புடலங்காய் கூட்டு செய்ய தேவையான பொருட்கள்
1½ கப் புடலங்காய்
¼ கப் கடலை பருப்பு
¼ கப் துருவிய தேங்காய்
1 மேஜைக்கரண்டி அரிசி மாவு
2 மேஜைக்கரண்டி பாசி பருப்பு
2 சின்ன வெங்காயம்
2 பச்சை மிளகாய்
1 மேஜைக்கரண்டி சீரகம்
½ மேஜைக்கரண்டி சீரக தூள்
¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
½ மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு
¼ மேஜைக்கரண்டி கடுகு
1 சிட்டிகை பெருங்காய தூள்
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு தேஉப்பு
சிறிதளவு கருவேப்பிலை
புடலங்காய் கூட்டு செய்முறை
முதலில் வெங்காயம், புடலங்காய், பச்சை மிளகாய், மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, தேங்காயை துருவி, கடலை பருப்பு மற்றும் பாசி பருப்பை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 30 லிருந்து 45 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
45 நிமிடத்திற்கு பிறகு ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் ஊற வைத்திருக்கும் கடலை பருப்பு மற்றும் பாசி பருப்பை மீண்டும் ஒரு முறை நன்கு சுத்தம் செய்து போடவும்.
பின்பு அதில் கடலை பருப்பு முழுகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் தூள், சீரக தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் புடலங்காயை போட்டு ஒரு மூடி போட்டு சுமார் 2 விசில் வரும் வரை அதை வேக விடவும். (புடலங்காயை கடைசியாகவே போடவும் அப்பொழுது தான் அது குழைந்து விடாமல் இருக்கும்.)
2 விசில் வருவதற்குள் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காய், நறுக்கி வைத்திருக்கும் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், அரிசி மாவு, மற்றும் ஒரு சிட்டிகை அளவு பெருங்காயத்தை போடவும்.
பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கொற கொறப்பான பதத்திற்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
பிறகு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் புடலங்காயை போட்டு அதனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 5 லிருந்து 6 நிமிடம் வரை அதை கொதிக்க விடவும்.
6 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை அப்படியே அடுப்பில் வைத்திருக்கவும்.
இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்ட பின் அதில் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் அதில் உளுத்தம் பருப்பு மற்றும் கருவேப்பிலை போட்டு உளுத்தம் பருப்பு லேசாக பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும்.
உளுத்தம் பருப்பு லேசாக பொன்னிறமானதும் அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து நாம் செய்து வைத்திருக்கும் புடலங்காய் கூட்டில் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு அதை சுட சுட பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் புடலங்காய் கூட்டு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்