நடிகர் அஜித்தின் வீரம் இவ்வளவுதானா? - Vivekanandan Ramadoss


இந்த போட்டோவோட STD என்னனு தெரியுமா? இது தெரியாமலே நெறைய பேரு இந்த போட்டோவ போட்டு Braveனு உருட்டிட்டு இருக்காய்ங்க.

உண்மையில் அஜித் கலைஞர் கருணாநிதியை மேடையிலேயே எதிர்த்துப் பேசினாரா? அஜித் அப்படி என்ன பேசினார்? ஏன் பேசினார்ங்கிறத ஒரு 13 வருசம் ரிவர்ஸ் பண்ணி பாப்போம்.

இப்ப எதுக்காக இத பத்தி பேசுறோம்னா, சமீபத்துல அமைச்சர் துரைமுருகன் ஒரு பேட்டில, அஜித்த பத்தி கேட்டதுக்கு, "யார் அஜித்?" னு கேட்டுட்டாருன்னு அஜித் கன்னிகள்லாம் ட்விட்டர்ல துரைமுருகன கடிச்சி வச்சிட்டு இருக்காய்ங்க.

நடிகர கிண்டல் பண்ணிட்டா ரசிகர்கள் கடிச்சி வைக்குறது எல்லா காலத்துலயும் நடக்குறதுதான்னாலும், "இந்த சம்பவம் ஞாபகமிருக்கா?", "தல யாருன்னு உன் தலைவர் கிட்ட கேட்டுட்டு வா", "கலைஞரையே எதிர்த்து மிரள வைத்த தல"ன்னு இந்த போட்டோவ போட்டு இந்த போட்டோவோட STD என்னன்னே தெரியாம ஃபயர் விட்டுட்டு இருக்கானுங்க. கருணாநிதியை தெறிக்கவிட்ட அஜித்னு கூடவே சேர்ந்து சங்கிகளும் கடிச்சிட்டு இருக்காய்ங்க.

Actualலா கலைஞரோட பாராட்டு விழாவுல அஜித் எதிர்த்து பேசுனது கலைஞர் கருணாநிதிய இல்ல. அஜித் பேசுனது ஈழப் படுகொலைக்காகவும், காவிரி பிரச்சினைக்காவும் போராட்டம், உண்ணாவிரதம்னு நிறைய போராட்டங்கள நடத்துன நடிகர் சங்கம் மற்றும் இயக்குநர் சங்கத்துல இருந்த ஆளுமைகள எதிர்த்து தான். "இவங்களுக்கு எதிரா நடவடிக்கை எடுங்கய்யா, இவங்கள விடாதீங்க ஐயா" அப்டின்னு அஜித் கலைஞர் கருணாநிதி கிட்ட கம்ப்ளெயிண்ட் தான் வாசிச்சிட்டு இருந்தாப்ல.

ஈழப்படுகொலைக்காக தமிழ்நாட்ல இருக்க எல்லா துறையைச் சேர்ந்தவங்களும் போராட்டம் நடத்துனாங்க. சினிமாவை சேர்ந்தவங்களும் போராட்டம் நடத்துனாங்க. அப்போ, "ஈழப் பிரச்சினைக்கு நாம ஏன் போராட்டம் நடத்தனும்"னு கேட்டது ரெண்டு பேர். ஒன்னு இன்று இளைஞர்களால் 'தல'ன்னு அழைக்கப்படும் அஜித். இன்னொன்று தனது படங்களில் பாகிஸ்தான் முஸ்லிம்களை கொதறி எடுத்து தேசபக்தியை தெறிக்கவிட்ட ஆக்சன் கிங் அர்ஜூன்.

