பெருமை பீத்தக் கலையம் - சக்தி ராஜேஸ்வரி



நாங்க எவ்வளவு பெரிய குடும்பம் தெரியுமா?

எந்த சாதி தெரியுமா?

எங்கள் சாதி ஒற்றுமை தெரியுமானு வசனம் பேசுவார்கள்….

பொதுவாகவே கிராமத்தில் இருக்கும் அண்ணன் தம்பி ஒற்றுமை என்னனா,

அப்பன் சொத்த பாகம் பிரிப்பார்கள்..

பாகம் பிரிக்கும் போதே அண்ணன் தம்பிகளுக்குள்ள சண்டை வந்துடும்..இப்படி சண்டை போட்டு கேஸ், கோர்ட்னு போயிட்டு இன்னும் பிரச்சனை தீர்க்காமல் தரிசாக இருக்கும் நிலங்கள் ஆயிரக்கணக்கில்.

ஒருவேளை பாகப்பிரிவினை முடிந்துவிட்டது என்றால்… அந்த மொத்த சொத்துக்கும் ஒரு மோட்டர் கிணறுதான் இருக்கும்…

அந்த மோட்டர் கிணற்றில் முறை தண்ணீர்.. அதாவது அண்ணன் ஒரு நாளைக்கு தம்பி ஒரு நாளைக்கு..

அண்ணன் முறை முடியுது, தம்பி முறை நாளைக்கு.. தம்பி நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சும் வேலை இல்லை. ஆனால் அண்ணன் நிலம் பயிருக்கு அவசியம் தண்ணீர் விட்டே ஆக வேண்டும் என்றாலும் தண்ணீர் பாய்ச்ச கூடாது…

ஒருவேளை மோட்டார் எடுத்துவிட்டா சண்டைதான், அசிங்க அசிங்கமான பேச்சுதான்…

அடுத்து ஒரு வேளை அண்ணணோ தம்பியோ அவர்கள் பரம்பரை நிலத்தை ஒட்டியே ஒரு ஏக்கர் நிலம் வாங்குகிறார்கள் என வைத்துக் கொள்வோம்…

இவர்கள் ஏற்கனவே முறை போட்டுதான் ஆளுக்கொரு நாள் தண்ணீர் பாய்ச்சுகிறார்கள்… ஆனால் அந்த முறை தண்ணீர் கூட புதியதாக வாங்கிய நிலத்திற்கு கொண்டு போக கூடாது..

பாகம் இந்த நிலத்திற்குதான் நீ வாங்கற நிலத்துக்கு எல்லாம் கொண்டு போக கூடாது என குடும்பமே மல்லு கட்டும்…

இதில் படித்து வெளியூரில் வேலையில் இருக்கும் அவர்கள் மகன்களுக்கும் பெருந்தன்மை இருக்காது.. புத்தி சொல்ல மாட்டார்கள். அவர்களும் வந்து சண்டை போடுவார்கள்..

ஒரே தாயின் பாலை குடித்து வளர்ந்த சொந்த அண்ணன் தம்பிகளின் ஒற்றுமையே இந்த யோக்கியதைதான்…

இப்படி பட்ட ஆட்கள்தான் ஜாதி ஒற்றுமை பேசுவார்கள்….

இந்த உறவுகள், சொந்த பந்தம் எல்லாம் நீங்கள் நாசமா போனா உள்ளுக்குள்ள வேணும்டா என்னா பேச்சு பேசினான் என மனசுக்குள்ள சந்தோஷப்பட்டுகிட்டு, அடுத்த நாள் அய்யோ ராஜா என்னடா ஆச்சுனு கண்ணீர் வடிப்பார்கள்…

ஒருவனின் வளர்ச்சியை பார்த்து அசல் நபர், உண்மையான நண்பர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்… ஆனால் அப்படி ஒரு நாளும் தன் உறவுகளின் வளர்ச்சியை விரும்பாதவர்கள்தான் முக்கால்வாசி உறவுகாரர்கள்….

Previous Post Next Post

نموذج الاتصال