கவிஞர் கத்தாரின் புகழ் பெற்ற புரட்சிப் பாடல்


ஓ போலீசண்ணா ஓ போலீசண்ணா..

நாசா வந்துச்சு மிசா வந்துச்சு உன்னையும் ஜெயிலில் போட்டாங்க
பொடா வந்துச்சு தடா வந்துச்சு என்னையும் ஜெயில்ல போட்டாங்க
எனக்கு உனக்கும் வித்தியாசமில்லே
ஓ போலிசாண்னா
போராட்டம் தவிர வேற வழியில்லே
ஓ போலீசண்ணா
காய்கரிகள் வாங்கி வரவும்
காரு ஸ்கூட்டர் தொடச்சுவிடவும் ஹா
காய்கரிகள் வாங்கி வரவும்
காரு ஸ்கூட்டர் தொடச்சுவிடவும்
நாட்டுக்காக்க சேவ செய்ய வந்தே
ஓ போலீசன்னா
வீட்டுக்காக சேவை செய்ய வெச்சான்
ஓ போலீசன்னா
ஐ ஜிக்கும் எஸ்பிக்கும்
அழகழகா பங்களா இருக்கு ஹா
ஐ ஜிக்கும் எஸ்பிக்கும்
அழகழகா பங்களா இருக்கு
குதிர லாயம் போன்ற கோட்டர்ஸில்
ஓ போலிசன்னா
குடும்பத்தோட வாழ்க்கை நடத்துறே
ஓ போலீசன்னா
எனக்கு உனக்கும் வித்தியாசமில்லே
ஓ போலிசாண்னா
போராட்டம் தவிர வேற வழியில்லே
ஓ போலீசன்னா
கத்திய தூக்கி சண்டபோட்டாலும் நீதான் வந்து தடுக்கறே
கல்ல எரிஞ்சு ரகள செஞ்சா நீதான் வந்து தடுக்கறே
கண்ணுல மூக்குல எரிச்சலோட டியரு கேஸ அடிக்கறே
வாழ்க்க பூரா ரிஸ்க்குதானாடா
ஓ போலீசன்னா...
ரிஸ்க் அலவன்ஸ் கொடுக்கறாங்களா
ஓ போலிசன்னா...
சம்பளம் கொஞ்சம் ஏத்தினாங்க சரக்கு வெலைய கூட்டிட்டாங்க
மசிறளவு கொடுத்துபுட்டு மலையளவு புடிங்கீட்டீங்க...
தொப்பியும் நிக்கரும் மாத்திட்டாங்களே
ஓ போலிசன்னா
உனக்கும் தொப்பி போட்டுட்டாங்களே
ஓ போலீசன்னா
எனக்கு உனக்கும் வித்தியாசமில்லே
ஓ போலிசாண்னா
போராட்டம் தவிர வேற வழியில்லே
ஓ போலீசன்னா
ட்ரங்கு முக்கு ட்ராபிக்குல
ரோடு நடுவுல நின்னுகிட்டிருப்பே ஹா..
ட்ரங்கு முக்கு ட்ராபிக்குல
ரோடு நடுவுல நின்னுகிட்டிருப்பே
சைடு காட்டி சீக்கி ஊதி
தோளுபட்ட வலியெடுக்கும்
காலமெல்லம் நின்னு நின்னு
காலு ரெண்டும் வலியெடுக்கும்
மந்திரியோட காரு வந்தப்ப
எரும ஒன்னு குறுக்க வர........
தண்ணியில்லாத காட்டுக்கு உன்ன
ஓ போலீசன்னா
ட்ரேன்ஸராக்கி கஷ்டப்படுத்தினானே
ஓ போலிசன்னா
எப் ஐ ஆரு எழுதாதவன் எஸ் ஆகி போயிபுட்டான்
எஸ் ஐயா இருந்தவனனெல்லாம்
டி எஸ்பியா ஆகிபுட்டான்
டி எஸ்பியா இருந்தவனெல்லாம்
ஐ ஜியா ஆகிபுட்டான்
முப்பது வருசம் உழைச்சு பாத்தியே
ஓ போலிசன்னா
மூனுபட்ட இன்னும் கெடைக்கலெயே
ஓ போலிசன்னா
எனக்கு உனக்கும் வித்தியாசமில்லே
ஓ போலிசாண்னா
போராட்டம் தவிர வேற வழியில்லே
ஓ போலீசன்னா
நாங்க ஸ்ரைக்கு செஞ்சபோது உங்கள் விட்டு விரட்டுனா
நீங்க ஸ்ட்ரைக்கு செஞ்சபோது
சி ஆர் பி எஃப்ப அனுப்புனா
சி ஆர் பி எஃப்பும் ஸ்ட்ரைக்கு செஞ்சா
மில்ட்ரிய அனுப்பறா
நம்ம நாமே சுட்டுக்கொண்டோமே
ஓ போலிசண்னா
சர்காருக்கும் மகிழ்சியானதே
ஓ போலிசன்னா....
கல்லூரி போகும் பையன புடிச்சி மரத்துலதான் கட்டிவெச்சு
கல்லூரி போகும் பையன புடிச்சி மரத்துலதான் கட்டிவெச்சு
ஃபயர்.........
ஃபையர்ன்னு ஆர்டர்போட்டதும் பட்டு பட்டுன்னு சுட்டீங்களே
ஓ போலீசன்னா
வாயும் உனது வயிறும் உனதடா
ஓ போலிசன்னா
நாசா வந்துச்சு மிசா வந்துச்சு உன்னையும் ஜெயிலில் போட்டாங்க
பொடா வந்துச்சு தடா வந்துச்சு என்னையும் ஜெயில்ல போட்டாங்க
எனக்கு உனக்கும் வித்தியாசமில்லா
ஓ போலிசாண்னா
போராட்டம் தவிர வேற வழியில்லே
ஓ போலீசன்னா
எனக்கு வந்த துப்பாக்கி சூடு உனக்குந்தானே காத்திருக்கு
எனக்கு வந்த துப்பாக்கி சூடு உனக்குந்தானே காத்திருக்கு
நானும் நீயும் சேந்து நின்னமுன்னா
ஓ போலீசன்னா
சுட்டவன தூக்கி எரியலாம்
ஓ போலீசன்னா

பதிவு

Tamil translation @Comrade Lakshmanasamy Rangasamy
From Com. Naveen Kutty fb wall
Previous Post Next Post

نموذج الاتصال