புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவின் கற்பனை நயம்… செஸ் போர்டில் ஒரு நாட்டியம். #chess #kavitharamu

Share

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முயற்சியில் புதுக்கோட்டை மற்றும் சென்னை கலைஞர்களைக் கொண்டு 44 வது செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு பாடலை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உருவாக்கியிருந்தார்.

செஸ் விளையாட்டில் வரும் காயின்களை போல் கலைஞர்கள் வேடம் அணிந்து போர் புரிந்து சதுரங்கத்தில் வெற்றி அடைவது எப்படி என்பதை விளக்கி கூறும் வகையில் காட்சியுடன் கூடிய பாடலை வெளியிட்டுள்ளது. அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில் அந்த வீடியோவானது தமிழக முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் வெளியிட்டப்பட்டது. அந்த பாடல் தற்பொழுது வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக உள்ள கவிதா ராமு அவரது நான்கு வயதிலிருந்தே பரதநாட்டியத்தின் மீது உள்ள காதலால் பரதம் கற்ற நிலையில் அவரது எட்டு வயதில் சிதம்பரத்தில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டில் இவர் ஆடிய பரதநாட்டியம் அனைவரது மனதையும்‌ கவர்ந்தது. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு சீன அதிபர் ஜிஜிபிங் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற போது சீன அதிபரை வரவேற்க தமிழக பாரம்பரிய நடனத்தை ஏற்பாடு செய்து பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் பாராட்டை ஆட்சியர் கவிதா ராமு பெற்றார்.

இந்நிலையில் சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் நடைபெற உள்ளதை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வித்தியாசமாக மாவட்ட ஆட்சியர் கவிதா நடத்தினார். அதில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற 8 மணி நேர இடைவிடாத டான்ஸ் மாரத்தானில் 1088 பங்கேற்பாளர்கள் பங்கேற்று சதுரங்கம் குறித்து 2003 செய்திகளை சொல்லி ஆசிய புக் ஆப் ரெகார்டில் இடம்பெற்று சாதனை படைத்தார்.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு புதுக்கோட்டை மற்றும் சென்னை கலைஞர்களைக் கொண்டு பிரம்மாண்டமான முறையில் தயாரித்த செஸ் நடன இசை காட்சியை முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

அதில் பின்னணி இசையில் சதுரங்கத்தில் வரும் கருப்பு வெள்ளை காயின்களை போல் இரு பிரிவுகளாக பிரிந்த கலைஞர்கள் ராஜா ராணி யானை குதிரை மந்திரி சிப்பாய்கள் என வேடமனிந்து சதுரங்கத்தில் எப்படி செயல்பட்டு வெற்றி அடைவது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் கலைஞர்களைக் கொண்டு சதுரங்க போர்டில் விளையாடுவதை போல் காட்சியை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Leave A Reply