விடுதலையின் போதும் விடுதலைக்குப் பிறகும் இந்திய மாநிலங்கள் உருவான வரலாறு - ஆதனூர் சோழன்


விடுதலைக்குப் பிறகு* 1950 ஆம் ஆண்டுவரை இருந்த மாநிலங்கள்

பார்ட் A - மாநிலங்கள் : பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள்..

9 மாநிலங்கள்

அஸ்ஸாம் , பிஹார், மும்பை, கிழக்கு பஞ்சாப், மத்திய பிரதேஷ், மெட்ராஸ், ஒரிஸ்ஸா,  உத்திர பிரதேஷ், மற்றும் மேற்கு வங்காளம்

பார்ட் B - மன்னராட்சிக்கு உட்பட்டிருந்து இந்தியாவுடன் இணைக்கப்பட்ட மாநிலங்கள் :

9 மாநிலங்கள்

ஐதராபாத், ஜம்மு-காஷ்மீர், மத்திய பாரத், மைசூர், பாட்டியாலா மற்றும் கிழக்கு பஞ்சாப், ஸ்டேட் யூனியன், ராஜஸ்தான், சௌராஷ்டிரா, திருவிதாங்கூர்-கொச்சி, விந்திய பிரதேஷ்

பார்ட் C - சமஸ்தானங்களாக இருந்து இந்தியாவுடன் இணைந்த மாநிலங்கள் 

10 மாநிலங்கள்

அஜ்மீர், கூர்க், கொச்சின்-பெஹார், போபால், பிளாஸ்பூர், டெல்லி, ஹிமாச்சல பிரதேஷ், கட்ச், மணிப்பூர், மற்றும் திரிபுரா

பார்ட் D  யூனியன் பிரதேசம் 

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்

1956 நவம்பர் 1 நிலவரப்படியான மாநிலங்கள்

1. ஆந்திர பிரதேஷ் 

2. அஸ்ஸாம்

3. பிஹார்

4. பம்பாய்

5. ஜம்மு-காஷ்மீர்

6. கேரளா

7. மத்திய பிரதேஷ்

8. மெட்ராஸ்

9. மைசூர்

10. ஒரிஸ்ஸா

11. பஞ்சாப்

12. ராஜஸ்தான்

13. உத்ர பிரதேஷ்

14. மேற்கு வங்கம்

யூனியன் பிரதேசம்

1.  அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்

2. டெல்லி

3. மணிப்பூர்

4. திரிபுரா

5. ஹிமாச்சல பிரதேஷ்

6. லட்சத் தீவு, மினிக்காய் மற்றும் அமிந்திவி தீவுகள்

1956க்கு பிறகும் பல மாநிலங்கள் உருவாக்கப்பட்டன...

1960 மே 1 ஆம் தேதி பம்பாய் மாகாணம் பிரிக்கப்பட்டு குஜராத், மகாராஷ்ட்ரா மாநிலங்கள் உருவாகின...

1963 டிசம்பர் 1 ஆம் தேதி நாகாலாந்து மாநிலம் உருவானது...

1966 நவம்பர் 1 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் பிரிக்கப்பட்டு ஹரியானா மாநிலம் உருவானது...

பஞ்சாபின் வடக்கு மாவட்டங்கள் ஹிமாச்சல பிரதேஷுடன் இணைக்கப்பட்டது...

சண்டிகார் யூனியன் பிரதேசமாக்கப்பட்டு, பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்கு பொதுவான தலைநகராக மாற்றப்பட்டது...

1968ல் மதராஸ் மாநிலம் தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது...

1972 ஜனவரி 21ம் தேதி மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்கள் உருவாக்கப்பட்டன...

1973ம் ஆண்டு மைசூர் மாநிலம் கர்நாடகா என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டது...

1975 மே 16ம் தேதி சிக்கிம் மாநிலம் இந்தியாவின் 22வது மாநிலமாக உருவானது. அதுவரை அங்கு இருந்த மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டது.

1987 பிப்ரவரி 20ம் தேதி அருணாச்சல பிரதேசம், மிஜோரம் மாநிலங்கள் உருவாகின.

1987 பிப்ரவரி 30 ஆம் தேதி கோவா மாநிலம் உருவாக்கப்பட்டது. 

இதையடுத்து, டாமன், டையு, தாத்ரா, நாகர் ஹவேலி ஆகியவை தனி யூனியன் பிரதேசங்களாக மாறின...

2000 நவம்பரில் உத்தரப்பிரதேசத்தின் வடமேற்கு பகுதியும், மத்தியப்பிரதேசத்தின் கிழக்குப்பகுதியும் பிரிக்கப்பட்டு சத்தீஷ்கர் மாநிலம் உருவானது... பின்னர் இது உத்தரகாண்ட் மாநிலம் என்று பெயர்மாற்றப்பட்டது...

