பக்தியும் பயமும் இரண்டும் ஒன்றுதான்!
பக்தி என்ற சொல்லை கண்டு பிடித்தவர்தான் மனிதர்களிலேயே மிகவும் போலியான மனிதர். உள்ளுக்குள் இருக்கும் பயத்தை வெறும் மினுங்கல் பூச்சு பூசி வெளிப்படுத்த கண்டு பிடிக்கப்பட்டது தான் இந்த பக்தி என்ற சொல்.
அன்பு என்பது உண்மையில் தானாகவே வரவேண்டியது அது ஒன்றும் தேவாரம் பாடி வரவழைக்க முடியாது. நெஞ்சு நிறைய பயம் உள்ளவரை நிரந்தர அடிமையாக்க உருவாக்கப்பட்ட சொல் இது.
ஒரு வாகனத்தின் உதிரிப்பாகம் அந்த வாகனத்தின் மீது பக்தி கொள்ளுமா? பல உதிரிப்பாகங்களும் சேர்ந்தது அல்லவா ஒரு வாகனம்? தான் வேறு, வாகனம் வேறு என்று உதிரிப்பாகங்கள் எண்ணுவதில்லையே? அப்படி எண்ணி உதிரிப்பாகங்கள் ஒவ்வொன்றாக பிரிந்து போய்விட்டால் அது ஒரு வாகனம் அல்லவே? முழு பிரபஞ்சமும் ஒரு வாகனம் போல இயங்கும் இயங்கு சக்தி அல்லவா? அதில் உள்ள சகல உதிரிப்பாகங்களும் பிரபஞ்சத்தின் பங்காளிகள் அல்லவா? பங்காளிகள் ஒருவருக்கு ஒருவர் அன்புடன் இருப்பது இயல்புதானே? இதில் ஏன் பயம்/பக்தி வரவேண்டும்? இந்த பயத்தால் யாருக்கு லாபம்?