இவங்க ரெண்டு பேரும் சொன்னதை சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மீடியாக்களில் கசிய விட்டனர். தமிழ் மக்களோட காசு வேணும், ஆனா தமிழர்களுக்கு ஒரு பிரச்சினைனா நான் ஏன் பேசனும்னு கேப்பியானு பிரச்சினை கிளம்ப இருவரும் முண்டியடித்து உண்ணாவிரதத்திற்கு வந்து சேர்ந்தனர். அந்த கூட்டத்திலும் கூட அஜித் பேசும்போது, "உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு" என்றெல்லாம் டயலாக் பேசிவிட்டு, "சினிமா Industryயை சினிமா Industryயாக இருக்க விடுங்கள்" என்று சொல்லி விட்டு, இந்த நூற்றாண்டின் மிக மோசமான இன அழிப்பைப் பற்றி ஒரு வார்த்தைக்கு கூட வருத்தம் தெரிவிக்காமல் நடையைக் கட்டினார் கட்டாயத்தின் பேரில் வருகை தந்த அஜித்.

அஜித்தின் கோபம் என்பது அந்த காலக்கட்டத்தில், திரைத்துரையினருக்கு சமூக அக்கறை முக்கியம் என்று பல போராட்டங்களை முன்னெடுத்த இயக்குனர்கள் சங்கத்தைச் சேர்ந்த பாரதிராஜா போன்றவர்கள் மீதும், அதற்கு ஒத்துழைத்த நடிகர் சங்க நிர்வாகிகள் மீதும்தான் இருந்தது.

இப்ப கலைஞருக்கு நடத்திய பாராட்டு விழாவுக்கு வருவோம். உண்மையில் அந்த விழாவில் கலைஞர் கருணாநிதிக்கு எதிராக ஒரு வார்த்தை கூட அஜித் பேசவில்லை. "ஈழப்போராட்டத்துக்கும், காவிரி போராட்டத்துக்கும் நாங்க ஏன் கலந்துக்கனும்? ஆனா எங்கள கலந்துக்க சொல்லி மிரட்டுறாங்கய்யா..அதுக்கு நீங்க ஒரு முடிவு கட்டுங்கய்யா" என்று இயக்குநர் சங்கத்துக்கு எதிராகத்தான் கலைஞர் முன்பு ஒப்பாரி வைத்தார் அஜித். எப்பா நம்ம மனசுல இருக்குறத ஃபுல்லா அப்டியே பேசுறான்யா அப்டின்னுதான் ரஜினிகாந்த் எந்திரிச்சி நின்னு அந்த ஒப்பாரிக்கு கைதட்டுனது. அஜித்துக்கும், ரஜினிக்கும் இருந்த ஒற்றுமை என்பது ஈழத்துக்கும், காவிரிக்கும் நாம ஏன் பேசனும் அப்டிங்கிறதுதான்.

அதைத்தான் சில மீடியாக்கள் ரொம்ப லாவகமாக, கலைஞரின் மேடையிலேயே நின்று கலைஞரை எதிர்த்துப் பேசிய அஜித்னு ப்ளேட்ட மாத்தி விட்டுட்டானுங்க. கலைஞரோட பாராட்டு விழாவுக்கு தான் அஜித்த மெரட்டி வர வச்சிட்டாங்கன்னு கெளப்பி விட்டுட்டாய்ங்க. அந்த வதந்திய ஒட்ட வச்சிதான் இன்னைக்கு வரைக்கும் அஜித்தோட Brave speechனு உருட்டிகிட்டு இருக்காய்ங்க. திரைக்கலைஞர்களுக்கு சமூகப் பொறுப்பு எதுக்கு அப்டிங்கிறது தான் அஜித் முன்வைத்த வாதம். அடிப்படையில் இந்த வாதம் அவரது ரசிகர்களாலேயே எதிர்க்கப்பட வேண்டிய ஒன்னுதான்.