இதே ஆண்டு, இதே நாளில் பிகாரின் தெற்குப் பகுதிகள் பிரிக்கப்பட்டு ஜார்கண்ட் மாநிலம் உருவானது...

2011ல் ஒரிஸா மாநிலம் ஒடிஸா என்று பெயர் மாற்றப்பட்டது...

2014 ஜூன் 2ம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் வடகிழக்கில் உள்ள 10 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது... 

1956 நவம்பர் 1ம் தேதி இன்றைய தமிழகம் அமைந்த நாள். 

ஆம், ஆந்திராவிடம் சித்தூர், நெல்லூர், திருப்பதி, காளஹஸ்தி, கர்நாடகத்திடம், கொள்ளேகால், மாண்டியாவில் சில பகுதிகள், கோலார் தங்கவயல், வெங்காளூர் என்று அழைக்கப்பட்ட பெங்களூரையும் இழந்தோம். 

கேரளத்திடம் பாலக்காடு பகுதியில் சில தமிழக கிராமங்கள், தேவிகுளம், பீர்மேடு பகுதி, தென்முனையில் நெடுமாங்காடு, நெய்யாற்றங்கரை ஆகிய பகுதிகளை இழந்தோம். இதனால் குமரியில் நெய்யாறு, நெல்லை மாவட்டத்தில் அடவி நயனாறு, செண்பகத்தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகர் அணை திட்டம், நாடறிந்த முல்லைப் பெரியாறு பிரச்சினை, கொங்கு மண்டலத்தில் பரம்பிக்குளம்-ஆழியாறு, சிறுவாணி, பம்பாறு, பாண்டியாறு-புன்னம்புழா என சில நதிநீர் பிரச்சினைகள் நமக்கு சிக்கலாகிவிட்டது. 

அதைப்போன்று கர்நாடகத்திடம் காவிரி, தென்பெண்ணை, ஒகேனக்கல் பிரச்சினையும், ஆந்திரத்திடம் பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரி என நீர் ஆதாரப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைகளை நாம் இழந்த மண்ணால் இழந்தோம். 

நாம் பெற்றதோ ம.பொ.சி., மங்களக்கிழார், விநாயகம் போன்றோர் பலரின் போராட்டத்தால் திருத்தணியைப் பெற்றோம்.  

தென்முனை குமரியை பி.எஸ்.மணி, நேசமணி, குஞ்சன் நாடார், ரசாக் போன்றோருடைய தியாகமும், மார்த்தாண்டம் புதுக்கடையில் போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் ரத்தத்தில் தமிழகத்தோடு இணைந்ததுதான் குமரி மாவட்டம்.  

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் தியாகி கரையாளருடைய மாசற்ற தியாகத்தால் செங்கோட்டை கிடைத்தது. ஆனால் நம்மோடு இணையவேண்டிய நெடுமாங்காடு, நெய்யாற்றங்கரை ஆகியப் பகுதிகளை தர மறுத்தனர். தமிழர்கள் வாழும் தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் கேரளாவுக்கு சென்றுவிட்டன. 

1956 நவம்பர் 1ம் தேதி உதயமான கேரளம் "நவ கேரளம்" என்று கொண்டாடுகிறது.

 கர்நாடகம் "அகண்ட கர்நாடகம்" என்று விழா எடுக்கிறது. ஆந்திரம் "விசால ஆந்திரம்" என்று அரசு விழாவாக கொண்டாடுகின்றது. 

மகாராஷ்டிரம் "சம்யுக்த மகாராஷ்டிரம்", குஜராத் "மகா குஜராத்" என்று நவம்பர் 1ம் தேதியை மகிழ்ச்சிப் பெருக்கோடு வரவேற்கின்றது.  

ஆனால் நாம் இந்நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவதா? அல்லது இழந்த பகுதிகளுக்காக வருந்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவதா? என்று சொல்ல முடியவில்லை.  

தனி மாநிலக் கோரிக்கைகள் உள்ள மாநிலங்கள் எவையெவை?

அசாமில், கர்பி ஆங்லாங், போடோலாந்து....

பிகாரில், மிதிலா, போஜ்பூர்...

குஜராத்தில்,  கட்ச், சவுராஸ்ட்ரா, பிளிஸ்டான்...

கர்நாடகாவில், கரு நாடு, கல்யாண கர்நாடகா, துளு நாடு...

ஜம்மு காஷ்மீரில், ஜம்மு, காஷ்மீர், லடாக்....

மத்தியப்பிரதேசத்தில், விந்திய பிரதேஷ், பகேல்கண்ட் மற்றும் பந்தேல்கண்ட், மஹாகோஷல் மற்றும் கோண்ட்வானா, மால்வா....

இவ்வளவு கோரிக்கைகளையும் கிடப்பில் போட்டு, பிரிவினை கேட்டு போராடுகிறவர்களை அடக்கி வருகிறது ஒன்றிய அரசு.

Previous Post Next Post

نموذج الاتصال