தென்கொரியாவில் உள்ள செஜோங் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் ஆரோக்கியராஜ் அவர்களுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான மொழியியல் விருதும் ரூ.2 லட்சத்துக்கான கசோலையும் வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்தது.
புதுவை மாநிலத்தை சேர்ந்த முனைவர் ஆரோக்கியராஜுக்கு 2024 ஆம் ஆண்டு 12ம் தேதி அமைச்சர்கள் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் இந்த விருதையும் கசோலையையும் வழங்கினார்கள்.
முனைவர் ஆரோக்கியராஜ் விருது பெற்ற செய்தியை அறிந்து அவருடன் 25 ஆண்டுகளுக்கு முன் படித்த வில்லியனூர் விவேகாநந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். முனைவர் ஆரோக்கியராஜுடன் படித்த கணபதி, பாலச்சந்தர், நிர்மல் லகார்து, பாரி, நாக முத்துராமன், தங்கப்பிரகாசம், கணேஷ் கார்த்திகேயன், கந்தசாமி, குப்புசாமி, இளையதாசன், வசந்தகுமார், வேலு ரஜ், சுகுமாரன், ஏழுமலை, தியாகராஜன், வேல்முருகன் மற்றும் அறிவழகன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அனைவருக்கும் ஆரோக்கியராஜ் நன்றி தெரிவித்தார்.