'வெல்லத்' தமிழ்ப் பெண்கள்!
ராஜா ராஜேந்திரன்
முதலமைச்சர் ஸ்டாலின் சூட்டிங் எடுக்கிறார், சினிமாக்காரர்களைக் கொண்டு தன் புகழைப் பாடவைக்கிறார், அது செய்திச் சேனல்களில் ஓசி விளம்பரமாக ஒளிபரப்பப்படுகிறது என்றெல்லாம் ஒப்பாரி வைக்கும் சின்னக் கூட்டத்திற்கு ஒரு சொல்...
எளிய மக்களுக்காகத் திட்டங்களைத் தீட்டி உழைக்கும் யாரும் அதை விளம்பரப் படுத்துவது தவறில்லை என்பதே என் கருத்து. மாறாக, வெறுமனே வாயில் வடை சுட்டுக்கொண்டு, எதுவுமே செய்யாமல் தம்பட்டம் அடிப்பதில் குறியாக இருப்பதைக் காட்டிலும் இது எவ்வளவோ மேல். இந்தியாவிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாய், வழிகாட்டியாய் இருக்கும் ஒரு மாநிலத்துக்கும் அதன் முதலமைச்சருக்கும் இது தன்னடக்கமான நிகழ்வுதான். இதைப் பார்த்தாவது அவர்களும் இப்படிப்பட்ட காரியங்கலைச் செய்து தம்பட்டம் அடித்துக் கொள்ளட்டுமே.
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் விதைத்துக் கொண்டிருக்கும் வீரிய விதைகள் பெருங்காடாகும். காடு மட்டுமே உலகின் ஆயுளை நீட்டிக்கும்!
இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் திகழும் தமிழ்ப் பெண்களின் சிறப்பைக் கூற எடுக்கப்பட்டதே இந்த விழா. டிசம்பர் 12 ஆம் தேதி மூன்று மணிக்குத் தொடங்கிய விழா எட்டு மணிக்கு முடிந்தது. ஐந்து மணி நேரம் தொடர்ச்சியான நிகழ்வு. கோட் சூட் போட்டிருந்தவர்களைத் தவிர மற்றவர்களுக்கு மெல்ல உதறல் எடுக்கும் அளவுக்கு குளிர். அப்படி ஓர் தரமான அரசு அரங்கு அது !
டாக்டர் ஃபரூக் அப்துல்லா அப்படி வந்திருந்ததால் அவருக்கு ஏசி உறுத்தியிருக்காது. அரசின் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த அவர் மிக முக்கியமான புள்ளி விவரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
மக்களைத் தேடி மருத்துவம் என்கிற முதலமைச்சரின் திட்டத்தால் பல லட்சக் கணக்கான பெண்கள் வீட்டிலிருந்தபடியே பல சிகிச்சைகள் அவர்களைத் தேடிப் போய்ச் சேர்வது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. வெறுமனே சுகர், பிரஸர் சோதனைகளோடு நில்லாமல், புற்றுநோய்களுக்கான சிகிச்சைகள்வரை இந்தத் திட்டத்தில் சாத்தியமாகியுள்ளன என எடுத்துரைத்தார். பெண்களின் பிரதான எதிரியான மார்பகப் புற்றுநோய், கருப்பைவாய் புற்றுநோய்க்கான சிகிச்சைகளும், ஆலோசனைகளும், சோதனைகளும், மருந்துகளும் கூட அவர்களுடைய வீடுகளுக்கே போய் அளிக்கப்படுகின்றன, அத்தகைய மருத்துவப் பயனாளர்களின் எண்ணிக்கை இத்தனை இத்தனை லட்சங்கள் என்று அவர் பேசிக் கொண்டிருந்த வேளையில் சரியாக, முதலமைச்சரும், துணை முதலமைச்சர் அவர்களும் அரங்கிற்குள் நுழைவதை பெரிய திரைகளில் காட்டினார்கள். மக்களின் பெரும் ஆராவாரத்தினால் அவர் பேச்சை நிறுத்தினார் !
