விஞ்ஞானிகள் பட்டியலில் 3 கொரியா தமிழர்கள்!

  


அமெரிக்காவின் ஸ்டாம்ஃபர்ட் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த 2 சதவீத  விஞ்ஞானிகள் பட்டியலை வெளியிடுகிறது. 2022-23 ஆண்டுக்கான பட்டியலில் தமிழ்நாட்டை  பல ஆராய்ச்சியாளர்களும், பேராசிரியர்களும் இடம்பெற்றுள்ளனர்.

அவர்களில் தென்கொரியாவில் உள்ள செஜோங் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தமிழர்கள் மூவரும் இடம்பெற்றுள்ளனர்.

பெரும்பாலும் வேதியியல், நானோ அறிவியல், மெக்கனிக்கல் இன்ஜினியரிங், மெடிரியல் சைன்ஸ், உயிர் தகவலியல், அட்டோமேஷன், எனர்ஜி, புவியியல், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகிய படிப்புகளில் நிபுணர்கள் தான் இப்பட்டியில் இடம்பெற்றுள்ளனர்.

செஜோங் பல்கலைக்கழகத்தை சேர்ந்த முனைவர் ஆரோக்கியராஜ் செல்வராஜ், முருகேசன் சந்திரசேகரன், பாலமுரளிகிருஷ்ணன் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் ஆரோக்கியராஜ் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற லொயோலா கல்லூரியிலும், மற்ற இருவரும் முறையே பாரதிதாசன், பாரதியார் பல்கலைக்கழகங்களிலும் பட்டம்பெற்றவர்கள்.

தென்கொரியாவின் செஜோங் பல்கலைக்கழகம் உலக அளவில் 251 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.டைம்ஸ் உயர்கல்வி தரவரிசைப் பட்டியல் இதை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, அந்தப் பல்கலைக்கழகம் 3.8 ஸ்டார்களைப் பெற்றுள்ளது.

Previous Post Next Post

نموذج الاتصال