டாப் 100 பெண்கள் பட்டியலில் பிடித்த இந்திரா காந்தி

Share

தன் செயல்கள் மற்றும் ஆளுமையினால் உலகெங்கிலும் செல்வாக்கு நிறைந்த பெண்கள் இவர்களே என பெருமிதத்தோடு வெளியிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும், சுதந்திரத்திற்காகப் போராடிய அம்ரித் கவுர் ஆகிய இரு வலிமைப் பெண்கள் அமெரிக்காவின் வார இதழான டைம் பத்திரிக்கையில் இடம்பிடித்துள்ளனர்.

டைம் இதழ், பெண்கள் தினச் சிறப்பிதழை வெளியிட்டுள்ளது. அதில் உலக அளவில் கடந்த 100 ஆண்டுகளில் சாதனைப் படைத்த பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த இந்திரா காந்தியும், அம்ரித் கவுரும் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் அதில் அம்ரிதா கவுரை 1947 ஆம் ஆண்டின் சிறந்த பெண் என்றும் இந்திரா காந்தியை 1976 ஆண்டின் சிறந்த பெண் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதில் இந்திரா காந்தி குறித்த குறிப்பில் : ”இந்தியாவின் பேரரசி. இந்தியாவின் சிறந்த சர்வாதிகாரி. இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் மகள். கவர்ந்திருக்கும் ஆளுமைக் கொண்டவர். அவருடைய ஆட்சியில் பொருளாதார நெருக்கடிகள், போராட்டங்கள் நிறைந்த சவாலாக இருந்தது. ஒருகட்டத்தில் அவருடைய தேர்தல் தேர்வு செல்லாது என்று போராட்டங்கள் நிகழ்ந்த நிலையில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார்” என்று கூறியுள்ளது.

அம்ரிதா கவுர் குறிப்பில் “ஆக்ஸ்போர்டில் படித்த பிறகு 1918 ஆண்டு இந்தியா திரும்பிய இளம் இளவரசி. மகாத்மா காந்தியின் போதனைகளால் ஈர்க்கப்பட்டவர். கபூர்தலா , ராஜ்குமாரி கவுரி தம்பதியின் அரச குடும்பத்தில் பிறந்தவர், இந்தியா தனது காலனித்துவ உறவுகள் மற்றும் அடக்குமுறைகளிலிருந்து விடுபட உதவுவதே தனது வாழ்க்கையின் நோக்கம் என்று முடிவு செய்தவர்.அவர் சமூகப் பிரச்சினைகளையும் கையிலெடுத்தார். பெண்களின் கல்வி, வாக்களிக்கும் உரிமை, விவாகரத்து , குழந்தை திருமணம் என சமூகப் பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்தார்.

1947 இல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு, கவுர் அமைச்சரவையில் சேர்ந்த முதல் பெண்மணி. சுகாதார அமைச்சராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். அப்போது அவர் குழந்தைகள் நல கவுன்சிலை நிறுவினார். மலேரியாவைத் தடுக்க பிரச்சாரம் செய்து நூறாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றினார் என்று கூறியுள்ளது.

இப்படி இவர்களை தன் செயல்கள் மற்றும் ஆளுமையினால் உலகெங்கிலும் செல்வாக்கு நிறைந்த பெண்கள் இவர்களே என கடந்த 100 ஆண்டுகளில் சாதித்த 100 பெண்களை பட்டியலிட்டுள்ளது. இந்த பெண்கள் சிறப்பிதழுக்காக 600 பேர் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து சிறந்தவர்கள் யார் என 100 பேரை கண்டறிந்து பட்டியலிட்டுள்ளது.

Leave A Reply