அவருடைய எழுத்து தரவுகள் நிறைந்து உண்மையின் உரைகல்லாக இருக்கும். இந்தத் துல்லியப் புள்ளிவிவரங்களை அவர் எழுத்தாக்கிவிடுவார் என்பதால் அந்தத் தடை உறுத்தவில்லை !
விழாவிற்கு மிகப் பொருத்தமாக பெண் மெய்காப்பாளர்கள் புடைசூழ, அரங்கிற்குள் வந்தார் முதலமைச்சர் !
விழாவை அர்ச்சனாவும், ஆவுடையப்பனும் தொகுத்து வழங்கினர்.
தமிழ்நாடு அரசு உதவியினாலும், திட்டங்களி னாலும் வென்ற பெண்களை மேடைக்கழைத்து உரையாற்றச் செய்தனர்.
மதுரையில் கிமி வளர்ச்சியைச் சாதித்த திருமதி சுஜாதாவிடம் அதென்ன மதுரை நகரைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என ஆவுடையப்பன் வினவினார்.
விணீபீuக்ஷீணீவீ அங்கு செழிப்பாக ஓடும் க்ஷிணீவீரீணீவீ, மதுரையின் தனித்துவமான விணீறீறீவீரீணீவீ, கறி ஞிஷீsணீவீ ன்னு ஊரே கிமி சிறப்பு ஆயிற்றே, அதனால்தான் என்று அரங்கை கரவோசையால் அதிரச் செய்தார் (கரவோசைலயும் கிமி இருக்கு பாருங்க)
அரசுப் பள்ளியில் படித்து, இன்று இஸ்ரோவில் சூரியனின் வெளிப்புறத்தை ஆராய, இந்தியா சார்பாக அனுப்பப்படவிருக்கும் செயற்கைக் கோளான ஆதித்தியா திட்டத்தின் இயக்குனர், நிகர் சாஜி அவர்கள் மேடையேறினார். அரசுப் பள்ளியில் படித்து, இன்றைய இந்த நிலைக்கு உயர்ந்ததோடு அவர் நின்றுவிடுவில்லை. தன் வளர்ச்சிக்கு காரணமான அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தன் செலவில் சில பள்ளிக் கட்டிடங்கள் கட்டிக் கொடுத்துள்ளார்!
இஸ்ரோவில் பணிபுரியும், குறிப்பாக புகழுச்சியில் இருக்கும், இருந்த பலரும் தமிழ்நாட்டின் அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள். அறிவியலாளர் மயில்சாமி உட்பட!
பெண்களுக்கு வழங்கப்படும் கலைஞர் உரிமைத்தொகை என்ன சாதிக்கிறது என்பதைக் காட்டினர், பேசினர்.
ஒரு பயனாளி நான்கே மாதத்தில் தனக்கு கிட்டிய உரிமைத்தொகை நான்காயிரத்தை எப்படி பத்தாயிரமாக மாற்ற முடிந்தது என்று எந்தப் பூச்சுக்களுமில்லாமல் திறந்த மனத்துடன் வெள்ளிடையாகப் பேசினார். நாட்டுக்கோழிகள், அதுபோட்ட நாட்டுமுட்டைகள், அந்த முட்டைகளை விற்ற இலாபத்தில் வந்த ஆடு அது போட்ட குட்டி...
உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் பல தொழில் முனைவோர்களை தன்னிச்சையாக உருவாக்கி விட்டிருக்கிறார் முதலமைச்சர்!
தன் தந்தை அளித்த பத்து ரூபாய் தன் சுய மரியாதையைக் கூட்டிவிட்டது என்று ஒரு பெண்மணி எஸ்.ரா.விடம் சொன்னதாகப் பேசிய கவிதா, இந்த ஆயிரம் ரூபாய் ஒரு கோடி தமிழ்ப் பெண்களின் சுயமரியாதையை அதிகரித்து, அவர்களின் தன்னம்பிக்கையை கூட்டியுள்ளது என்று தெளிவாக்கினார் !
