இஞ்சியின் நண்மைகள்

இஞ்சிச் சாறு குடித்து வந்தால் நுரையீரல் சுத்தமாகும். சளியை ஒழித்து விடும். வாயுத் தொல்லை என்பதே வராது. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைத்துவிடும்.
 

இஞ்சியை சாறு எடுத்து,அதில் தேன்கலந்து குடித்து வந்தால் செரிமான மண்டலத்தை சீராக செயல்பட முடியாமல், நிலைமை மிகவும் மோசமாக உள்ளதை சரிசெய்யமுடியும்.
 

இஞ்சியை சாறாக்கி காலையில் குடிக்க வேண்டும். சாறு எடுத்தவுடனே பத்து நிமிஷம்அப்பிடியே வத்திருந்தால் அடியிலவண்டல் படியும். அதை அப்பிடியே விட்டுட்டு மேலதெளிஞ்ச நீரை மட்டும் எடுத்து குடிக்கணும். 
 

காலையில் வெறும் வயித்துல குடிச்சா நல்லது. வெறுமனேயும் குடிக்கலாம், தேன் சேர்த்தும் குடிக்கலாம். டீ ப்போட்டும்குடிக்கலாம். இப்பிடி குடிக்கிறதுனால அஜீரணக்கோளாறு சரியாகும்.
 

இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
 

இஞ்சி சாறுடன்,வெங்காய சாறுகலந்து,காலையில் ஒருகரண்டி வீதம்,ஒரு வாரம் குடித்துவர, நீரிழிவு குறையும்.
 

இஞ்சி சாறு,எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரைஅவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர,தொடக்கத்தில்உள்ள ஆஸ்துமா,இரைப்பு, இருமல் குணமாகும்.

Previous Post Next Post

نموذج الاتصال