ஹர்ஷர் காலத்தில் யுவான் சுவாங் பற்றி நேரு - ஆதனூர்சோழன்


மே 11, 1932

இந்தியாவில் ஹூணர்கள் துரத்தப்பட்டாலும் சில இடங்களில் இருக்கிறார்கள். பாலாதித்தியனுக்குப் பிறகு குப்த வம்சம் மங்கி மறைகிறது. வட இந்தியாவில் பல சிறு அரசுகள் தோன்றுகின்றன. புலிகேசி என்ற மன்னன் தெற்கே சாளுக்கியப் பேரரசை அமைக்கிறான்.

கான்பூருக்கு அருகில் கன்னோஜி என்ற பெரிய நகரம் இருந்தது. அது கிராமமாக இருந்து தலைநகராக மாறி, இப்போது மீண்டும் சிறிய கிராமம் போல இருக்கிறது. நாம் பேசுகின்ற நாளில் கன்னோஜி பெரிய தலைநகரமாக இருந்தது. அங்கே கவிஞரும் கலைஞரும் தத்துவ நூலாசிரியரும் குழுமி இருந்தனர். அப்போது  கான்பூர் தோன்றவே இல்லை.

கன்னோஜி என்பது இப்போதைய பெயர்தான். அதன் நிஜப் பெயர் ‘கன்யாகுப்ஜம்’. அதற்கு ‘கூனல் பெண்’ என்று அர்த்தம். இதற்கு ஒரு கதை இருக்கிறது. ஒரு அரசனுடைய நூறு பெண்கள் ஒரு ரிஷைய மத்திக்கவில்லையாம். இதனால் கோபம்கொண்ட ரிஷி அந்த பெண்களின் முதுகையும் கூனல் விழச் சபித்தானாம். அதனால், அந்த நகர் கூனல் பெண்களின் நகரம் -கன்யாகுப்ஜம்-ஆகியது. 

நாம் அதை ‘கன்னோஜி’ என்று அழைப்போம். ஹூணர்கள் கன்னோஜி அரசனைக் கொன்று அவன் மனைவி ராஜ்யஸ்ரீயைச் சிறைப்பிடித்தனர். அவளை மீட்க, சகோதரன் ராஜவர்த்தனன்  ஹூணர்களுடன் போரிட்டான். அவர்கள் தோற்றனர். ஆனாலும் அவன் கொல்லப்பட்டான். பிறகு அவன் தம்பி ஹர்ஷவர்த்தனன் தன் ராஜ்யஸ்ரீயைத் தேடிப் போனான். அவளோ தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குப் போயிருந்தாள். அந்தச் சமயத்தில் அவளை ஹர்ஷவர்தன் காப்பாற்றினான் என்கிறது கதை. 


தன் சகோதரியை மீட்ட ஹர்ஷன், தனது சகோதரனை கொன்ற சிற்றரசனை தண்டித்தான். பிறகு தொடர்ந்து வட இந்தியா முழுவதையும் தெற்கே விந்தியமலை வரை கைப்பற்றினான். விந்திய மலைக்கு தெற்கே சாளுக்கியப் பேரரசு அவனை தடுத்து நிறுத்தியது. 

ஹர்ஷவர்த்தனன் கன்னோஜியைத் தலைநகராகக் கொண்டான். ஹர்ஷன் பெரிய கவிஞனாகவும், நாடக ஆசிரியனாகவும் இருந்தான். அரசவையில் கவிஞரும் கலைஞரும் இருந்தனர். ஹர்ஷன் சிறந்த பௌத்தன். பௌத்த மதத்தை பிராமண மதம் விழுங்கிவிட்டது. எனவே, ஹர்ஷன்தான் இந்தியாவின் கடைசி பௌத்த மன்னன்.