விடியல் பேருந்து திட்டத்தின் இன்னொரு முகமாக வேலைக்குச் செல்லும் தமிழ்நாட்டுப் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
இதை நீங்கள் உங்களுடைய சித்தாந்த எதிரிகளிடம் உரக்கச் சொல்லுங்கள். இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களில் தமிழ் பெண்களின் எண்ணிக்கை மட்டுமே 50%
இதெல்லாம் திகைப்பான புள்ளிவிவரம். நிச்சயம் ஆணாதிக்க சனாதனி சனியன்களால் சீரணிதுக் கொள்ளவே இயலாது.
ஆனால் அது உண்மையாயிற்றே ?
2021 - 2022 ல் இந்த சராசரி அளவு 42 விழுக்காடு.
அதாவது இந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையில் தமிழ்ப் பெண்களின் அளவு மட்டும் 42℅
விடியல் பயணத் திட்டத்தால் அது இன்று மேலும் 8% அதிகரித்து 50 விழுக்காடு ஆகியுள்ளது !
முதலமைச்சரின் பெண்களுக்கான திட்டமொன்றினால் சாதித்த பெண் ஒருவர் திருப்பரக்குன்ற முருகனிடம் போய் நான் ஜெயிச்சிட்டேன் முருகா என்று உரக்கக் கத்தி தன் நன்றிக்கடனைச் செலுத்தியுள்ளதைச் சொன்னார். மீண்டும் அரங்கு அதிர்ந்தது. அவர் மட்டுமா ஜெயிச்சார்?
திருப்பரக்குன்ற விஷயத்தில் நாமும், அந்த முருகனுமல்லவா ஜெயிச்சார்?
டாக்டர் முத்துலட்சுமி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் போட்ட பாதையில் நடைபயின்ற காமராஜர், அண்ணா, கலைஞர் வரிசையில் ஸ்டாலின்!
பெண்களுக்கானச் சிந்தனைகள், திட்டங்களுக்கானத் துவக்கங்கள் நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டன. நீதிக்கட்சியில் ஆரம்பித்த அவைகளைப் பற்றி இன்றைய இளைஞர்கள் தேடிப் படிக்க வேண்டும் என்றார் புரட்சித் தமிழர் சத்யராஜ்.
பெண்களுக்கு வாக்குரிமை, சொத்துரிமையை இந்தியாவிலேயே முதன்முதலில் தந்தது தமிழ்நாடுதான். வாக்குரிமையை நீதிக்கட்சி கொண்டு வந்தது என்றால் சொத்துரிமையை வழங்கியவர் கலைஞர்!
36 ஆண்டுகளுக்கு முன்பே இதை கலைஞர் சாதித்து விட்டார், இப்போதுதான் பல வட மாநிலங்களில் இதுபற்றியச் சிந்தனைகளே எழ ஆரம்பித்திருக்கிறது!
மணிமேகலையில் கூன், குருடு, செவிடு, பேடு, ஊமை போன்ற மனிதர்களை இழித்துப் பேசும் சொற்களைக் காண முடியாது. தமிழுக்கும், தமிழர்களுக்கும் அத்தகையத் தொன்றுதொட்ட பண்பாடு, கலாச்சாரம் உண்டு. எனவேதான் மாற்றுத் திறனாளி, மருத்துவப் பயனாளர், தூய்மைப் பணியாளர், திருநர், திருநங்கை போன்றச் சொற்களை உருவாக்க முடிந்தது!
எனவேதான் இந்த அரசு இலவசம் என்று சொல்லாமல் விலையில்லா, உரிமைத் தொகை என்றெல்லாம் சொற்களை உருவாக்கி, பயனாளர்களை பண்டைய நம் தமிழ் போலவே மதிக்கின்றது என்றார் இயக்குனர் ஞானவேல்!
