நல்ல அம்மா நல்ல பிள்ளை – 4 – ஆதனூர் சோழன்குழந்தைகளுக்கு ஆசிரியர் யார்?

அதற்கு என்ன செய்வது?

பள்ளியோடும் பள்ளி நடவடிக்கைகளோடும் நாம் உறவு வைத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகள் பள்ளியை விட்டு வந்ததும், இன்று என்ன படித்தாய்? வீட்டுப்பாடம் என்ன கொடுத்து இருக்கிறார்கள்? என்று விசாரிக்க வேண்டும்.

குழந்தைகள் மகிழ்ச்சியாகவும் இயல்பாகவும் இருக்கும் போது, அவர்களது பள்ளி நடவடிக்கைகளை பாந்தமாக விசாரிக்க வேண்டும்.

பக்கத்தில் அமர்ந்திருக்கும் பையன் கிச்சுகிச்சு மூட்டியதில் இருந்து, கோபமாக திட்டியது வரையில்…

ஆசிரியர் நடத்திய பாடத்தில் புரிந்த விஷயத்தில் இருந்து புரியாத விஷயம் வரையில்… உங்களோடு பகிர்ந்து கொள்ள குழந்தைகள் ஆசைப்படுவார்கள்.

உங்களுக்கு என்ன வேலை இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு, பொறுமையாகவும், ஈடுபாட்டுடனும் கேளுங்கள்.

குழந்தைக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களோடு அடிக்கடி சந்திப்பு வைத்துக் கொள்ளுங்கள். கட்டணம் கட்டுவதற்கு மட்டும் பள்ளிக்குப் போனால் போதும். ஏதேனும் முக்கியமான நேரங்களில் மட்டும் பள்ளிக்கு சென்றால் போதும் என்று நினைக்காதீர்கள்.

பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் பங்கெடுங்கள்.

இதுபோன்ற நடவடிக்கைகள், பள்ளியில் படிக்கும் உங்களது குழந்தையை பற்றி மட்டுமல்ல. ஒட்டுமொத்தமாக பள்ளியைப் பற்றியே நாம் நன்றாக தெரிந்து கொள்ள உதவும்.

பள்ளியின் சூழ்நிலை தெரிந்தால், அதில் நமது குழந்தைக்கு சாதகமான அம்சங்கள் மற்றும் பாதகமான அம்சங்களை அறிந்து கொள்ள முடியும். அவற்றுக்கு ஏற்றார்போல நமது குழந்தைக்கு நம்மால் உதவமுடியும்.

தொடரும்.

Previous Post Next Post

نموذج الاتصال