ஹர்ஷனுடைய ஆட்சியில்தான் சீன யாத்ரீகர் யுவான் சுவாங் இந்தியாவுக்கு வந்தார். இவரைப் பற்றி நாம் பேசியிருக்கிறோம். அவர் எழுதிய பயண வரலாற்று நூலில் இந்தியாவைப் பற்றியும்,  மத்திய ஆசிய நாடுகளைப் பற்றியும் விரிவாகப் எழுதி இருக்கிறார். பவுத்த மதத்தில் ஈடுபாடு கொண்டவர். கோபி பாலைவனம் வழியாக டாஷ்கண்ட், சாமர்கண்ட், பால்க்,கோடான், யார்கண்ட் உள்ளிட்ட நகரங்களைக் கடந்து வந்தார். இந்தியா முழுவதும் சுற்றினார். இலங்கைக்கும் அவர் போயிருக்கலாம். அவர், தாம் கண்டவற்றையும் கேட்டவற்றையும் அப்படியே எழுதியிருக்கிறார். இந்தியாவின் பல பாகங்களில் அவர் கண்ட மனிதர்களைப் பற்றி அவர் எழுதியிருப்பது  இன்றும் நிஜம் போல இருக்கிறது. அறிவு வளர்ச்சியால் வயிறு வெடித்து விடாமல் இருக்க வயிற்றைச் சுற்றி செப்புத் தகடுகளைக் கட்டித் திரிந்த அதிமேதாவி’ யைப் பற்றி அவர் சொன்ன கதையை உனக்கு சொல்லியிருக்கிறேன்.

இந்தியாவில் நாளந்தா பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகள் இருந்தார். அங்கு பத்தாயிரம் மாணவர்களும் சந்நியாசிகளும் குருகுல வாசம் செய்ததாக கூறப்படுகிறது. பௌத்த மதக் கல்விக்குப் புகழ்பெற்ற இது, பிராமண மதக் கல்விக்கு புகழ்பெற்ற காசிக்கு போட்டியாக இருந்ததாக கூறுகிறார்கள். இந்தியாவுக்கு இந்து பூமி என்று பெயர் இருந்ததாக யுவான் சுவாங் கூறுகிறார். சீன மொழியில் இன்-டு என்ற சொல் சந்திரனைக் குறிப்பதாக எழுதியிருக்கிறார். ஆகவே நீ சீன மொழிப் பெயரை வைத்துக் கொள்வது எளிது. (இந்திராவின் செல்லப்பெயர் இந்து என்பது குறிப்பிடத்தக்கது.)

யுவான் சுவாங் கி.பி. 629ல் இந்தியாவுக்கு வந்தார். 26 வயதில் சீனாவில் இருந்து புறப்பட்டார். அவர் உயரமாகவும் அழகாகவும் இருந்தார் என்று ஒரு சீனக் குறிப்பில் காணப்படுகிறது. அவருடைய  சாந்தமும் பிரகாசமும் தண்ணீரிலே முளைக்கும் தாமரை மலரை நினைவூட்டும் என்றும் அது கூறுகிறது.

பௌத்தத் துறவியின் காவி உடையை அணிந்து தனியாக அவர் பயணத்தை தொடங்கினார். சீனப் பேரரசர் அனுமதிக்க மறுத்தும் புறப்பட்டார். கோபி பாலைவனத்தின் விளிம்பில் இருந்த டர்பன் அரசை அடைந்தார். அந்தக் காலத்தில் நாகரிகம் மிக்க பகுதியாக இருந்த இது, பாழ்பட்டுக் கிடக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். யுவான் சுவாங் அதைக் கடந்த காலத்தில்   இந்தியா, சீனா, பாரசீகம், ஐரோப்பாவின் சில பாகங்களில் இருந்த நாகரிகங்கள் கலந்த ஒரு நாகரிகம் இதில் இருந்தது. 

அவர்கள் ஒருவிதமான இந்திய - ஐரோப்பிய மொழி கலந்து பேசினர். அவர்கள் கற்களில் பொறித்த சித்திரங்கள் ஐரோப்பிய வகையாக இருக்கின்றன. புத்தரையும், போதி சத்துவர்களையும், வேறு சில கடவுள் சிலைகளையும் கற்பனை வளத்தோடு  தீட்டப்பட்ட அந்த ஓவியங்கள் ஒப்பிட முடியாத அழகுடன் இருக்கின்றன. பிரஞ்சு விமர்சகர் குரோசே இப்படிக் கூறுகிறார்... ‘அந்தச் ஓவியங்களில்  ஹிந்துக் குழைவும், கிரேக்கக் கற்பனையும், சீன வனப்பும் மிக அழகாக உறவாடுகின்றன.’