நான் இந்த அரசை விமர்சிப்பவன். ஆனால் இப்போது மெய்சிலிர்த்து தோழர் ஸ்டாலின் அவர்களைப் பாராட்ட வந்திருக்கிறேன் என்றார் இயக்குனர் ராஜூ முருகன்.
குழந்தைகளுக்கு பெயர் வைப்பதைப் போல திட்டங்களுக்கு பெயர் வைக்கும் தமிழ்நாடு அரசு என்று விதந்தோதினார் ஆவுடையப்பன். முன்பெல்லாம் தமிழக அரசு என்று பேசி வந்த தமக்கு அந்த அரசியல் புரிந்துபோனதால், ஒருமுறை கூட அப்படிச் சொல்லாமல் தமிழ்நாடு அரசு என்றே சொல்வதாக அழகுறச் சொன்னார்!
எங்களுடையப் பெயர்களுக்குப் பின்னால் தமிழ்நாடு முளைத்ததற்கும் அதுதான் காரணம். இந்தியா என்று நமக்கு ஒரு நாடுதான். ஆனால் இவர்கள் தமிழ்நாடு என்று அதற்கு பெயரிட்டு, பிரிவினை எண்ணத்தை உரமிட்டு வளர்க்கின்றனர் என நூலர்கள் பிதற்றியபோது உறைத்தது, இனி ஒருபோதும் தமிழகம் என்றோ, முதல்வர் என்றோ, மத்திய அரசு என்றோ எழுதவேக் கூடாது என்று!
ஈழமகள் சாரா தனக்கான நலன்களைப் புரிந்த தன் அப்பாவுக்காக எம்ராய்டரி செய்த துணி ஒன்றைக் கொண்டு வந்ததாகவும், அதை இங்கு பரிசளிக்க விழைவதாகவும் சொன்னார். முதலமைச்சரிடம் அதை வழங்கி ஆசியும், வாழ்த்தும் பெற்றார்!
சாதித்த தமிழ்ப்பெண்கள் மேடையேறிய போது கிபீபீவீtவீஷீஸீணீறீ சிலீவீமீயீ ஷிமீநீக்ஷீமீtணீக்ஷீஹ் அமுதா மிகிஷி அவர்களுமிருந்தார். உண்மையில் அமுதா தமிழ்நாட்டின் வைரம். ஆட்சி துவங்கியபோது ஸ்டாலினுடன் நிர்வாகத்தில் பங்கேற்றவர் இன்றுவரை செவ்வனே அதைத் தொடர்கிறார். அவரால்தான் பல நல்ல திட்டங்கள் உருவாகின்றன, அதைவிட முக்கியமான ஒன்று அது தடைபடாமல் தொடர்ந்து செயல்படுகின்றன!
முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பொதுமக்களைச் சந்திக்கும் போது அவர்களுடையக் குறைகளை உன்னிப்பாகக் கவனித்து கேட்கின்றனர். அதனால்தான் பல நல்ல மக்கள் திட்டங்கள், இந்தியாவுக்கே முன்னோடியாய் இங்கு உருவாகின் றன என விளக்கினார் அமுதா!
இந்த நிகழ்ச்சியை வடிவமைத்து அதை வெற்றிகர மாக்கியதிலும் அவர் பங்கு அளப்பரியதாக இருந்தது. விழா அரங்கில் அவர் பம்பரமாய் சுழன்றதை நேரில் காண வாய்த்தது. அந்த ஆற்றலுக்கான வயது 30 க்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. நீடூழி வாழ்க அமுதா மிகிஷி!
