்களேன் – வன நீலி

Share
எத்தனை நூற்றாண்டுகளாய் எங்கள் கதைகளும் சினிமாக்களும் உங்கள் அக்ரஹாரத்தையே சுற்றி வந்தன என்று…
அப்பளமோ, வடகமோ, புளியோதரையோ, பில்டர் காஃபியோ உங்கள் பெயரை வைத்ததால்தான் வாங்கிச் சாப்பிட்டோம்…
எங்கள் நிறம் மறந்து வெள்ளை நிறம்தான் அழகின் அடையாளம் என்றோம்…
தமிழைத் திக்கித் திக்கிப் பேசும் அயல் மாநிலத்தவரையும் உங்களையும் ஆஹோ ஓஹோ என்றோம்…
கட்டிய மனைவியை சந்தேகப் பட்டாலும், பெற்ற பிள்ளைகளை கானகத்தில் விட்டாலும், ராமனைப்
போல் கணவன் வேண்டுமென்றோம்…
தான் ராமனென நிரூபிக்க அரும்பாடு பட்டார்கள் எங்கள் ஆண்கள்…
தோட்டத்துப் பிஞ்சையும் பூவையும் குரங்குகள் பிய்த்துப் போட்டாலும் ராமா ராமா என்று இன்றுவரை கன்னத்தில் போட்டுக் கொண்டிருக்கிறோம்…
நன்றாக யோசித்துப் பாருங்கள். எப்பொழுது நீங்களும் நாங்களும் வேறெனக் கண்டு வெறுக்க ஆரம்பித்தோம்?
தீட்டிய மரத்தில் கூர்பார்க்க நீங்கள் துணிந்த போது…
சுதாரித்தோம் & சொரணை கொண்டோம்!
பெரியார் சொன்ன போதோ…
பேரறிஞர் சொன்ன போதோ…
கலைஞர் சொன்ன போதோ…
நாங்கள் கண்டு கொள்ளவில்லை என்பதைத்தான் அவர்கள் கால கதைக்களங்களும் திரைக்களங்களும் இன்றும் எங்களுக்கு எடுத்துக் காட்டுகின்றன.
நாங்களும் எங்கள் அப்பன்களும், பாட்டVdகளும் பெருந்தன்மையானவர்கள்….
அர்ப்பனுக்கு வாழ்வு வந்து அர்த்த ராத்திரியில் நீங்கள் குடைபிடித்ததை கண்டு கொள்ளவில்லை.
நிறைகுட மனநிலை எங்களுக்கு!
பொழச்சுப் போறான் போ என்று விட்டிருந்தோம்.
ஆனால் இன்று எங்கள் பிள்ளைகளுக்கு உங்களைப் பிடிக்கவில்லை.
உங்களவாக்களின் உணவுபேதம், நிறபேதம், மொழிபேதம், சாதி பேதம், மதபேதம் என அத்தனையையும் ஊடுறுவிப் பார்க்கிறார்கள் அவர்கள்.
இரண்டாயிரம் ரூபாய் போன் வாங்க இருபது கோணத்தில் யோசிக்கிறார்கள்.
நீங்கள் எந்த இயக்கத்தில் இருந்தாலும் மேல்சாதிப் பணக்காரப் பார்வையும் கீழ்சாதி ஏளனப் பார்வையும் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளீர்கள்.
பணத்தில் சமமென்றால் நிறத்தில் தாழ்த்துவீர்கள்…
நிறத்தில் நிகரென்றால் பிறப்பில் ஒதுக்குவீர்கள்….
மதத்தில் மொழியில் என எங்களை எப்பொழுதும் ஏளனமாய் மட்டுமே பார்ப்பீர்கள் என்பதை தெள்ளத்தெளிவாய் உணர்ந்திருக்கின்றனர் எங்கள் வாரிசுகள்.
ஒன்றிரண்டு எறும்போ பல்லியோ கரப்பானோ வீட்டுக்குள் அலையும்போது கண்டு கொள்ள மாட்டோம். அதன் ஆக்ரமிப்பும் அக்ரமமும் அதிகரிக்கும்போது கண்டு கொல்கிறோம்.
நீங்கள் எங்களை அண்டிப்பிழைக்க வந்தீர் என்ற நினைவு உங்களுக்கு இருந்தவரை கோயில் உண்டியலிலும் போட்டோம் உங்கள் ஜீவனத்திற்கு தட்டிலும் போட்டோம்.
வெள்ளைத் தோலையும்,வேற்று மொழியையும் கண்டு நாங்கள் வாயைப் பிளந்ததின் வினையை ஆங்கிலேயன் காலம்முதலே அனுபவிக்கின்றோம்.
நாங்கள் ஒருபோதும் உங்களை எதிரியாக, ஏன் சமமாகக்கூட பார்க்காமல் உயர்வாகத்தான் பார்த்தோம்.
சாமிக்கு அருகே அமர்த்திவைத்து தோளில் சுமந்தோம். அப்போதும் நீங்கள் எங்கள் காதைக் கடித்தீர்கள். இப்போதும் நாங்கள் உங்களை வெறுக்கவில்லை. எதிர்க்கிறோம்.
வெறுத்தால் உங்களைப்போல் தீமை செய்திருப்போம். புரிந்து நடந்து கொள்ளுங்கள். இல்லையேல் எதிர்காலம் விரைவில் புரியவைக்கும்…

Leave A Reply