உலகின் முதல் பெண் பிரதமர் காலத்துப் பஞ்சம்- எஸ்தர்

Share

1971-1972 ஆண்டுகளில் இலங்கையில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம் இடம்பெற்றது .

இடதுசாரிகளின் அரசியல் செயல்பாட்டினால் மூடியபொருளாதாரத்தின் செயற்பாடுகள் இலங்கைக்கு உள்ளே நுழைந்தது. இதன் நிமித்தம் இன்றுவரை நிலம் இழந்த மக்களாகிய மலையக மக்கள் தான் இவ் இடதுசாராகளின் ஆட்சிக்காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களே. இந்தியாவில் உண்டான பஞ்சமும் உணவின்மையாலும் வெளியே தள்ளப்பட்ட தென்னிந்தியாவின் மக்கள் கூட்டம் பெரிய கங்காணிகளின் பசப்பு வார்த்தைளை நம்பி இலங்கைக்கு வந்தது இங்கேயும் பெரும் பொருளாதார சமூக அரசியல் சிக்கலில் மாட்டிக்கொண்டதோடு உணவைக்கூட பெற்றுக்கொள்ளமுடியாத துர்பாக்கிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டார்கள்.

உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமைக்குரிய சிறீமா பண்டாரநாயக்கவின் ஆட்சியின்போது இலங்கையில் புதிய அரசியல் யாப்பு கொல்வின் ஆர் டி சில்வா தலைமையில் எழுதப்பட்டது.

அதில் சோல்பரி யாப்பில் இருந்த சகல சிறுபான்மை மக்களின் உரிமைகளை புறம் தள்ளியும் தனி சிங்கள இனவாதத்தை யும் புத்த தர்மத்தை கட்டிக்காக்கும் யாப்பாகவும் இடதுசாரி சிந்தனையயாளர்களான கொல்வின் ஆர் டி சில்வா பீற்றகெனமன் முதலானவர்களின் தலைமையின் கீழே யாப்பு எழுதப்பட்டது.

கம்யூனிச பொருளாதாரம் எனப்படும் உள்ளூர் உற்பத்திகளைக்கொடுத்த. தன்னிறைவு வெளிநாட்டுப் பொருட்களுக்கு மூடுவிழா என்ற மேற்கத்தைய நாடுகளில் பெரும் மமாற்றத்தை ஏற்படுத்திய கம்யூனிச மாக்கிய கோட்பாடுகள் எமது இலங்கைக்குள்ளும் நுழைந்தது.

இவ் சிந்தனை செயல்பாட்டால் பாதிக்கப்பட்டது மலையகதமிழர்களே காரணம் நாட்டின் இறக்குமதியை முடக்கி சிறீமாவினால் “குப்பைமேட்டிலும் குண்டுமணி”

என்ற தொனிப்பொருளில் குப்பைமேடுகளிலும் உணவை பயிர் செய்ய முடியும் என்ற கருத்தை மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டது. அத்தனை குப்பைமேடுகளையும் விவசாய நிலமாக மாற்ற முடியும் ஏன் நாம் வெளிநாடுகளிலுருந்து கொண்டு வந்து சாப்பிடவேண்டும் என்றக் கருத்தை சிங்கள மக்களிடம் கொண்டுச் சென்றார்கள்.

இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்துக் கொண்டிருந்த கோதுமை மா முதலில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் அன்றும் எப்படி இவங்கை அரசினால் பார்த்தும் பாரா முகமாக இருக்கும் மலையக மக்கள் இறக்குமதி செய்யப்பட்ட உணவுப்பொருட்களான கோதுமை உருளைக்கிளழங்கு பருப்பு முதலானவற்றை இழந்தனர். இந்நிலையில் மலையகத்தில் வரலாறு காணாத பஞ்சம் தோட்டங்கள் எங்கும் தலைவிரித்தாடியது.

மலையக மக்கள் எதிர்பாராத உணவுவற்றாக் குறையில் விழுந்தார்கள். பஞ்சம் பிழைக்க வந்த மலையக இந்தியாவம்சாவளி மக்கள் பஞ்சத்தால் செத்தார்கள்.

என்னுடைய தாயாருக்கு அப்போது 18 வயது அவர் பின்வருமாறு தன்னுடைய கவலைகளையும் அனுபவத்தையும் பகிர்ந்துக்கொண்டார்.

அப்போது அவர் வெளிஓயா அட்டன் மேற்ரிமேற்பிரிவில் வசித்து வந்துள்ளார். மக்கள் பஞசத்தில் திணறிக் கொண்டிருந்த நேரமது. அவ் பஞ்சத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் மலையக மக்கள் ஏனெனில் தென்னிலங்கை மற்றும் வடகிழக்கு மக்களுக்கு நிலம் சொந்தமாகவோ குத்தகைக்கோ இருந்தது.