டர்பன் இன்னும் இருக்கிறது. அதை நீ படத்தில் காணலாம். ஏழாம் நூற்றாண்டில் பல தூரதேசங்களில் இருந்து வந்த நாகரிகங்கள் ஒன்றுகூடிக் கலந்த அழகை என்னென்பது!

டர்பனிலிருந்து யுவான் சுவாங், குச்சாவுக்குச் சென்றார். இது சங்கீத வித்துவான்களுக்கும் அழகிய நாட்டியக்காரிகளுக்கும் புகழ்பெற்ற இடம். இதனுடைய மதமும் கலையும் இந்தியாவிலிருந்து வந்தவை. நாகரிகமும் வியாபாரப் பொருள்களும் ஈரானிலிருந்து வந்தவை. மொழியோ சமஸ்கிருதம், பாரசீகம், லத்தீன், கெல்டு ஆகிய மொழிகளுடன் தொடர்புடையது. 

இங்கிருந்து யுவான் சுவாங் துருக்கி சென்றார். பிறகு சார்கண்ட் நகரத்திற்கும் அவர் வந்தார். அப்பொழுதே அது ஒரு புராதன நகரம். அதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அலெக்சாண்டர் அவ்வழியாகப் போனான். அதன் பிறகு அவர் பால்க் நகருக்கும், காபூல் நதிப் பள்ளத்தாக்கிற்கும், காஷ்மீரத்துக்கும், கடைசியாக இந்தியாவுக்கும் வந்தார்.

அந்த காலகட்டத்தில் சீனாவில் டாங் வம்ச ஆட்சி தொடங்கியி ருந்தது. நாகரிகத்தில் சீனா உலகுக்கே வழிகாட்டியாக இருந்த காலம் அது. அத்தகைய தேசத்திலிருந்து வந்தவர் யுவான் சுவாங் என்பதை நீ நினைவில் வைக்கவேண்டும். அவர் இந்தியாவுக்கு அளித்திருக்கும் சான்றிதழ் பெருமை உடையதாகும். அவர் தனது நூல் இப்படிக் கூறுகிறார்... ‘சாதாரண மக்கள் இயற்கையாகவே கவலை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் ஏமாற்றுவதோ, வஞ்சிப்பதோ கிடையாது. சொன்ன சொல்லும் தவறுவதில்லை. அவர்கள் பிறருடன் பழகுவதில் ஒரு நயத்தையும் இனிமையையும் காண்கிறோம். குற்றம் செய்வோரின் தொகை மிகவும் குறைவு.’

‘மக்களைப்  கட்டாயப்படுத்தி வேலை வாங்கும் வழக்கம் இல்லை..... மக்கள் செலுத்தும் வரி மிகவும் குறைவு... எல்லோரும் தங்கள் உடமைகளை பயம் இல்லாமல் வைத்திருக்கிறார்கள்.  அரசனுக்குச் சொந்தமான நிலத்தைப் பயிரிடுவோர் விளைவதில் ஆறில் ஒரு பங்கை அவனுக்கு செலுத்துகிறார்கள்.’

பையனோ பெண்ணோ தன் ஏழாவது வயதில் சாஸ்திரங்கள் ஐந்தையும் கற்கத் தொடங்கவேண்டும். சாஸ்திரங்கள் ஐந்து என்பவை இவைதான்...