மேலும் 17 இலட்சம் மகளிருக்கான உரிமைத் தொகையை அதிகரித்து ஒட்டுமொத்தமாக ஒரு கோடியே 30 லட்சம் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் என உரிமைத் தொகையை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். அதாவது மாதம் பிறந்தால் 1300 கோடிகளை இந்த ஒரு திட்டத்திற்காக மட்டும் நிதியை ஒதுக்க வேண்டும்.
நேற்றுவரை, ஒரு கோடியே 13 இலட்சம் பெண்களுக்கு 27000 ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இது தொடக்கம்தான், இதே தொகைதான் நீடிக்கும் என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள், அதிகரிக்கும் என்றார் முதலமைச்சர்!
தமிழ்ப் பெண்கள் ஒன்றை மனத்தில் ஏற்றிக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டைப் பார்த்து இதர பல மாநிலங்களில் இத்தகையத் தொகைகளை அளித்தாலும் அதில் பல குளறுபடிகள் நிகழ்ந்து சில மாதங்களிலேயே அவை நின்றுவிட்டன. ஊழல்கள் பெருகி பெண்கள் பெயரில் போலிக் கணக்குகளைத் துவக்கி ஆண்கள் கூட இத்தொகையைச் சுருட்டியது கண்டு, திகைத்து, உள்ளதும் போச்சுடா நாலுகோடி நாகேந்திரா என்று அனைவருக்கும் அது நிறுத்தப்பட்டிருக்கிறது!
எனவே விளங்காத கூமுட்டை தலைவர்கள் சிலர் தாங்கள் வந்து 3000 தருவேன், 5000 தருவேன்னு உருட்டினா மயங்கிடாதீங்க. வாயால் வடை சுடுவது, கற்பனையில் கோட்டை கட்டுவதெல்லாம் எளிது. நிதி நிர்வாகத்தை எப்படி செயல்படுத்துவது என்பது அரிய செயல். அது கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும்தான் வாய்த்திருக்கிறது!
ஜெயலலிதா 2016ல் அனைவருக்கும் மொபைல் தருகிறேன் என்றார், பெண்களுக்கு ஸ்கூட்டி தருகிறேன் என்றார், எதையுமே கொடுக்கவில்லை, கொடுக்க முயற்சிக்கவும் இல்லை. கலைஞர் கலர் டிவியைக் கொடுத்ததைப் பார்த்து காழ்ப்பில் இந்தம்மா கொடுத்த டேபிள் ஃபேன், கிரைண்டர், மிக்ஸி லட்சணம் உலகறிந்தது. அதெல்லாம் அருகிலிருக்கும் அதிகாரிகளின் ஒத்துழைப்போடு நடைபெற வேண்டும்!
அந்தம்மாவுக்கு அதிகாரிகளை மதிக்கத் தெரியாது. எடப்பாடியானுக்கு அதிகாரி யாரென்றே தெரியாது. அதிகாரி பாட்டுக்குச் சுட்டுப் போட்டுட்டு, டிவியைப் பார் பிரேக்கிங் நியூஸ் வரும்ன்னு சொல்லிட்டு போயீருவான்!
ஸ்டாலினை நம்புங்கள். ஸ்டாலினை மட்டும் நம்புங்கள்!
விழாமேடையில், முதலமைச்சர், துணை முதலமைச்சர், தலைமைச் செயலாளர் இவர்களோடு மேலும் இரண்டு பெண்கள் மட்டுமே இருந்தனர். அதில் ஒருவர் இளம்பெண் துளசிமதி. இன்னொருவர் 100 வயதைக் கடந்த விடுதலைப் போராட்ட வீரர் கிருஷ்ணம்மாள். மகாத்மா காந்தியோடு போராட்டங்களில் பங்கேற்ற வீராங்கனை. கலைஞரோடு நல்ல அறிமுகம் கொண்டவர். வினோபாவே உடன் களப்பணி ஆற்றி, நிலக்கிழார் களிடம் இருந்து நிலங்களைத் தானமாகப் பெற்று, வறியவர்களுக்கு வழங்கியவர்!
