ஜோகன்னஸ் கெப்லர் - ஆதனூர் சோழன்



வானியலில் மேற்கொண்ட சிறப்பான ஆய்வுகள் மூலம், 17ஆம் நூற்றாண்டில் அறிவியல் புரட்சியை ஏற்படுத்தியவர் ஜோகன்னஸ் கெப்லர். அவரது ஆய்வுகளில் முக்கியமானது கோளியக்கத்தில் மூன்று விதிகள். அவர் குறித்து மேலும் பல தகவல்களை அறிந்துகொள்வோம்.

* ஜோகன்னஸ் கெப்லர், 1571 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி பிறந்தார். வானியல் நிபுணராகவும், கணித மேதையாகவும் 1630 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி இறந்தார்.

* 17ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவியல் புரட்சிக்கு முக்கியப் பங்காற்றினார். கோளியக்க விதிகள் உள்பட அறிவியலில் பல்வேறு புதிய படைப்புகளை அளித்தார்.

* கெப்லரின் கோளியக்கம் தொடர்பான மூன்று விதிகள்:

1. எல்லா கோள்களும் சூரியனை மையமாக வைத்து பாதிப்பகுதி மறையும் விதத்தில் நீள்வட்டப் பாதையில் சுற்றுகின்றன.

2. ஒரு கோளையும், சூரியனையும் இணைக்கும் கோடு, சம அளவு கால இடைவெளிகளின் போது, சம அளவு பரப்புக்கு ஊடாக செல்லும்.

3. கோள்கள் சூரியனை சுற்றிவரும் கால அளவின் இரு மடங்கானது, அவற்றின் நீள்வட்டச் சுற்றுப்பாதை  அச்சின் கனசதுரத்தில் சரிவிகிதமாக இருக்கும். 

* சிறு வயது முதலே வானியலில் ஆர்வம் கொண்டிருந்தார். 1577 ஆம் ஆண்டு வால் நட்சத்திரத்தையும், 1580 ஆம் ஆண்டு சந்திர கிரகணத்தையும் பார்த்த பிறகு, இந்த ஆர்வம் வலுப்பெற்றது. 

* டுபின்ஜென் பல்கலைக் கழகத்தில் தத்துவப் பட்டப்படிப்பை படித்தார். கணிதத்தில் சிறந்த திறன் பெற்றிருந்தார். மேலும், தனது வானியல் ஆர்வத்தை வலுப்படுத்திக் கொண்டார். மற்ற மாணவர்களுக்கு ஜாதகத்தை கணித்துக் கூறும் திறமை பெற்றிருந் தார்.

* பிரபல வானியல் வல்லுநரான கலிலியோ கலிலி காலத்தில் தான், பெரும்பாலான சாதனைகளை கெப்லர் நிகழ்த்தினார். அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. ஒருவரது கருத்தை மற்றொருவர் ஏற்றுக் கொண்டதில்லை.  எனினும் அவர்களுடைய ஆய்வுகள் இயற்பியல், தத்துவம் மற்றும் வானியல் ஆகியவற்றை புரிய வைப்பதற்கு உதவின.

* கெப்லரின் கோளியக்க கோட்பாடுகளைக் கொண்டு, எதிர்காலத்தில் புவிஈர்ப்பு விசை தத்துவத்தை ஐசக் நியூட்டன் உருவாக்கினார்.

* கெப்லரின் பிரபலமான ஆய்வுக் கட்டுரைகளில் 1596 ஆண்டு வெளியான வால் நட்சத்திரத்தின் புனித மர்மங்கள், 1609 ஆம் ஆண்டு வெளியான புதிய வானியல், 1619 ஆம் ஆண்டு வெளியான உலகங்களின் நல்லிணக்கம், 1618 முதல் 1962 வரை வெளியான எபிடோம் ஆப் கோபர்னிகன் அஸ்ட்ரானமி ஆகியவை முக்கியமானவை. 

* அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், பூமியைப் போன்ற கோள்களைக் கண்டுபிடிப்பதற்கான உயர்தொழில்நுட்ப தொலை நோக்கியை கண்டறியும் பணியை கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் தேதி தொடங்கியது. கெப்லரை கவுரவிக்கும் வகையில், இந்தத் திட்டத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

 *ஜோகன்னஸ் கெப்லரின் கருத்துக்களில், “எல்லாவற்றிலும் இருந்து எவ்வளவு குறைவாக உபயோகபடுத்த முடியுமோ அவ்வளவு குறைவாகவே இயற்கை உபயோகிக்கிறது.”

* “சிந்திக்காத மக்கள் கூட்டத்தின் ஒப்புதலைவிட, திறமையான ஒரு மனிதனின் ஆணித்தரமான விமர்சனத்தை மிகவும் விரும்புகி றேன்”

“சொர்க்கங்களை அளவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். ஆனால், இப்போது, பூமியின் நிழலை அளவிட விரும்புகிறேன்.” 

“கணித அளவையில் நாம் இரண்டு மிகப்பெரிய சொத்துக்களை பெற்றிருக்கிறோம். ஒன்று பிதகோரஸ் கோட்பாடு. இன்னொன்று, விகித அளவு கோடு. முதலாவதில் நாம் தங்கத்தை அளவை ஒப்பிட முடியம். அடுத்ததைக் கொண்டு மதிப்புமிகுந்த நகைக்கு நம்மால் பெயரிட முடியும்.”


Previous Post Next Post

نموذج الاتصال