+2 படித்திருந்தால் போதும்.. பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை ரெடியா இருக்கு

Share

சென்னை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Lab Attender, Technical Officer, Assistant, Programmer ஆகிய பணியிடங்களை நிரம்புவது குறித்த அறிவிப்பைப் பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள் -15

பணி வாரியாக:

Technical Officer 4

Technical Assistant 9

Programmer 1

Lab attender 1

கல்வித் தகுதி:

Technical Officer பணிக்குச் சம்பந்தப்பட்ட பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Technical Assistant பணிக்குச் சம்பந்தப்பட்ட பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Programmer பணிக்குச் சம்பந்தப்பட்ட பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Lab attender +2ஆம் வகுப்பில் அறிவியல் பாடத்திட்டத்தில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ. 5000 – ரூ.50,000 வரை

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து Director, Internal Quality Assurance Cell, Bharathiar University, Coimbatore-641046 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அதேபோல rct.iqac@buc.edu.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி – ஆகஸ்ட் 23, 2021

இது குறித்துக் கூடுதல் விவரங்களை
https://cdn.b-u.ac.in/recruitment/2021/iqac_nt_notification.pdf

விண்ணப்பிக்க

https://www.b-u.ac.in/Home/UniRecruitments

Leave A Reply