ஏழே ஆண்டில் 50 ஆயிரம் கோடி 11.5 லட்சம் கோடியானது - அடானியும் கேடியும் ஒருவரே - கெஜ்ரிவால்

2014இல் அடானிஜி, அதாவது கேடிஜியின் சொத்து 50,000 கோடி. 

7 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது சொத்து 11.5 லட்சம் கோடியாக மாறியது. 

கேடி ஜி, இவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு எங்கு செல்வீர்கள்? 

11.5 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்து. 

7 வருடங்களில் உங்கள் நாட்டை இவ்வளவு கொள்ளையடித்து விட்டீர்களே!  

2014 இல், 609 ஆவது இடத்தில் இருந்த அவர், தற்போது இரண்டாவது பெரிய பணக்காரராக மாறியுள்ளார். இப்போது அவர் முதல் பணக்காரர் ஆக விரும்புகிறார்.  

எனவே, பொதுமக்களுக்கு நான் சொல்ல விரும்புவது, நீங்கள் ஜிஎஸ்டி கொடுங்கள். உங்கள் குழந்தைகளின் வயிற்றை அறுத்து, பால், தயிர், அனைத்திற்கும் ஜிஎஸ்டியை கட்டுங்கள். 

அந்த ஜிஎஸ்டி பணம் எங்கே செல்கிறது?

அந்தப் பணம் மக்களின் கருவூலத்துக்குச் செல்கிறது. அது அங்கிருந்து அதானியின் கருவூலத்திற்கும் அங்கிருந்து மோடிஜியின் கருவூலத்திற்கும் செல்கிறது.

நாடு முழுவதும் இரு கைகளாலும் சூறையாடப்படுகிறது. 

பிரதமர் நாடு முழுவதையும் கொள்ளையடித்து வருகிறார். 

கேடி ஜி தனது இரு கைகளாலும் கொள்ளையடிக்கிறார். 

நிலக்கரியை கொள்ளையடிக்கிறார், 

விமான நிலையங்களை கொள்ளையடிக்கிறார், 

சாலைகளை கொள்ளையடிக்கிறார், 

மின்சாரத்தை கொள்ளையடிக்கிறார், 

தண்ணீரை கொள்ளையடிக்கிறார். 

அவர் எதையும் விட்டு வைக்கவில்லை. 

அனைத்தையும் கொள்ளையடித்து வருகிறார். 

75 ஆண்டுகளில் இல்லாத அளவை காட்டிலும் 10 மடங்கு அதிகமாக கொள்ளையடித்துள்ளார்.

சுதந்திரத்திற்குப் பிறகு, நாட்டை இவ்வளவு கொள்ளையடித்த ஊழல் பிரதமர் யாருமே இல்லை. 

கேடிதான் அத்தகைய பிரதமர் என்று நினைக்கிறேன்.

(கெஜ்ரிவால் கைதாக கேடியைப் பற்றி டெல்லி சட்டமன்றத்தில் அவர் பேசிய இந்தப் பேச்சு தான் காரணமாம்.)

Previous Post Next Post

نموذج الاتصال