அந்த கூட்டத்துல அஜித் பேசுன விசயங்கள் கீழ இருக்கு. இந்த Speech கலைஞருக்கு எதிரான ஸ்பீச்னு சொல்றது காளை மாடு கன்னுகுட்டி போட்டுச்சின்னு சொல்றதுக்கு சமம். ஆனா அதையும் நம்ப வச்சி இன்னைக்கு வரைக்கும் அஜித்த ஒரு Brave personஆவும், புனித பிம்பமாவும் காட்டுறதுதான் மீடியாக்களோட பலம். இன்னைக்கு வரைக்கும் சவுக்கு சங்கர் கூட இத உருட்டிட்டு இருக்கான். அத நம்புறதுதான் நம்மளோட பலவீனம்.
(அரசியலுக்கும் எனக்கும் சம்மந்தம்னு இல்லன்னு சொல்லிட்டதாலயும், சங்கித்தனமா எதுவும் கருத்து சொல்லாம கடைசி வரைக்கும் ஒதுங்கியே இருக்கறதுனாலயும் நாம அஜித்தோட அட்ராசிட்டிய பொறுத்துக்கலாம். ஆனா நேர்மையின் சிகரம்னு உருட்டுறதெல்லாம் தேவையில்லாதது.)

கலைஞர் முன்பு அஜித் பேசிய அந்த விசயங்கள்:

"வாமன அவதாரத்துல ஒரு அடில பெருமாள் உலகத்த அளந்தாருன்னு கேட்டிருக்கோம். ஆனா பாத்ததில்ல. ஆனா இப்போ 5 1/2 அடி தமிழ்நாட்டையே ஐயா முதல்வர் அவர்கள் உருவத்துல பாக்குறோம்.

சூரியன வாழ்த்த வயது தேவையில்ல. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்துலயே சூரியன வாழ்த்தி பாடியிருக்காரு. பொங்கலுக்கு கூட நாம சூரியனுக்கு தான் நன்றி சொல்றோம். அதனால இந்த சூரியனுக்கு முதல்வர் ஐயாவுக்கு வாழ்த்தி நன்றி சொல்லதான் வந்தேன்.

கொஞ்ச நாளா சினிமா Industry மேல எல்லாருக்கும் ஒரு கோவம்..ஏன் நம்ம தேவையில்லாத விசயத்துல எல்லாம் தலையிடுறோம்னு ஒரு கோவம்..

நீங்க எவ்ளோ விசயத்த Solve பண்ணியிருக்கீங்க. இனிமே Sensitive issues, social issuesல Industry தலையிட வேண்டாம்னு ஒரு அறிக்கை விடுங்க ஐயா.

ப்ளீஸ் கெஞ்சி கேட்டுக்கறேன். ஒவ்வொரு முறையும் Social issues வர்றப்ப Industry-ல பொறுப்புல இருக்க சிலர் எங்கள கட்டாயப்படுத்தி வர வைக்குறாங்க.

ஒரு பிரச்சினை வரும்போது அரசாங்கம் ரியாக்ட் பண்றதுக்கு முன்னாடியே Industryல பதவில இருக்குற சிலர் அறிக்கை விட்டுடறாங்க.நாங்க ஊர்வலம் நடத்தப் போறோம்னு. ஆதரவு தெரிவிக்கப் போறோம்னு கெளம்பிடறாங்க.

அதுல எல்லோரும் கலந்துக்கனும்னு சொல்லி நடிகர்கள மெரட்டி வர வைக்குறாங்க. அதுக்கு ஒரு முடிவு கட்டுங்கய்யா.

வர முடியாதுன்னு சொன்னா ஒத்துழைக்க மாட்டோம்னு மிரட்டுறாங்க. தமிழ்ப்பற்று சம்மந்தமான பிரச்சினைய கெளப்பிவிட்டு பெருசு பண்ணிடறாங்க.

காவேரி River தண்ணி பிரச்சினை வருதா, நீங்க சொல்லுங்கய்யா அது Industryக்கு தேவையில்லாத Issueனு. சினிமாங்கிறது எல்லாருக்கும் பொதுவானது. நாங்க டயர்ட் ஆயிட்டோம் ஐயா!

உங்க மேல நம்பிக்கை வச்சி இந்த Issue-லாம் நான் இங்க சொல்லி இருக்கேன். ப்ளீஸ் இதுக்கு ஒரு முடிவு கட்டுங்கய்யா!"

இதுதான் அந்த Brave Speech!
Previous Post Next Post

نموذج الاتصال