"முஸ்லிம்களுக்கு எதிராக மக்கள் திசைதிருப்பப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. அமைதியை மட்டுமே விரும்புகிறோம்!" என்ற ஹிமான்ஷி-
பஹல்காம் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட லெப்டினன்ட் வினய் நர்வாலை திருமணம் செய்து ஆறே நாளில் பறிகொடுத்த மனைவி.
'முஸ்லிம்களுக்கு ஆதரவு என்கிறாயா? உன் புருஷன் ராணுவ வீரன் என்றால் எங்களுக்கென்ன ? அவன் செத்தால் எங்களுக்கென்ன?'
அவர்மீது இந்தியா முழுவதும் சமூக ஊடகங்களில் அவதூறுகளைப் பொழிந்தார்கள் ஹிந்துத்துவ வெறியர்கள்!
எப்படி?
'அவள் ஜவஹர்லால் நேரு பல்கலையில் படித்தவள் - அதனால் அவள் புத்தி இடதுசாரிப் புத்தி-
அவளுக்கு ஏராளமான கஷ்மீரி இஸ்லாம் ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்-
கணவனைக் கொன்றதில் அவளுக்கும் பங்கிருக்கிறது - கணவனுடன் பஹல்காம் வருவதை முன்கூட்டியே பயங்கரவாதிகளுக்குத் தெரிவித்து, பஹல்காம் தாக்குதலை நடத்தியவளே அவள்தான் !'
இழிவு செய்தது போதாதென்று, இப்படியும் எழுதிமுடித்தார்கள் :
'ஹிமான்ஷி ஒரு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ கைக்கூலி! புருஷன் செத்ததற்கான நஷ்ட ஈடு வாங்கிக்கொண்டு இந்தியாவை விட்டு ஓடிவிடுவாள் பாருங்கள்!'
🟠
பாஜக வெறியர்களின் ததும்பிவழியும் 'தேசபக்திக்கு' இன்னொரு சாட்சி - பயங்கரவாத தாக்குதலில் தந்தை ராமச்சந்திரனை இழந்த ஆர்த்தி ஆர் மேனன்!
இரண்டு கஷ்மீர் இஸ்லாமிய டாக்ஸி ஓட்டுநர்கள் சகோதரர்களைப் போல தன்னை கவனித்துப் பாதுகாத்ததாக கூறிய ஆர்த்தி,
"எனக்கு காஷ்மீரிலிருந்து இரண்டு சகோதரர்கள் கிடைத்திருப்பதாக அவர்களிடம் சொன்னேன். அல்லாஹ் அவர்களைக் காப்பாற்றுவான் என்றும் அவர்களிடம் சொன்னேன்!"
இப்படி சொன்னதுதான் தாமதம் -
'அவள் மூஞ்சியே சரியில்லை! தேசபக்தி இல்லாத அவலட்சணம் ! ' என்று உருவ கேலி செய்த பாஜக வெறியர்கள்,
'முஸ்லீம் இளைஞர்கள் காப்பாற்றினார்களாம்! அவளின் மதச்சார்பின்மைக்காக அவளுக்கு பாடம் கற்பிக்கவேண்டும்' என்று அச்சுறுத்தினார்கள்.
'ஆர்த்தியின் பெற்றோர் மகள் இல்லாமல் வாழ்வதுதான் நல்லது!' என்று மிரட்டலும் விடுத்தார்கள்.
🟠
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்த கதையாக - நாட்டின் வெளியுறவுச் செயலரையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை!
'இந்தியாவும், பாகிஸ்தானும் அனைத்து வகையான ராணுவ நடவடிக்கைகளையும் மே 10 ஆம் நாள் மாலை 5 மணி முதல் நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டன' என்று வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்ததுதான் காரணம்!
மோடி அரசின் சார்பில்தான் அவர் அந்த அறிவிப்பை வெளியிட்டார் என்கிற அறிவுகூட இல்லாத புத்த்திசாலிகள் -
'போரை நிறுத்தச்சொல்ல இவன் யார்? இவன் ஒரு தேசத்துரோகி! நாட்டுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவன்! ' என்றெல்லாம் ஒரே வசை மழை !
விக்ரம் மிஸ்ரியின் மகளான வழக்கறிஞர் டிடன் மிஸ்ரி - மியான்மர் முஸ்லிம் பழங்குடி மக்களான ரோஹிங்கியா அகதிகளுக்கு சட்ட உதவி வழங்கிய செய்தியை எதிர்மறையாகப் பரப்பி -
'இந்த ஆசாமியின் குடும்பமே நாட்டின் விரோதிகள் - தேசத் துரோகிகள்' என்று வெறுப்பைப் பரப்பினார்கள்.
டிடன் குறித்த தனிப்பட்ட விவரங்களையும் ஆன்லைனில் பகிர்ந்து அவமானப்படுத்தினார்கள்.
தேசிய மகளிர் ஆணையமே கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு எல்லை மீறினார்கள்.
விக்ரம் மிஸ்ரி தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தையே மூட வேண்டிய அவலம் ஏற்பட்டது என்றால்
இந்த மனநோயாளிகள் எவ்வளவு தூரம் சகிக்கமுடியாத கொடூரத் தாக்குதலை செய்திருப்பார்கள்!
யோசித்துப் பாருங்கள்!
🟠
'தேசபக்தி' கூட்டம் அடுத்து ராணுவத்தின்மீதே கைவைத்தது!
தாக்குதலுக்கு ஆளானவர் இந்திய ராணுவ கர்னல் சோபியா குரேஷி!
இழிவுபடுத்தித் தாக்குதல் தொடுத்தவர் குன்வர் விஜய் ஷா !
யாரோ ஊர் பேர் தெரியாத பாஜக ஆசாமி அல்ல - மத்தியப் பிரதேசத்தின் மாண்புமிகு பாஜக அமைச்சர்!
நம் ராணுவ கர்னல் சோபியா குரேஷியை அவர் இப்படிக் குறிப்பிட்டார் :
'பயங்கரவாதிகளின் சகோதரி!' "எங்கள் இந்திய மகள்களை விதவைகளாக்கிய பாகிஸ்தானியர்களுக்கு நாங்கள் அவர்களின் சொந்த சகோதரியையே அனுப்பி பாடம் கற்பித்தோம்!"
என்றார் இந்த மத்தியப் பிரதேச ராஜ வம்சத்து மந்திரி.
நாட்டுக்காக ராணுவத்தில் இணைந்து போராடும் ஓர் இஸ்லாமியப் பெண்ணை - மதத்தைக் குறிப்பிட்டுத் தாக்கிய விஜய் ஷாவின் கருத்துகள்
'சாக்கடைகளின் மொழி' என்று மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் கடுமையாக விமரிசித்திருக்கிறது.
விஜய் ஷா மீது வழக்குத் தொடுக்கவும் உத்தரவிட்டிருக்கிறது !
🟠
மதவெறியர்களின் ஒரே லட்சியம் கண்மூடித்தனமான மதவெறி மட்டும்தான்!
தேசபக்தி என்பது பொய் முகமூடி!