அப்படி தானமளிக்கும் போது பத்திரப்பதிவுச் செலவை கூட நிலத்தைப் பெறுபவர்களால் தர முடியாத நிலை. முதலமைச்சராக இருந்த கலைஞரைச் சந்தித்த இவர் இதை விளக்குகிறார். உடனடியாக இத்தகையத் தானப் பதிவுகளுக்கு பத்திரப்பதிவு இலவசம் என அதிரடி உத்தரவைப் பிறப்பிக்கிறார் கலைஞர்.
சுற்றி இருந்த அதிகாரிகள் பதறுகின்றனர். பெரும் நிதிச்சுமை விளையலாம் என அச்சுறுத்துகின்றனர்.
கலைஞர் விக்ரம் படத்தில் கமல் சொன்னதைத் தான் அவர்களுக்குச் சொல்லியிருப்பார் என நான் சொல்லத் தேவையில்லை!
இப்ப கிருஷ்ணம்மாளுடைய மகள் டர்ன்.
மகளும் அம்மாவைப் போலவே சமூகச் சேவகர்.
கொரோனா காலத்தில் சிமென்ட் தொழிற்சாலை கள் அத்தனையும் முடங்கி பெரும் தட்டுப்பாடு. ஒரு முக்கியமான கட்டிடத்தை முடிக்க சிமெண்ட் அவசியம். முதலமைச்சராக இருந்த நம் ஸ்டாலினிடம் முறையிடுகிறார். நெய்வேலியிலிருந்து சிமெண்டிற்கான மூலப் பொருட்களை வரவழைத்து அந்தக் கட்டிட வெளியிலேயே சிமெண்ட் உற்பத்தியைச் செய்ய வைத்திருக்கிறார் முதலமைச்சர்!
இதையெல்லாம் கிருஷ்ணம்மாள் சார்பாக பேச வந்த அவருடைய மகள்தான் வாசித்தார். தன் தாயால் இந்த வயதிலும் அருட்பெருஞ்ஜோதி பாடலை பாட முடியுமெனச் சொல்லி அவரைப் பாட வைத்தார்!
இந்த வயதில் ஒலித்த அந்தத் துல்லியமான குரல் அருகிலமர்ந்திருந்த ஸ்டாலினை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது !
மாற்றுத் திறனாளியான துளசிமதி பாரா ஒலிம்பிக்கில் பல பதக்கங்களை வென்ற மாபெரும் சாதனையாளர். இந்தியாவின் பெருமை. அவருடைய பேச்சையும் வியந்து ரசித்தார் முதலமைச்சர்.
கடவுளிடம் வேண்டி ஆண் குழந்தையைப் பெறலாம். ஆனால் கடவுளே வந்து குழந்தையாகப் பிறப்பதென்றால் அது பெண்குழந்தை !
ஞிஷீ ஷீக்ஷீ ஞிவீமீ ஐ நேரடியாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஞிஷீ தீமீயீஷீக்ஷீமீ ஹ்ஷீu ஞிவீமீ, இதுதான் உண்மை.
இப்படி ஒரு சின்னப் பொண்ணு இத்தனை தன்னம்பிக்கையுடன் பேசினால் யாருக்குத்தான் பிடிக்காது ?
தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அனைவருமே இப்படி தெளிவாக, துணிவாக, மிகுந்த நம்பிக்கையோடு, வெளிப்படையாக இருக்க, சாதிக்க ஒரே காரணம் உதயநிதி. அவர் விளையாட்டுத்துறைக்கு அமைச்சரான பின் அந்தத் துறை புதுக்கோலம் பூண்டிருக்கிறது!
பெண்கள் அனைவரும் அப்பாவை நம்ப, இளைஞர்கள் ஒட்டுமொத்தமாக மகனை விரும்புகின்றனர்! •
https://drive.google.com/file/d/1cXoAKx4YspmrEd1caYZX3DoBkdU-al-f/view?usp=sharing

