அஜ்மல்கான்
(1863-1927)
ஜாமியா கல்விநிறுவனத்தை நிறுவியதில் மிக முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர் அஜ்மல்கான். 1927ஆம் ஆண்டுவரை ஜாமியா கல்விநிறுவனத்தின் முதல் வேந்தராக பொறுப்பு வகித்தவர் அவர். 1863ல் டில்லியில் பிறந்தார். தொழில் ரீதியாக அவர் ஒரு சிறந்த மருத்துவர் ஆவார். ஹக்கீம் அஜ்மல்கான், 1906ம் ஆண்டில் திப்பி மாநாட்டினை நடத்தினார். அதே ஆண்டில் முஸ்லிம்லீக் கட்சியை உருவாக்குவதில் முக்கிய பணியாற்றினார். 1908ல் ஹாசியா-உல்-முல்க் எனும் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.
ஒத்துழையாமை இயக்கத்தின்போது மாணவர்கள் பள்ளிகளை புறக்கணித்து தேசிய விடுதலை இயக்கத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தேசிய பள்ளிகளில் இணையவேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் பொருட்டே ஜாமியா கல்வி நிறுவனத்தை ஹக்கிம் அஜ்மல் கான் நிறுவினார். மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பராக அவர் இருந்தார்.
முகமதிய ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியை ஒரு பல்கலைக்கழகமாக உயர்த்துவதிலும் அஜ்மல்கான் முக்கிய பங்கு வகித்தார். தனது வாழ்வின் பிற்பகுதியை முற்றிலும் ஜாமியா நிறுவனத்தின் நலனுக்காகவே செலவிட்டார். இந்நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிதி நெருக்கடிகளிலிருந்து அதை மீட்பதில் பெரும் வேலையாக இருந்தது. 1927 அவர் காலமானார்.
Ajmal Khan was the major inspiration behind the foundation of Jamia. He was the first Chancellor of this institution and held this post till 1927. He was born in Delhi in 1863. He was an outstanding physician (bakim) by profession. Hakim Ajmal Khan founded the ‘Tibbi’ (medical) Conference in 1906 and in the same year supported the establishment of the Muslim League. In 1908, he was honoured with title of Hazia-ul-mulk.
During the Non-Cooperation Movement, students were asked to boycott the government schools and help the national movement by joining the national schools. Hakim Ajmal Khan put these ideas into reality by laying the foundation of Jamia. He was a close associate of Mahatma Gandhi.
He also played a major role to elevate the Mohammedan Anglo Oriental College into the status of a university. He spent the later part of his life and better part of his wealth for the welfare of Jamia, often bailing Jamia out of the dilemmas said financial crises. He breathed his last in 1927.