அதனால் அவர்களால் நெல்லை அறுவடை செய்ய முடிந்தது விவசாயம் செய்ய முடிந்தது வற்றாளை மவள்ளி உருளைக்கிழங்குகளை பயிரிட முடிந்தது அவர்களால் அதனைப் பெற முடிந்தது. அத்தோடு தென்னை நுங்கு பனை முலானவைகளும் கிடைத்தது.

இவை எதுவுமேயின்றி வெறும் தேயிலைக்காடுகளே மலையக மக்களைச் சுற்றியிருந்தது.

எனது தாயார் சொன்னார் நாங்கள் 18 வயது சாப்பிடும் வயதிலே இப்பஞ்சத்தில் அடிட்படோம். பஞ்சமானது எங்களை ஆட்டிப்படைத்தது. ஒரு கொத்து அரிசி அரைக்கொத்து அரிசி ஆளுக்கு இரண்டு யார் துணி அதாவது இரண்டு மீற்றர் துணி, ஆண்களுக்கு ஒரு காக்கித்துணியில் தைத்த அரைக்காற்சட்டை

உணவுக்காக அஞ்சு வருசம் பழமையான மரவள்ளிக்கிழங்கு கேப்பை கொட்டை மக்காச்சோளம் என்பவற்றை தோட்ட நிர்வாகம் எங்களுக்கு வழங்கியது எவ்வித மாப்பொருட்களும் கிடைப்பதில்லை. கேப்பைக்கொட்டையை தருவார்கள் அதனைக் கொண்டு வந்து அவித்து தீட்டி இடித்து கஞ்சி செய்வதற்குள் பசியும் உயிரும் போய் விடுகின்றது. அத்தோடு அவர்கள் தரும் இவ் உணவை உரவும் முடியாது மந்தபோசாக்கும் பட்டினியும் மக்கள் இறப்பும் கண்முன்னே நடந்துக்கொண்டிருந்ததை தான் கண்டதாக இப்போது அவர் உயிரோடிருந்து சாட்சியாக சொல்கிறார்.

சாப்பிட இயலாதவர்கள் செத்தார்கள் அம்மாவின் பக்கத்து தோட்டமான அகரஓயாவில் சிவனு சோசியர் என்பவர் இருந்தார் அவர் ஒரு சோஜியர் அவருக்கு பஞ்சத்தால் நிறைய பாதிப்பினை அடைந்ததோடு பட்டினியின் கொடுமை தாங்காது மாட்டுக்கு வைத்திருந்த புண்ணாக்கினை சாப்பிட்டு உடல் வீங்கி செத்ததை தான் கண்கூடாகக் கண்டதாகக் கூறினார்.

இதே வேளை வெலிஓயாவில் ஆறு பிள்ளைகளின் தந்தை தன் பிள்ளைகளின் பட்டினியின் கதறலை கேட்க முடியாது குயில்வத்தைக்கு பாண் வாங்கி வந்துள்ளார் அப்போது ஒரு இறாத்தல் பாணை வாங்கிக் கொண்ட குயில் வத்தையிலிருந்து வந்த போது அவரை ஒரு பசியோடு இருநத சிலர் தாக்கிவிட்டு பாணை பிடுங்கிக் கொண்டு ஓடியுள்ளார்கள் நீண்ட. நாள் பட்டினியால் உடல் வலுவிழந்த அவ் ஆறு பிள்ளைகளின் தகப்பன் அவ்விடத்திலே மரணமடைந்துள்ளால் இது மிகப்பெரிய உளவியவில் தாக்கத்தை தனக்கு ஏற்படுத்தியதாக எனது அம்மா தன்னோடு மிகவும் கண்ணீரோடு பகிர்ந்துக்கொண்டார்.

மேலும் இப்பஞ்சமானது மக்களை நாளுக்கு நாள் அல்ல கிட்டத்தட்ட அய்ந்து வருசம் மக்களை கொன்று புதைத்தது அதுதான் இடதுசாரிகளின் கம்யூனிசத்தின் மத்துவ ஆட்சியாக சிறீமாவின் காலம் காணப்பட்டது. தேயிலைக்கொழுந்து பறந்துக்கொண்டிருந்த பெண்கள் மரவள்ளிக்கிழங்கை யிலை கொழுந்து பறிக்கும் இடைவேளையின் உணவு வேளையிவ் உண்டு எல்லோருமே மயங்கி விழுந்து விட்டார்கள். சிறுவர்கள் நாம் தற்போது காணும் சோமாலியா எத்தியோப்பியா சிறுவர்களைப்போல் வயிறு மட்டும் பெருத்து உடல் சிறுத்துக் கிடந்துள்ளார்கள். சிறுவர்களுக்கு அரிசிக்கஞ்சி கேப்பை கஞ்சியே உணவாகக் கிடைக்கப்பெற்றதைக் காணலாம்.