1. வியாகரணம் (இலக்கணம்). 2. சிற்பம், (ஷிநீவீமீஸீநீமீ ஷீயீ கிக்ஷீts ணீஸீபீ சிக்ஷீணீயீts) (ஜோதிடம் முதலியன இதில் அடங்கும்). 3. ஆயுர்வேதம் (வைத்தியம்). 4. தர்க்கம். 5. மீமாம்சை. சர்வ கலாசாலைகளில் மேற்கூறியவற்றைக் கற்று முடிக்க மாணவனுக்கு வயது முப்பது செல்லும். ரொம்பப் பேர் அந்த வயது வரையில் படித்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். பிரயாகையில் நடக்கும் கும்பமேளாவை நீ மறுபடி பார்க்கும்போது 1300 ஆண்டுகளுக்கு முன் யுவான் சுவாங் இதைப் பார்த்ததை நினைவில் கொண்டுவந்து பார். புராதனமான பிரயாகை எங்கே! நேற்று முளைத்த அலகாபாத் எங்கே! 400 வருஷங்களுக்கு முன் அலகாபாத் அக்பரால் உருவாக்கப்பட்டது. ஹர்ஷன் பவுத்தனாக இருந்தும் இந்த அசல் ஹிந்து திருவிழாவுக்குச் சென்ற வரலாற்றை யுவான் சுவாங் நமக்குக் கூறுகிறார். தினந்தோறும் லட்சம் பேர் விருந்து உண்டனர் என்று கூறப்படுகிறது! இந்த மேளாவில் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஹர்ஷன் தனது மகுடம் உள்ளிட்ட செல்வங்களை தானமாக கொடுத்துவிட்டு, தனது சகோதரி ராஜ்யஸ்ரீயிடம் இருந்து ஒரு கிழிந்த பழைய ஆடையை வாங்கிக் கொண்டானாம்.

ஹர்ஷன், சிறந்த பவுத்தன் என்பதால், உணவுக்காக உயிர்களைக் கொல்ல அனுமதிக்கவில்லை. இதைப் பிராமணர்கள் அதிகமாக எதிர்க்கவில்லை. புத்தர் காலத்திலிருந்தே அவர்கள் சைவ உணவுக்கு பழக்கப்படுத்தி வந்தார்கள்.

யுவான் சொல்லும் இன்னொரு தகவலும் முக்கியமானது.  இந்தியாவில் ஒருவன் நோயில் விழுந்தால் ஏழு நாள் பட்டின் இருப்பானாம். அதிலேயே பலர் குணம் அடைவார்களாம். குணம் அடையாவிட்டால் மருந்து சாப்பிடுவார்களாம். அந்நாளில் நோயும் தெரியாது. மருந்து கொடுக்கும் வைத்தியனும் அதிகமாக இருக்க மாட்டார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். இந்தியாவில் கல்வி கற்றவர்களுக்கு மரியாதை இருந்தது. அந்த வகையில் சீனாவும் இந்தியாவும் ஒரே சிந்தனை கொண்டிருந்தன.

இந்தியாவில் பல வருஷங்கள் வாழ்ந்த பிறகு, யுவான் சுவாங்  சீனாவுக்கு திரும்பினார். வழியில் சிந்து நதியில் அடித்துச் செல்லப்பட்டார். அப்போது, அவருடன் வைத்திருந்த அரிய நூல்கள் நீரில் போயின. உயிர் தப்பி, மிச்சமிருந்த நூல்களை சீன மொழியில் பெயர்க்கவே பல ஆண்டுகள் ஆகின. 

அந்தக் காலத்தில் யாத்ரீகர்களின் பயணம் ஆச்சரியம் மிக்கவை. மலைகள், வனங்கள், நதிகளை தாண்டி பயணித்தார்கள். அவர்களுக்கு துணை யாரும் இல்லை. வீட்டு நினைவு வந்தாலும் தவிர்த்துவிட்டு நடந்தனர். அவர்களோடு ஒப்பிடும்போது, இன்றைக்கு வட துருவத்துக்கும் தென்துருவத்துக்கும் செல்லும் பயணம் கூட சுலபமானது. சூங் யூன் என்ற பயணி இந்தியாவுக்கு வந்தார். அவர் காந்தாரத்திலுள்ள மலைப்பிராந்தியத்தில் இருந்தபோது எழுதினார்... “வானில் மிதந்துவந்த மெல்லிய பூங்காற்று, பூக்கள் தோறும் சென்று தேனை நுகரும் வண்டுகளின் ரீங்காரம் ஆகிய காட்சிகளை தூரதேசத்தில் பார்த்தபோது என் மனம் வீட்டை நாடிச் சென்றது.Õ இந்த நினைவே அவருக்கு நோயாகி மரணத்தையும் கொடுத்ததாம்.

Previous Post Next Post

نموذج الاتصال