பியரி மற்றும் மேரி கியூரி - ஆதனூர் சோழன்


பியரியும், மேரி கியூரியும் எக்ஸ் - ரே கருவியைக் கண்டுபிடித்ததில் முக்கிய பங்குவகித்த தலைசிறந்த விஞ்ஞானிகள். 1895 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். கதிர்வீச்சு தொடர்பான கூட்டு ஆய்வுக்காக 1903 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றனர்.

பியரி கியூரி 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இது மேரியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பியரி கியூரி கதிர்வீச்சுக்களால் பலவீனமடைந்ததாக யூகிக்கப்படுகிறது. ஆனால், இது உறுதிப்படுத்தப்படவில்லை. மேரி கியூரி, 1934 ஆம் ஆண்டு உயிரிழந்தார். நீண்டகாலமாக கதிர்வீச்சுகளில் பணியாற்றியதால் அவர் உயிரிழந்ததாகக் கருதப்படுகிறது. இந்த விஞ்ஞானத் தம்பதியைப் பற்றிய சுவையான தகவல்களைப் பார்ப்போம்.

பியரி கியூரி

* பியரி கியூரி பிரான்ஸைச் சேர்ந்த இயற்பியல் அறிஞர். கதிர்வீச்சு, காந்தவிசை, கிரிஸ்டாலோகிராபி என்று அழைக்கப் படும் படிகவுருவியல் ஆகியவை குறித்து ஆய்வுகளில் ஈடுபட்டார்.

* அறிவியலில் அவரது கண்டுபிடிப்புகள்

கியூரி புள்ளி - அதாவது, காந்தவிசைத் தன்மையுள்ள பொருட்கள் தங்களுடைய காந்தவிசையை இழக்கும்போது ஏற்படும் வெப்ப அளவு (யீமீக்ஷீக்ஷீஷீனீணீரீஸீமீtவீநீ). சில பொருட்கள் இயற்கையான காந்தவிசை பரப்பு காரணமாக காந்தத் தன்மை பெறுகின்றன என்ற உண்மையை கண்டறிந்து வெளியிட்டார்.

கியூரியின் விதி - படிகங்கள் அழுத்தப்படும்போது, அவற்றின் மின் ஆற்றலை வெளிப்படுத்தும் பாராமேக்னடிஸம் (ஜீணீக்ஷீணீனீணீரீஸீமீtவீsனீ) குறித்தும் பியரி கண்டுபிடித்து வெளியிட் டார். இவை தவிர, தனது மனைவி மேரி கியூரியுடன் இணைந்து கதிர்வீச்சு, பொலோனியம் மற்றும் ரேடியத்தை பிரித்தெடுப்பது தொடர்பான ஆய்வுகளிலும் முக்கிய பங்காற்றினார்.


மேரி கியூரி

* மேரி கியூரி வேதியியல் மற்றும் இயற்பியலில் இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற முதல் நபர். போலந்தில் பிறந்து, பிரான்ஸுக்கு குடிபெயர்ந்தவர். பிரான்ஸ் நாட்டின் குடியுரிமையைப் பெற்றவர். 

* யுரேனியத்திலிருந்து எரிசக்தி வெளியாவதாக பிரான்ஸ் இயற்பியல் வல்லுநரான ஹென்றி பெக்கியுரெல் முதன்முதலாக கண்டுபிடித்தார். இதையறிந்ததும், இந்தத் துறையில் ஆய்வு மேற்கொள்ள மேரி கியூரி முடிவுசெய்தார். தனது கணவரின் ஒத்துழைப்போடும், எலக்ட்ரோமீட்டர் உதவியுடனும் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். 

1896 ஆம் ஆண்டு கதிர்வீச்சு தொடர்பான ஆராய்ச்சிகளைத் தொடங்கினார். 1898 ஆம் ஆண்டு பொலோனியம், ரேடியம் போன்ற கதிர்வீச்சு மூலகங்களை கண்டுபிடித்து அறிவித்தார். 

அணுவிலிருந்து மூலக்கூறுகளுக்கு இடையே மோதல் ஏற்படாமல் தானாகவே கதிர்கள் வெளியாவதாக அவர் நிரூபித்தார். இதற்காக 1911 ஆம் ஆண்டு மேரி கியூரிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

முதல் உலகப்போர் சமயத்தில் போரில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆம்புலன்ஸ் வண்டிகளில் எக்ஸ்ரே சாதனங்களை பொருத்த உதவி செய்தார்.

* போலந்தின் வார்சா நகரில் ரேடியம் கல்வி நிறுவனம் ஒன்றை 1932ஆம் ஆண்டு மேரி கியூரி நிறுவினார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இதன் பெயர் மரியாஸ்கோடோஸ்கா-கியூரி ஆன்காலாஜி என்று மாற்றப்பட்டது. இந்த நிறுவனம், புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சியில் சிறப்பு பெற்று விளங்குகிறது.

* மேரி கியூரியின் கருத்துக்கள்... 

“ரேடியத்தைக் கண்டுபிடித்தபோது, அதை மருத்துவமனைகளில் பயன்படுத்தலாம் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை என்பதை மறந்துவிடக் கூடாது. அது தூய்மையான அறிவியல். அறிவியல் கண்டுபிடிப்புகள், பயன்பாட்டை மட்டும் மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம். 

அறிவியலின் அழகுக்காக மட்டுமே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரேடியம், மனிதர்களுக்கு உதவியதைப் போன்று, மற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளும் மனிதர்களுக்கு பயன்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.”

* “செய்து முடிக்கப்பட்டதை மட்டுமே யாரும் கவனிப்பதில்லை. இன்னும் என்ன செய்ய வேண்டியிருக்கிறது என்பதை மட்டுமே எல்லோரும் பார்க்கிறார்கள்.” 


Previous Post Next Post

نموذج الاتصال