2 கொத்து அரிசிக்கு மேல் வீடுகளில் இருந்தால் வீடுகளில் இருப்பது தெரிந்தால் பொலிசார் மக்களை கைது செய்வார்கள் மலையகத்தில் பட்டினி தாண்டவம் ஆடியது பலர்செத்து மடிந்தார்கள்.

இவ் சிறீமா காலத்து பஞ்சத்தில் நிறைய மலையக இளைஞர் பசி பொறுக்க முடியாமல் வடகிழக்கு தமிழ்ப் பிரதேசங்களுக்கு ஓடிப்போனார்கள் தென்னிலங்கயின் சிங்கள குடிகளின் விவசாய நிலங்களில் வேலை செய்யவும் சென்றார்கள் சொற்ப கூலியில் கிடைக்கும் உணவே அன்று வயல்களுக்கு பெரும் புண்ணியமாக தெரிந்தது இவ்வாறு வடகிழக்கு ஓடிய மலையக இளைஞர்கள் பிற்காலத்தில் அங்குள்ள தமிழ் பெண்களை திருமணம் செய்தார்கள் பலர் சாதிவெறியால் குடும்பத்தவர்களால் கொலை செய்யப்பட்டார்கள்.

இன்னும் ஒரு வரலாறு அவர்கள் தமிழீழப்போராட்ட.தில் வடக்கு கிழக்கு தமீழ விடுதலை போராட்டத்தில் இணைந்து போராடி உயிரையும் மண்ணுக்காகக் கொடுத்தார்கள். இதுவே சிறீமாவின் பஞ்சக்காலத்து உன்னத வரலாறு

மலையக மக்கள் கள்ளத்தோணிகள் சிங்களவர்களால் வெறுக்கப்பட்ட. “வத்து மினிசு”‘ இன்றும் அதே மனநிலையில் இருக்கிறார்கள்.தோட்டக்காட்டான் என்ற மிகப்பெரிய இன பாகுபாட்டையும் இக் காலத்தில் மலையக மக்கள் அனுபவித்தார்கள்.

இடதுசாரிசம் என்பது சகலருக்கும் சகலமும் கிடைக்கவேணடும் என்றக்கோட்பாடேயாகும். குறிப்பாக உழைக்கும் வர்க்கமே உலகில் உன்னம் என்ற இவ் சிந்தாந்தம் மலையக மக்களுடைய வாழ்வில் மட்டும் பொய்யாகிப போனது.

கம்யூனிசத்தின் காலுக்குக்கீழே விழுந்து நசுக்கப்பட்டு செத்தொழிந்த மக்கள் மலையக மக்கள் கூட்டமே.

அவர்களால் இவ் துயரை சுமக்க முடியவில்லை .

அவர்களுக்கு உணவு கிடைக்காது, இன்று வரை உரிமையும் கிடைக்காது கைவிடப்பட்ட லயத்துக் காம்பிராவில் குளிரில் கதறிக்கொடிருக்கிறார்கள் அய்ந்து வருடம் ஆட்சியில் மக்கள் நம்பி வந்த தேசம் அவர்களை கைவிட்டது மக்கள் உணவின்றி தொழில் செய்யும் அவலமும் கண்முன்னே தன் குழந்தைகள் செத்தொழிந்த துயரையுமே காணும் பாக்கியம் இம் மக்களுக்கு அரசாங்கம் வழங்கியது தான் மிச்சம்.

அவர்களின் பட்டினியை விட அவர்களின் ஓன்றுக்கும் உதவாத கோட்பாடு தத்துவங்களே பெரிதென தெரிந்ததூ. உயிர் வாழ்வதே ஒரு மனிதனின் அடிப்படை தேவை உணவைக்கூட அய்ந்து வருடங்களால் அவர்களால் வழங்க முடியாதுபோனாலும் அவ் துரோகத்தையும் மறந்து மக்கள் இன்றும் இந்த நாட்டுக்காக அன்று எஞ்சிய மக்கள் இன்று வரை பரம்பரை பரம்பரையாக இந்நாட்டுக்கு வேறுபோக்கிடமின்றி உழைத்துக் கொடுத்துக்கொண்டுதானே தான் இருக்கிறார்கள்.

ஓ எங்கள் எஜமானர்களே உங்கள் புறக்கணிப்பை விட துரோகத்தைவிட இந்த குளிர் கொடிதல்ல.

Leave A Reply