திருப்பதி லட்டும், நாயுடு அமித் ஷா திட்டமும் - சு.பொ.அகத்தியலிங்கம்

 


“ திருப்பதி லட்டுவில் ஹெரிட்டேஜ் நெய் பயன்படுத்த, சந்திரபாபுவின் வியாபார தந்திரம் இது! ஹெரிட்டேஜ் நிறுவனத்தின் உரிமையாளராக, அவரின் மனைவி மருமகள், பேரன் உள்ளனர்” என்கிறார் Prathaban Jayaraman .

பெங்களூரில் நடை பயிற்சியின் போது ஒரு நண்பர் சொன்னார், 

“கர்நாடகாவில் அமுல் பால், தயிர் ,நெய் இவற்றைத் திணித்து நந்தினியை அளிக்க அமித் ஷா முயற்சித்தார். கர்நாடக விவசாயிகள் ஒன்றாய்க் குரல் கொடுத்து தோற்கடித்தார்கள். இப்போது திருப்பதி லட்டு விவகாரத்தைக் கிளப்பி பின் வாசல் வழியாக தென் இந்தியா முழுவதும் அமுலை திணித்து இங்குள்ள நந்தினி தமிழ்நாட்டு ஆவின் உட்பட அனைத்தையும் அழிக்க முயற்சிக்கிறார். குஜராத்தில் இருந்துதான் ஆய்வு முடிவு வந்திருப்பதாகச் சொல்கிறார்களே அதையும் இணைத்துப் பார்க்க வேண்டாமா? திருப்பதி லட்டு விவகாரத்தில் இதுதான் சூக்குமம்.” 

தமிழ்நாட்டில் ஏதோ ஒரு தனியார் நிறுவன நெய் மீது பாய்கிறது என சும்மா இருக்க முடியுமா? நாளை ஆவின் மீதும் பாயமாட்டார்களா சதிகாரர்கள்!

இருவர் சொல்வதும் உண்மை .அதற்கும் மேல் இந்து செண்டிமெண்டை உசுப்பி விட்டு அரசியல் ஆதாயம் தேடும் சகுனி அரசியல் காய் நகர்த்தலும் உண்டு. சந்திரபாபு நாயுடு, அமித்ஷா இருவரும் இதில் கூட்டாளியே!

இன்னொரு  செய்தி,” இந்தியாவும் அமெரிக்காவும் அணு ஒப்பந்தம் கையெழுத்திட்ட போது பால் மற்றும் பால் பொருட்கள் அமெரிக்காவிடமிருந்து பெறும் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாக இருந்ததாம். ஆனால் அந்த பாலானது  “மாமிசம் கலந்த மாட்டுத் தீவனத்தைப் போட்டு வளர்த்த பசுக்களின் பால்” என்பது தெரியவந்தது. இது இங்கு பெரிய உணர்வை கிளப்பிவிடும் என்பதால் திட்டத்தையே கைவிட்டுவிட்டோம் என்கிறார் . இந்த நிகழ்வின் போது அருவருப்பான மொழியில் அமெரிக்கா பதில் சொன்னதையும் குறிப்பிட்டுள்ளார். பசு அசைவத்தை சாப்பிடும் எண்ணத்தையே இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் சரத் பவார்.”

[ ஆதாரம் : எனது அரசியல் வாழ்க்கை : அடித்தட்டிலிருந்து அதிகாரத்தின் நுழைவாயில் வரை,ஆசிரியர்: சரத் பவார், தமிழில் : கண்ணையன் தட்சிணாமூர்த்தி ]

ஆயின் ,அப்படிப்பட்ட பசுக்கள் இந்தியாவில் இப்போது இறக்குமதி செய்யப்படுவதில்லை எனச் சொல்ல முடியுமா?

அரசியல் ,பொருளாதார உள்ளடி முயற்சிகளைப் பார்க்காமல் வறட்டு நாத்திகம் பேசிப் பயனில்லை நண்பர்களே ! தோழர்களே!

சுபொஅ.

21/09/24.

Previous Post Next Post

نموذج الاتصال