தமிழ் சினிமாவில் என்றும் மாறாதவை – எழுத்தாளர் சுஜாதா சொன்னவை

Share

1. இரட்டை வேடத்தில் எப்போதுமே ஒருவர் கெட்டவர்.

2. பாம் வெடிப்பதைத் தடுக்க ஹீரோ எந்த ஒயரை வேண்டுமானாலும் கட் பண்ணலாம் வெடிக்காது.

3. எத்தனை பேர் ஹீரோவைத் தாக்க வந்தாலும், ஒரு ஒருவராக வந்துதான் உதைபடுவார்கள்.

4. இரவு நேரத்தில் எல்லா விளக்குகளையும் அணைத்த பின்பும் வீடு முழுதும் ஊதா கலரில் தெரியும்.

5. நேர்மையான போலீஸ் அதிகாரியைக் காட்டினால் நிச்சயமாக அவர் கொல்லப்படுவார்.

6. வில்லன் ஹீரோவை நேராக சுட்டோ, கத்தியால் குத்தியோ கொல்ல மாட்டார். ஹீரோ தப்பிக்க முப்பது நிமிடமாவது இருக்கும்படி சுற்றி வளைத்துதான் கொல்ல முயற்சிப்பான்.

7. ஹீரோ வில்லனிடம் செமயாக அடி வாங்கும் போது வலிக்கவே வலிக்காது. ஆனால் ஹீரோயின் பஞ்சு ஒத்தடம் கொடுக்கும் போது மட்டும் ஸ்…. ஸ்..ஆ என்பான்.

8. ஒரு பெரிய கட்டடத்தின் ஜன்னல் கண்ணாடியைக் காட்டினால் அதை உடைத்துக் கொண்டு யாராவது விழுவார்.

9. ஹீரோவோ ஹீரோயினோ ரோட்டில் நடனமாடத் துவங்கினால் தெருவில் போகும் அனைவரும் அதே தாளத்தில் ஒரேமாதிரி நடனமாடுவார்கள்.

10. போலீஸ் உயர் அதிகாரி நல்லவர் என்றால் கீழே இருக்கும். போலீஸ்காரர்கள் கெட்டவர்களாக இருப்பர். உயர் அதிகாரி கெட்டவர் என்றால் இவர்கள் நல்லவர்கள்.

11. உணர்ச்சி வசப்படும் காட்சிகளில் திடீரென மின்னல் வெட்ட மழை வந்தே ஆகவேண்டும்.

12. பாடல் காட்சிகளில் ஒருவரி மயிலாப்பூரிலும், அடுத்த வரி ஐரோப்பாவிலும், அடுத்தவரி மலேசியாவிலும் பாடப்படும்.

13. ஒரே பாட்டு பாடிக்கொண்டிருக்கையில் உடை மாறும், உடையின் நிறம் மாறும்.

14. சட்டென்று எல்லா மியூசிக்கும் நின்று விட்டால் யாரோ செத்துப் போய்விட்டார்கள் என்று அர்த்தம்.

15. கோர்ட்டில் யார் வேண்டுமானாலும் வழக்கின் எந்தக் கட்டத்திலும் நுழைந்து, உடனே சாட்சி சொல்லலாம். கோர்ட் வாசற்படியில் நின்றுகூட சாட்சி சொல்லலாம்.

16. “முகூர்த்ததுக்கு நேரமாறது பொண்ண வரச்சொல்லுங்கோ” என சாஸ்திரிகள் அவசரப்படுத்தினால் பெண் காணாமல் போய் விட்டாள் என எதிர்பார்க்கலாம்.

17. கல்யாண காட்சியில் தாலியைக் கட்டப்போகும் சமயம் “நிறுத்துங்க” என்ற குரல் எப்படியும் ஒலித்தே தீரும்.

18. ஹீரோ ஏழை என்றால் பணக்கார பெண்ணையும், பணக்காரன் என்றால் ஏழைப் பெண்ணையுமே காதலிப்பான்.

19. வில்லன் என்றாலே நிச்சயம் ஏதாவது கள்ளக்கடத்தல் செய்வான்.

20. ஹீரோ முதல் பாதி கிராமத்திலிருந்தால் இரண்டாம் பாதி நகரத்திற்கு வருவார்.

இன்னும் நிறைய இருக்கிறது….!

Muhi Bullah S

Leave A Reply