இட்லி மாவு போண்டா

தேவையான பொருட்கள்: 

இட்லி மாவு – 1 கப்

கடலைமாவு – 2 மேஜைக்கரண்டி

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 1

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – சிறிதளவு

தண்ணீர் – 2 மேஜைக்கரண்டி

பொரிப்பதற்கு எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை: இட்லி மாவு தேவையான அளவு மற்றும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில்  இட்லி மாவு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கடலைமாவு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் இரண்டு  மேஜைக்கரண்டி தண்ணீரும் சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தயார் நிலையில் வைத்துள்ள உருண்டைகளை போடவும். ஒரு புறம் வெந்ததும்  மறுபுறம் திருப்பி போடவும். இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும். மீதமுள்ள எல்லா உருண்டைகளையும் இதே முறையில் சுட்டு  எடுக்கவும். சுவையான இட்லி மாவு போண்டா தயார்.

Previous Post Next Post

نموذج الاتصال