பெரியார் உழைத்து சம்பாதித்தாரா? - Rajaiah Manuvel இன்று, எங்களது உள்ளூர் வாட்ச் குரூப்பில் நண்பர் ஒருவர், தந்தை பெரியாருக்கச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அவர் உழைத்து சம்பாதித்தாரா?

அவர் இதுவரை எத்தனை சாதிகளை ஒழித்துள்ளார் என்ற கேள்விக்கு, நான் கொடுத்துள்ள பதிலை,உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!!!
நியாமான கேள்விதான்!!!
முதல் கேள்விக்கு ப் பதில்!
பெரியாரிடம் இருந்த சொத்தெல்லாம் அவருடைய தகப்பனார் சம்பாதித்த சொத்துதான்!
அவர் எப்படி சம்பாதித்தார் என்பதற்கு விடை தேடினால் உங்களைப் போல வணிகத் தொழில் மூலம் சம்பாதித்ததுதான் என்று புரிய வரும்.
வணிகத்தில் எப்படி சம்பாதிக்கலாம், எப்படி செல்வந்தர் ஆகலாம் என்பதை வணிகராகிய உங்களுக்கு, நான் சொல்லத் தேவயில்லைதான்!
வியாபாரத்திற்கு முதலீடு பொய்தான் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.!
அதைச் செய்துதான் அவர்களும் பெரும் பொருள் சேர்த்திருக்க முடியும் என்பது உங்கள் உட்பட, உழைப்பில்லாமல் உட்கார்ந்து சாப்பிடும் அனைவருக்கும் தெரியும்.
வணிக நகரமான ஈரோட்டு நகரிலே உள்ள சிறு வணிகர்கள் எல்லோரும், அதிக வங்கிகள் இல்லாத அந்த காலத்தில் தங்களின் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்க,பெரியாரின் தந்தையிடம் கொடுத்து பாதுகாத்து வந்தனர் என்பதின் மூலம் அவர் எவ்வளவு பெரிய பணக்காரர் என்பதும், எவ்வளவு பெரிய நாணயஸ்தராக விளங்கினார் என்பது புரியும்.
மேலும்,
"வியாபாரம் செய்யும் போது, வியாபார நிமித்தம் சிறு, சிறு பொய்களைக் கூறியிருந்தாலும், பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு நான் பொய் சொல்வது கிடையாது" என்று தன்னிலை விளக்கம் கொடுத்தவர் பெரியார் ஆவார்!
இப்படி தன்னைப்பற்றிய தவறுகளைக்கூட மறைக்காமல் மற்றவரிடம் சொல்லக் கூடிய நாணயம் நம்மில் எத்தனை பேருக்கு உள்ளது???
பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு, பொதுக்கூட்ட நிகழ்ச்சி முதல் தொண்டர்களின் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது வரைக்கும் அவர்களிடம் வாங்கி, வாங்கி, ஒவ்வொரு காசாக சேர்த்ததின் மூலம், "பெரியார் ஒரு கஞ்சன்" என்ற ஒரு பட்டத்தை மட்டும் தனக்கு வைத்துக் கொண்டு,சேர்த்தத பணத்தை, கட்சியின் வளர்ச்சிக்கும் , திருச்சி, தஞ்சாவூர் ஈரோடு என தமிழகத்தின் பல பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்துவதின் மூலம் செலவு செய்து வந்தார் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்???
கல்கண்டு எனும் வார இதழில் அதன் நிறுவனர் மற்றும் ஆசிரியர் தமிழ் வாணன் என்பவரிடம் கேள்வி பதில் பகுதியில், எழுபதில், "தற்போதய அரசியல் தலைவர்களில் நீங்கள் பெரிதும் மதிக்கும் தலைவர் யார்?" என்று வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு,
"தனது சொந்க் காசில், ஒரு தண்ணீர் பந்தல் கூட வைக்க யோசிக்காத, இந்த தலைவர்கள் மத்தியில், திருச்சியில் தனது சொந்தச் செலவில் கல்லூரியும், குழந்தைகள் நல ஆசுபத்திரியும் கட்டிக் கொடுத்திருக்கிற தந்தை பெரியாரே எனக்கு பெரும் மதிப்பிற்குரிய தலைவர் ஆவார்" என்ற பதிலுரையின் மூலம் பெரியாரின் மதிப்பு, அவர் சேர்த்து வைத்திருந்த சொத்தின் மதிப்பை விட அளவிட முடியாதது என்று அறியவும்.
பெரியார் எத்தனை சாதியை ஒழித்தார்? என்ற அடுத்த கேள்விக்குப் பதில் வெரி சிம்பிள்தான்!
உங்களுடைய தாத்தாவின் பெயரிலும், என்னுடைய அப்பாவின் பெயரிலும், ஒட்டிக்கொண்டிருந்த சாதீ வால், உங்க பேரிலும், என்னுடைய பேரிலும் இல்லையே என்பதுதான் அவர் சாதிகளை ஒழிக்கவே செய்துள்ளார் என்பதின் அடையாளம் ஆகும் !!!
Previous Post Next Post

نموذج الاتصال