இனி வரும் தலைமுறைக்கும் இலக்காய்... - சகாய டர்சியூஸ் பீ

 

விடியலின் விதைகளை விதைத்து  

வீழ்ந்த சமூகத்தில் வீரம் ஊட்டி  

சுயமரியாதை எனும் சூரிய ஒளியைப் பரப்பி  

பாமரனின் இதயத்தில் புரட்சித் தடம் பதித்த   

தமிழகத்தின் விடிவெள்ளியின் பிறந்தநாள் இன்று!


மூடநம்பிக்கை முள்வேலி சூழ்ந்த மண்ணிலே  

முரசறைந்தார் பகுத்தறிவின் முழக்கத்தை  

பெண்ணடிமை கண்டு எரிமலையாய்க் கொந்தளித்து   

கோடிக்கணக்கான மனங்களில் விடுதலைத் தீ மூட்டினார்  


சாதியெனும் சாக்கடையை வேரோடு சாய்த்தொழிக்க   

சமத்துவத்தின் சங்கொலியாய் ஒலித்தெழுந்தார்  

அடக்குமுறை அரக்கர்களை அடியோடு அழிக்க   

சமூக நீதியெனும் கைத்தடி ஏந்தினார்   


தந்தை பெரியாரே! தமிழின் தனிப்பெரும் தலைவரே!  

இன்றும் எம் இதயங்களின் இடிமுழக்கமாய்   

இனிவரும் தலைமுறைக்கும் இலக்காய்  

வழிகாட்டுதே உம் படிப்பினைகள் என்றென்றும்    


பெரியாரே! உம் பாதையில் பயணிக்க  

உயிரோட்டமாய் ஊற்றெடுக்குது உம் சிந்தனை  

உறங்கும் மனங்களை உலுக்கிவிடுது உம் குரல்  

நீதிக்காய் நீர் நடத்திய நெடும்போர் இன்றும்  

தொடர்கிறது தமிழகத்தில் உம் கொள்கைகளை ஏந்தியபடி!  


தமிழகமே! விழித்தெழு! தளராதே!  

சமூக நீதி சாத்தியமாகும் வரை  

சளைக்காமல் போராடு, சரித்திரம் படைத்திடு  

தந்தை பெரியார் கனவுகளை நனவாக்கு!  

சமத்துவப் புரட்சியின் சாட்சியாய் நிமிர்ந்து நில்!

Previous Post Next Post

نموذج الاتصال